புதுடெல்லி,
குடியரசு தினத்தையொட்டி, போர்களில் நாட்டுக்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவுகூறும் வகையில், டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் முப்படைகளின் தளபதிகள் வரவேற்றனர்.
போர் வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் கலந்துகொள்கிறார். அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியை பார்வையிட உள்ளார்.