சென்னை: கோவளம் நெம்மேலி நன்னீர்த் தேக்கத் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இந்த திட்டம் அந்த பகுதிகளில் வசித்து வரும், 16 கிராம மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பலிகொடுத்து உருவாக்கப்படும் இந்த நன்னீர்த் தேக்கம், சூழலியல் மீட்டுருவாக்கத்திற்குப் பதிலாக அழிவுக்கே இட்டுச்செல்லும் என குற்றம் சாட்டி உள்ளார். சென்னையை அடுத்த கோவளம் நெம்மேலி பகுதியில், சென்னையின் குடிநீர் தேவைக்கான 6வது நீர்த்தேக்கத்தை தமிழ்நாடுஅரசு அமைக்கிறது. ‘மாமல்லன் […]