சென்னை: மன்னாா் வளைகுடா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று கடலூா், அரியலூா், மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுடன், இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்டும் விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வடகிழக்கு இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு – வடமேற்கு […]