டி20 உலகக் கோப்பை.. இந்தியா பிளேயிங் 11ல் இஷான் கிஷனுக்கு இடம் கிடைக்குமா? முழு விவரம்

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் விளையாடும் இந்திய அணிதான் டி20 உலகக் கோப்பை தொடரிலும் விளையாடும். இந்திய அணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இடம் பிடித்துள்ளார் இஷான் கிஷன். தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக பிளேயிங் 11ல் இடம் அளிக்கப்பட்டுள்ளது. 

Add Zee News as a Preferred Source

Ishan Kishan Batting In NZ T20: அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 

முதல் போட்டியில் சொதப்பினாலும், இரண்டாவது போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னை நிரூபித்து உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்த நிலையில், அதன்பின் களமிறங்கிய இஷான் கிஷன் இந்திய அணிக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்தார். 

பொதுவாகவே அதிரடியான பாணியை கொண்ட இஷான் கிஷன் இந்திய அணி இரண்டு விக்கெட் இழந்த நிலையிலும், தைரியமாக பயமின்றி அதிரடியான அட்டத்தை விளையாடி வேகமாக ரன்களை சேர்த்தார். அவர் 32 பந்துகளில் 72 ரன்களை குவித்தார். இது இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்த இந்திய அணிக்கு பெரிதும் உதவியது. 

Will Ishan Kishan get a place in India playing 11 for the T20 World Cup: டி20 உலகக் கோப்பை பிளேயிங் 11ல் இடம் கிடைக்குமா? 

தற்போது இந்திய அணியில் தலக் வர்மா காயத்தால் விலகி இருப்பதனாலேயே இஷான் கிஷன் அவரது இடத்தில் களமிறங்கி விளையாடுகிறார். இது ஒரு அருமையான வாய்ப்பாக பார்த்த இஷான் கிஷன் தன்னை நிரூபித்து, உலகக் கோப்பையில் இந்திய அணியின் பிளேயிங் 11ல் ஒரு அச்சாரத்தை போட்டிருக்கிறார். ஒருவேளை முதல் போட்டியில் சொதப்பியது போல், இரண்டாவது போட்டியிலும் சொதப்பி இருந்தால் அவருக்கு நிச்சயம் மூன்றாவது டி20 போட்டியில் இடம் கிடைத்திருக்காது. தற்போது வரும் போட்டிகளிலும் அவர் விளையாடும் வாய்ப்பை உருவாக்கிவிட்டார். 

Ishan Kishan: நியூசிலாந்து போட்டிகளில் கலக்கினால் இடம் உறுதி 

இன்னும் வரும் போட்டிகளில் அவர் ரன்கள் குவிக்கும் நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய பிளேயிங் லெவனிலும் இடம் பிடிப்பார். குறிப்பாக திலக் வர்மா காயத்தில் இருந்து மீண்டு வராமல் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகினால், இஷான் கிஷானுக்கான இடம் உறுதியாகிவிடும் என்பது சந்தேகம் இல்லை. ஆனால் அதற்கு அவர் நிச்சயமாக வரும் போட்டிகளில் சிறப்பான அட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இல்லையென்றால் கடினம்தான். 

India Squad For T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி 

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சகரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்.

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.