Rohit Sharma – Gautam Gambhir: இந்திய கிரிக்கெட் அணியில் பயிற்சியாளராக கவுதம் கம்பீரும் தேர்வு குழு தலைவராக அஜித் அகர்கரும் வந்த பின்னர் நிறைய அதிர்ச்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்தன. 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின்னர் இந்திய அணி ஐசிசி தொடர்களில் வெற்றியை காணமலேயே இருந்தது. இந்த சூழலில், விராட் கோலிக்கு பின்னர் கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி என அடுத்தடுத்த ஐசிசி வெற்றியை இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்தார்.
Add Zee News as a Preferred Source
Rohit Sharma Captaincy: ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நிக்கம்
இந்த சூழலில், தான் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி சுப்மன் கில்லை கேப்டனாக்கினர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கடந்த மே மாதம் ஓய்வை அறிவித்தார் ரோகித் சர்மா. இது அவரை சுற்று இருந்த அழுத்தத்தால் எடுக்கப்பட்ட முடிவு என கூறப்படுகிறது. இதையடுத்து சுப்மன் கில் டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த விவகாரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. முன்னாள் வீரர்கள் பலர் இந்திய அணியின் தேர்வுக்குழு மற்றும் கம்பீர் மீது விமர்சனங்களை முன் வைத்தனர்.
இந்த நிலையில், முன்னாள் வீரர் மனோஜ் திவாரி, ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு கம்பீர் தான் காரணம் என்றும் ஆனால் அந்த பழியை அகர்கர் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Ajit Agarkar: அஜித் அகர்கர் அப்படிபட்டவர் இல்லை
இது தொடர்பாக பேசிய அவர், தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் பற்றி எனக்கு தெரியும். அவர் முடிவுகளை திறம்பட எடுக்கக்கூடியவர். அவர் இப்படியான முடிவுகளுக்கு ஆதரவளிக்க மாட்டார். இந்த முடிவை அவர் எடுப்பதற்கு பின்னர் யாரோ இருக்கிறார்கள். அவர் இந்த முடிவை எடுத்துபோல் தெரியலாம். ஆனால் திரைக்கு பின்னர் நிறைய விஷயங்கள் நடந்திருக்கின்றன. கண்டிப்பாக பயிற்சியாளரின் தலையீடு இருக்கும்.
Manoj Tiwary: கிரிக்கெட் பார்க்கும் ஆர்வமே போய்விட்டது
நீங்கள் தனிப்பட்ட முடிவை எடுக்க முடியாது. எடுக்கப்படும் முடிவுகளுக்கு இருவருமே சமமாக பொறுப்புடையவர்கள். தற்போதெல்லாம், இந்திய அணியின் பிளேயிங் 11ல் கூட ஒரு நிலையற்ற தன்மை தெரிகிறது. இதனாலேயே எனக்கு ஒருநாள் போட்டிகளை பார்ப்பதற்கான ஆர்வமே போய்விட்டது.
Gambhir and Ajit Agarkar insulted Rohit Sharma: ரோகித் சர்மாவை அவமதித்த கம்பீர், அஜித் அகர்கர்
ரோகித் சர்மாவுடன் நான் விளையாடி உள்ளேன். 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்று கொடுத்தவரை கேப்டன்சியில் இருந்து நீக்கி உள்ளீர்கள். அது அவசியமற்றது. உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார். அப்படியான ஒருவரை நீங்கள் அவமதித்ததாக நான் கருதுகிறேன். 2023 உலகக் கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு அன்று அதிர்ஷ்டமான நாளாக அமைந்துவிட்டது. இல்லையென்றால் அதை வென்றிருப்பார் ரோகித் சர்மா.
2027 ODI World Cup: 2027 உலகக் கோப்பையில் விளையாடுவாரா?
கேப்டன்சியில் தன்னை நிரூபித்த ரோகித் சர்மா தற்போது 2027 உலகக் கோப்பையில் விளையாடுவாரா என்ற சந்தேகிக்கின்ற அளவிற்கு நீங்கள் சூழ்நிலையை கொண்டு சென்றுள்ளீர்கள் என மனோஜ் திவாரி மிகவும் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
About the Author
R Balaji