Tilak Varma Latest Injury Update: இந்திய கிரிக்கெட் அணி கடந்த டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்கா அணியுடன் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடியது. அதில் ஒருநாள் மற்றும் டி20 தொடரை இந்தியா வென்றது. இதையடுத்து இம்மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட இருக்கிறது. இதனை முடித்த கையோடு அடுத்த மாதம் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கு பயிற்சி ஆட்டமாகவே நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் உலகக் கோப்பைனான இந்திய அணி மோத உள்ளது. இதனை ஒரு பயிற்சி ஆட்டமாக பார்க்கப்படுகிறது.
Add Zee News as a Preferred Source
Tilak Varma Injury: நட்சத்திர வீரர் திலக் வர்மா திடீர் காயம்
இந்த சூழலில், டி20 இந்திய அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய அணிக்காக மிடில் ஆர்டரில் களமிறங்கி கலக்கும் இவர் காயத்தால் அவதிபட்டது அதிர்ச்சி மற்றும் இவர் டி20 உலகக் கோப்பையில் விளையாடாமல் போனால் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என ரசிகர்கள் தெரிவிக்கின்றன.
Tilak Varma Undergoes Surgery: திலக் வர்மாவுக்கு அறுவை சிகிச்சை
திலக் வர்மா தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபி உள்ளூர் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்தார். இந்த சூழலில்தான் நேற்று (ஜனவரி 08) திலக் வர்மாவுக்கு திடீரென காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. அதன் காரணமாக உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று பார்த்ததில், வயிற்று பகுதியில் ஏதோ பிரச்சனை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவர் அதற்கான சிகிச்சை இருந்து வருகிறார்.அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும் அதில் இருந்து குணமடைய ஒரு மாத காலம் ஆகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
India vs New Zealand: நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகளில் விளையாட மாட்டார்
இதன் காரணமாக திலக் வர்மா பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில், திலக் வர்மா நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகளில் மூன்றில் விளையாட மாட்டார் என்றும் மீதமுள்ள 2 போட்டிகளில் விளையாடுவாரா மாட்டாரா என்பது பின்னர் தெரிவிக்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
Tilak Varma update: வேகமாக களத்திற்கு திரும்புவேன்
இந்த நிலையில், உங்களுக்கு தெரிந்ததை விட நான் விரைவாக குணமடைந்து வருவேன் என்று நம்பிக்கையாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ”அன்பை கொடுக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள். தற்போது குணமடையும் பயணத்தில் இருக்கிறேன். உங்களுக்கு தெரிந்ததை விட நான் வேகமாக களத்திற்கு திரும்புவேன்” என புகைப்படத்துடன் கூடிய ஸ்டோரியை பதிவிட்டுள்ளார். அவர் கூறுவதை பார்த்தால், அவர் விரைவில் குணமடைந்து டி20 உலகக் கோப்பைக்கு திரும்புவார் என்பதை மறைமுகமாக கூறி உள்ளார்.
India Squad For T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சகரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்.
About the Author
R Balaji