மஹிந்திரா விற்பனை அறிக்கை நிலவரம் FY23-24 | Automobile Tamilan

பிரசத்தி பெற்ற யூட்டிலிட்டி வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா 2023-2024 நிதியாண்டில் ஒட்டுமொத்த பயணிகள் வாகன விற்பனை  4,59,877 யூனிட்டுகளாக பதிவு செய்துள்ளது. இது முந்தைய 2022-2023 ஆம் நிதியாண்டை விட 28 % வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2022-2023 விற்பனையில் 3,59,253 யூனிட்டுகளை பதிவு செய்திருந்தது. ஆனால் ஏற்றுமதி சந்தையில் 23 % இழப்பை சந்தித்து 24,663 யூனிட்டுகளை மட்டுமே ஏற்றுமதி சந்தையில் விற்பனை செய்துள்ளது. வர்த்தக விற்பனையில் 2024 நிதியாண்டில், 2,62,810 யூனிட்களாக இருந்தது, இது … Read more

குறைந்த விலை 2024 கியா செல்டோஸ் ஆட்டோமேட்டிக் வெளியானது | Automobile Tamilan

கியா வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான செல்டோஸ் காரில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள HTK மற்றும் HTK+ வேரியண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான ஆப்ஷனிலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றதாக வந்துள்ளது. புதிய செல்டோஸ் HTK+ பெட்ரோல்-சிவிடியின் விலை ரூ.15.40 லட்சமாகவும், செல்டோஸ் HTK+ டீசல் ஆட்டோமேட்டிக் விலை ரூ.16.90 லட்சமாகவும் உள்ளது. கூடுதலாக துவக்க நிலை HTE வேரியண்டில் 5 நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. 2024 கியா செல்டோஸ் பெற்ற மாற்றங்கள் பின் வருமாறு;- துவக்க … Read more

Ola Electric – எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் சாதனை படைத்த ஓலா

இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஓலா எலக்ட்ரிக் 2023-2024 ஆம் நிதியாண்டில் மொத்தத்தில் 3,28,785 யூனிட்களை விற்பனை செய்து, 115% வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த 2022-2023 நிதியாண்டில் மொத்த விற்பனை எண்ணிக்கை 1,52,741 ஆக பதிவு செய்திருந்தது. மேலும் கடந்த மார்ச் 2024 மாத விற்பனையில் முதன்முறையாக 53,000 விற்பனை எண்ணிக்கையை பெற்றுள்ளது. அதிகப்படியான வாடிக்கையாளர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வரிசையில் தற்பொழுது ஓலா S1X, S1X+, ஓலா S1 ஏர், மற்றும் டாப் … Read more

இந்தியாவில் 48 % வளர்ச்சி டொயோட்டா கார் விற்பனை நிலவரம் FY’24 | Automobile Tamilan

டொயோட்டா க்ரிலோஷ்கர் மோட்டார் நிறுவனம் FY23-24 வருடத்தில் 48 % வளர்ச்சியை பெற்று 2,63,512 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. முந்தைய 2023 ஆம் நிதியாண்டில் 1,77,683 யூனிட்டுகளை மட்டும் டெலிவரி வழங்கியிருந்தது. இந்நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை பெரும்பாலும் இன்னோவா க்ரிஸ்டா, இன்னோவா ஹைகிராஸ், ஃபார்ச்சூனர், அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ரூமியன் மற்றும் ஹைலக்ஸ் போன்ற மாடல்களை உள்ளடக்கிய எஸ்யூவி மற்றும் எம்பிவிகளிடம் இருந்து பெற்றுள்ளது. இந்நிறுவனம் மாதாந்திர மொத்த விற்பனையை 2024 மார்ச் மாதத்தில் 27,180 டெலிவரி … Read more

6 % வளர்ச்சியில் டாடா மோட்டார்ஸ் விற்பனை நிலவரம் FY23-24 | Automobile Tamilan

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக FY23-24ல் 5,73,495 ஆக பதிவு செய்து முந்தைய நிதியாண்டை விட 6 % வளர்ச்சி அடைந்துள்ளது. 2022-2023 ஆம் ஆண்டில் 5,41,087 யூனிட்டுகளாக பதிவு செய்திருந்தது. மார்ச் 2024 மாதாந்திர விற்பனை 50,297 பயணிகள் வாகனங்களை விற்றது, மார்ச் 2023 இல் விற்பனை செய்யப்பட்ட 44,225 யூனிட்களுடன் ஒப்பிடுகையில், 14 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. மேலும் ஏற்றுமதி எண்ணிக்கை 187 ஆக உயர்ந்துள்ளது. டாடா மோட்டார்சின் … Read more

21 லட்சம் கார்களை விற்பனை செய்த மாருதி சுசூகி – FY2023-2024

இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி FY2023-2024 ஆம் நிதியாண்டில் சுமார் 21,35,323 வாகனங்களை விற்பனை செய்து முந்தைய FY22-23 ஆண்டை விட 8.6 % வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த FY23-24 ஆண்டில் 17.59 லட்சம் பயணிகள் வாகனங்கள் மற்றும் 33,763 இலகுரக வர்த்தக வாகனம் அத்துடன் டொயோட்டா நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்ட 58,612 வாகனங்கள் மற்றும் சர்வதேசஅளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட 2.83 லட்சம் வாகனங்கள் என ஒட்டு மொத்தமாக 21,35,323 யூனிட்கள் விற்பனையாகிள்ளது.  … Read more

விலை உயர்வுடன் 6 ஏர்பேக்குகளை இணைத்த ஹோண்டா கார்ஸ்

ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் அமேஸ், சிட்டி மற்றும் எலிவேட் எஸ்யூவி மாடல்களின் விலை உயர்த்தப்பட்டிருப்பதுடன், 6 ஏர்பேக்குகள் மற்றும் 5 இருக்கைகளுக்கும் சீட்பெல்ட் ரிமைண்டர் இணைக்கப்படுள்ளது. குறிப்பாக ஆரம்ப நிலை ஹோண்டா அமேஸ் செடானில் 6 ஏர்பேக்குகள் இணைக்கப்பட்டிருப்பதுடன் துவக்க நிலை E வேரியண்ட் நீக்கப்பட்டு S மற்றும் VX வேரியண்டுகள் மட்டுமே கிடைக்கின்றது. 1.2 லிட்டர்  i-VTEC எஞ்சினை பெறுகின்ற இந்த மாடலில் மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. அமேசின் ஆரம்ப விலை … Read more

ஏப்ரல் 3 ஆம் தேதி டொயோட்டா Taisor அறிமுகமாகிறது

மாருதி ஃபிரான்க்ஸ் அடிப்படையில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட டொயோட்டா டைசோர் க்ராஸ்ஓவர் காரின் அறிமுக தேதியை உறுதி செய்து முதல் டீசர் வெளியிடப்பட்டுளதால் விற்பனைக்கு நடப்பு மாத இறுதியில் கிடைக்க துவங்கலாம். மிக அமோகமாக வரவேற்பினை பெற்ற பலேனோ (டொயோட்டா கிளான்ஸா) அடிப்படையில் மாருதி சுசூகி தயாரித்துள்ள Fronx காரில் இருந்து மாறுபட்ட முகப்பு கிரில் உட்பட புதிய அலாய் வீல், இன்டிரியர் உள்ளிட்ட பகுதிகளில் என சிறிய அளவிலான மாற்றங்கள் பெற்றதாக டைசோர் அமைந்திருக்கலாம். தற்பொழுது வரை … Read more

Skoda Superb: இந்தியா வரவிருக்கும் ஸ்கோடா சூப்பர்ப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஸ்கோடா ஆட்டோவின் சூப்பர்ப் செடான் ரக மாடல் முழுதாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட்டு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் கிடைக்க உள்ளது. சூப்பர்ப் காரின் ஆடம்பரமான வசதிகளை பெற்ற டாப் L&K வேரியண்டில் 2.0 லிட்டர் பொருத்தப்பட்டு டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 188 BHP பவர் மற்றும் 320 Nm டார்க் உற்பத்தி செய்கின்றது. இதில் 7 வேக டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது. 0-100 கிமீ … Read more

Ather Rizta Escooter pre-bookings open – ஏத்தர் ரிஸ்டா இ-ஸ்கூட்டருக்கு முன்பதிவு துவங்கியது

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதால் கட்டணமாக ரூ.999 ஆக வசூலிக்கப்படுகின்றது. இந்த ஸ்கூட்டர் மாடலில் இரு விதமான பேட்டரி ஆப்ஷனும் பெற வாய்ப்புள்ளது. மிகப்பெரிய இருக்கை, 400 மிமீ தண்ணீரில் பயணிக்கின்ற வீடியோ மற்றும் பேட்டரியை 40 அடி பள்ளத்தில் வீசி சோதனை செய்யப்பட்ட காட்சிகள் என ரிஸ்டா வருகை குறித்து தொடர்பாக பல்வேறு டீசர்களை ஏத்தர் வெளியிட்டு வரும் நிலையில் முன்பாக … Read more