Parasakthi: "அதற்குப் பிறகுதான் அப்பாவைப் பற்றிய கேள்விகள் குறைந்திருக்கின்றன" – ப்ரித்வி ராஜன்

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. படத்தில் வரும் புறநானூறு படையில் முக்கிய நபராக ப்ரித்வி ராஜின் கதாபாத்திரம் அமைந்திருக்கும்.

பராசக்தி
பராசக்தி

நடிப்பிலும் அவருக்குக் கொடுத்த பணியையும் செவ்வனே செய்திருக்கிறார். ‘ப்ளூ ஸ்டார்’ படம் அவருக்கு ஏற்படுத்தித் தந்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படத்திற்கும் அவருக்குப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.

நம்மிடையே பேசிய ப்ரித்வி பாண்டியராஜ், “நான் சுதா கொங்கரா மேமின் பெரிய ரசிகன். அவருடைய ‘இறுதிச்சுற்று’, ‘சூரரைப் போற்று’ படங்களெல்லாம் எனக்கு அவ்வளவு ஃபேவரிட். அவங்களோட டைரக்ஷன்ல நடிக்கிற ஆசை, இப்போ நடந்திருக்கு.

முதல்ல, இந்தப் படத்துல சூர்யா சார் நடிக்கிறதாக இருந்தபோதே நான் ஆடிஷன் கொடுத்திருந்தேன். பிறகு எந்தவொரு ரிப்ளையும் அங்கிருந்து சொல்லல.

பிறகு, ‘ப்ளூ ஸ்டார்’ ரிலீஸுக்குப் பிறகு எனக்கு விஷ் பண்ணினாங்க! சிவா சார் படத்துக்குள்ள வந்ததுக்குப் பிறகு எனக்கு மறுபடியும் கால் வந்தது.

அங்கிருந்துதான் ‘பராசக்தி’ படத்திற்கான பயணம் தொடங்குச்சு. என்னுடைய கதாபாத்திரம், எஸ்.கே சார்கூடவே ட்ராவல் செய்யும்.

Prithvi Pandiarajan - Parasakthi
Prithvi Pandiarajan – Parasakthi

புரட்சிகளைச் செய்யும் என்னுடைய கேரக்டர் வசனங்களை டிரெய்லர்ல பார்த்துட்டு நிறைய பாராட்டுகள் கொடுக்கத் தொடங்கிட்டாங்க.” என்றவர், “‘பராசக்தி’ படத்தின் களமே ரொம்ப புதிதானது. ஏன்னா, 80ஸ் பற்றிய படங்கள்ல, பீரியட் உணர்வை திரையில முழுமையாகக் கொண்டு வர ஒப்பனை, உடைகள்னு பணிகள் செய்வாங்க.

ஆனா, 60-கள்ல பெல்பாட்டம் பேண்ட்கூட கிடையாது. என்னுடைய தோற்றமும் சுதா மேமுக்கு ரொம்ப பிடிச்சிருச்சு. அதே சமயம், நான் ஒப்பனை துளியும் செய்துவிடக் கூடாதுனு சுதா மேம் சொல்லிட்டாங்க. மீசையும் மெல்லியதாக வச்சிருந்தேன்.

இப்படியான லுக்ல இருக்கும்போது, நான் தனுஷ் – விக்னேஷ் ராஜா படத்துல நடிச்சிட்டிருந்தேன். ரெண்டு பக்கங்களிலும் என்னுடைய தோற்றத்தைக் கவனிப்பது என்பது கொஞ்சம் சவாலாகத்தான் இருந்துச்சு.” என்றார்.

“இந்தப் படத்துக்கான டப்பிங் பணிகளுக்குப் பெரிய உழைப்புகள் நான் கொடுத்தேன். மதுரை வட்டார வழக்கு பேசச் சொன்னாங்க.

மதுரைனு சொன்னதும் ‘வந்தாய்ங்க, போனாய்ங்க’ என்பது மாதிரியான உச்சரிப்புதான் இருக்குனு நினைப்பாங்க.

ஆனா, என்னுடைய வசன உச்சரிப்புல அந்த வட்டார வழக்கின் கச்சிதம் இருக்கணும்னு எனக்கு சொல்லிட்டாங்க. அப்படித்தான் டப்பிங் ப்ராசஸ் முடிவடைஞ்சது.

Prithvi Pandiarajan - Parasakthi
Prithvi Pandiarajan – Parasakthi

இந்தப் படத்துல எஸ்.கே சாரோட இணைந்து டான்ஸ் ஆடுனதுல அவ்வளவு சந்தோஷம். ஸ்ரீ லீலாவோட நடனத்துக்கு நானும் என் தம்பியும் பெரிய ஃபேன். அதை அவங்களிடமும் சொல்லியிருந்தேன்.

இந்தப் படத்திலும் எனக்கு அதிகமான காம்பினேஷன் காட்சிகள் ஸ்ரீ லீலாவோடதான் இருந்தன.

அவங்களும் ரொம்ப ஸ்வீட்! சுதா மேம் நினைச்சு நான் முதல்ல பயந்தேன். ஆனா, எங்களை ரொம்ப நல்லா பார்த்துகிட்டாங்க.

அதே சமயம், வேலைனு வந்துட்டா மேம் ரொம்ப ஸ்ட்ரிக்ட்! நடிப்பிலும் ரொம்ப பெர்பெக்ஷன் எதிர்பார்ப்பாங்க.

எத்தனை டேக் எடுத்தாலும், பொறுமையாக அது சரியாக வரணும்னு அவங்க நினைப்பாங்க” என்றவர், “ஸ்டார் கிட்ஸ்னு ஈஸியாக மட்டம் தட்டுவாங்க.

Prithvi Pandiarajan - Parasakthi
Prithvi Pandiarajan – Parasakthi

ஆனா, அதுக்குப் பின்னாடியும் பயங்கரமான உழைப்பு இருக்கும். நானும் சாந்தனுவும் இத்தனை வருடம் அதற்காக உழைத்தோம். சாந்தனு ஒவ்வொரு படத்திற்காகவும் ரொம்ப மெனகெட்டு உழைப்பாரு.

சொல்லப்போனால், ‘ப்ளூ ஸ்டார்’ படத்தோட ரிலீஸுக்குப் பிறகுதான் என்னுடைய அப்பாவைப் பற்றிய கேள்விகள் குறைச்சிருக்கு.

அதுக்கு முன்பு வரை 30 நிமிட பேட்டிகள்ல 20 நிமிட என்னுடைய அப்பாவைப் பத்திதான் பேசுவாங்க. அது இப்போ மாறியிருக்கிறது. இந்த 20 வருடத்துல என்னுடைய சின்ன சாதனையாகப் பார்க்கிறேன்” எனக் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.