தமிழ்நாட்டில் ஒருகாலத்தில் காண்டாமிருகங்கள் (Rhinoceros) வாழ்ந்ததற்கான முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது. கோவைக்கு அருகே உள்ள மொளபாளையம் என்ற நியோலிதிக் (புதிய கற்காலத் தொல்லியல் தளம்) இடத்தில், சுமார் 3,500 ஆண்டுகள் பழமையான இந்திய காண்டாமிருகத்தின் எலும்புத் துண்டுகள் தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2021 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடந்த அகழ்வாராய்ச்சிகளில், மொத்தம் 28 வகையான விலங்குகளின் எலும்புகள் கிடைத்துள்ளன. அதில், காண்டாமிருகத்தின் கால்பகுதியைச் சேர்ந்த நான்கு எலும்புத் துண்டுகள் (இரண்டு மெட்டாகார்பல், இரண்டு கார்பல் எலும்புகள்) அடையாளம் […]