ஹூண்டாய் க்ரெட்டா எலக்ட்ரிக் காரின் சோதனை ஓட்ட படங்கள் – Automobile Tamilan

இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற எஸ்யூவிகளில் ஒன்றான க்ரெட்டா எலக்ட்ரிக் மாடலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வரும் ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் நடப்பு ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியிடலாம். க்ரெட்டா இவி காரில் 45 kWh மற்றும் 60 kWh பேட்டரி பேக் என இரு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றதாக எதிர்பார்க்கப்படுகின்ற மாடல் 400 கிமீ முதல் 600 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தலாம். இந்திய சந்தையில் க்ரெட்டா … Read more

Lexus LM 350h – ₹ 2 கோடியில் லெக்சஸ் LM 350h விற்பனைக்கு அறிமுகமானது – Automobile Tamilan

இந்திய சந்தையில் லெக்சஸ் வெளியிட்ட பிரீமியம் எம்பிவி மாடலாக LM 350h ஆனது 4 மற்றும் 7 இருக்கை என இரு விதமான வேரியண்டில் உயர்தரமான பாதுகாப்பு கட்டுமானத்துடன் ஆடம்பர சொகுசு கப்பலை போன்ற வசதிகளை பெற்றதாக உள்ளது. விற்பனையில் கிடைக்கின்ற டொயோட்டாவின் வெல்ஃபயர் எம்பிவி மாடலின் GA-K பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள லெக்சஸ் LM 350h காரின் நீளம் 5,130 மிமீ, 1,890 மிமீ அகலம் மற்றும் 1,945 மிமீ உயரம் கொண்டுள்ளது. ரூ.2 கோடியில் … Read more

ஃபிரான்க்ஸ் அடிப்படையில் டொயோட்டா டைசர் காரின் அறிமுக விபரம்

வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி மாருதி சுசூகியின் ஃபிரான்க்ஸ் கிராஸ்ஓவர் ரக மாடலின் அடிப்படையில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் (Toyota Urban Cruiser Taisor) மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. சந்தையில் அமோக வரவேற்பினை பெற்ற பலேனோ அடிப்படையிலான க்ராஸ்ஓவர் ரக ஃபிரான்க்ஸ் தொடர்ந்து சிறப்பான வரவேற்பினை பெற்று விற்பனைக்கு வந்த 10 மாதங்களுக்குள் 1 லட்சம் இலக்கை கடந்து சாதனை படைத்திருந்தது. டொயோட்டா டைசர் காரில் இரு விதமான எஞ்சின் பெறுவது … Read more

எலக்ட்ரிக் வாகன இறக்குமதிக்கு 15 % வரி சலுகை அறிவிப்பு

இந்தியாவில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற மின்சார கார்களுக்கு 15 % வரை வரி சலுகை குறிப்பட்ட சில நிபந்தனைகளுக்கு உட்பட்ட அனுமதி வழங்கி இந்திய அரசு புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் டெஸ்லா, வின்ஃபாஸ்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் பலனடையும் மேலும் ஃபோர்டு இந்தியா புதிய முதலீடு திட்டங்களை அறிவிக்கும் பட்சத்தில் இந்நிறுவனமும் பயன் பெறலாம். முக்கிய நிபந்தனைகள் உள்ளூர் உற்பத்தி திறனை அதிகரிக்க அடுத்த 3 ஆண்டுகளுக்குள் குறைந்தபட்ச தொகையாக ரூ.4,150 கோடி … Read more

Electric Scooter Price hike – எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பைக்குகளின் விலை 10 % வரை உயருகின்றதா..!

ICRA வெளியிட்டுள்ள புதிய Electric Mobility Promotion Scheme 2024 விதிகளின் படி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளின் விலை 10 % வரை உயருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தற்பொழுது இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற FAME 2 மானியம் மார்ச் 31 ஆம் தேதி நிறைவடைகின்றது. எலக்ட்ரிக் மொபிலிட்டி ஊக்குவிப்பு திட்டம் சில மாதங்களுக்கு முன்னர் மானியம் குறைக்கப்பட்ட பொழுது ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை உயர்த்தப்பட்டது தற்பொழுது இந்தியாவின் கடன் மதிப்பீட்டு … Read more

புதிய யெஸ்டி ரோட்ஸ்டெர் பைக்கின் படங்கள் வெளியானது

கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவன யெஸ்டி பிராண்டில் புதிய ரோட்ஸ்டெர் ரெட்ரோ ஸ்டைலை பெற்ற மோட்டார்சைக்கிள் மாடல் சமீபத்தில் நடைபெற்ற ஜாவா யெஸ்டி டீலர் நிகழ்வின் மூலம் இணையத்தில் கசிந்துள்ளது. தற்பொழுது விற்பனையில் உள்ள யெஸ்டி அட்வென்ச்சர் பைக்கில் இடம்பெற்றுள்ள 334cc லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு ஒற்றை எக்ஸ்ஹாஸ்ட் கொண்டதாக அமைந்திருக்கின்றது. சமீபத்தில் வெளியான ஜாவா 350 பைக்கில் உள்ளதை போல பவர் சற்று குறைவாக இருக்கலாம். வட்ட வடிவ ஹெட்லைட் யூனிட் பெற்று மிக நேர்த்தியான … Read more

ஸ்கோடா எபிக் எலக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகமானது

400 கிமீ ரேஞ்ச் வழங்கும் வகையில் தயாரிக்கப்பட உள்ள ஸ்கோடா எபிக் (Epiq BEV) எலக்ட்ரிக் எஸ்யூவி காரினை ஐரோப்பா சந்தையில் 2025 ஆம் ஆண்டு வெளியிடப்பட உள்ளது. மாசு உமிழ்வு இல்லா 6 மாடல்களை 2026க்குள் வெளியிட ஸ்கோடாவின் பட்டியிலில் ஒன்றாக எபிக்கும் விளங்க உள்ளது. 4100 மிமீ நீளம் கொண்டுள்ள எலக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் ஆனது BEV மாடலாக விற்பனைக்கு வரும் பொழுது 2600 மிமீ வீல்பேஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகின்ற இந்த மாடல் … Read more

இரண்டு எஸ்யூவிகளை வெளியிட தயாராகும் எம்ஜி மோட்டார்

வரும் மார்ச்  20 ஆம் தேதி எம்ஜி மற்றும் ஜேஎஸ்டபிள்யூ கூட்டணியில் உருவாக உள்ள மாடல்கள் மற்றும் எதிர்கால தயாரிப்பு திட்டங்கள் பற்றி முக்கிய தகவல்கள் வெளியிடப்பட உள்ள நிலையில் நடப்பு 2024ல் எம்ஜி நிறுவனம் புதிய குளோஸ்டெர் மற்றும் Excelor EV என இரண்டு மாடல்களை வெளியிட திட்டமிட்டிருக்கின்றது. Table of Contents Toggle 2024 MG Gloster MG Excelor EV 2024 MG Gloster பிரீமியம் சந்தையில் உள்ள மேம்படுத்தப்பட்ட குளோஸ்டெர் எஸ்யூவி … Read more

2025ல் வரவுள்ள டாடா பஞ்ச் எஸ்யூவி சோதனை ஓட்டம் துவங்கியது

இந்தியாவின் 4 மீட்டருக்கு குறைவான நீளம் பெற்ற எஸ்யூவிகளில் பிரபலமாக உள்ள டாடா மோட்டார்சின் பஞ்ச் எஸ்யூவி மாடலின் மேம்படுத்தப்பட்ட டிசைன் கொண்ட 2025 ஆம் ஆண்டிற்கான மாடலின் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற படங்கள் இணையத்தில் முதன்முறையாக வெளியாகியுள்ளது. தற்பொழுது விற்பனையில் கிடைத்து வருகின்ற பஞ்ச் இவி காரின் அடிப்படையிலான டிசைன் உந்துதலை தழுவியதாக எதிர்பார்க்கப்படுகின்ற புதிய பஞ்சில் முன்பக்க கிரில் மற்றும் பம்பர் மாற்றியமைக்கப்பட்டிருக்கலாம். புதுப்பிக்கப்பட்ட எல்இடி ஹெட்லைட் உடன் எல்இடி ரன்னிங் பார் … Read more

2025 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ தேதி வெளியீடு

இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் கண்காட்சி ஆக உருவெடுத்துள்ள பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 ஆம் ஆண்டிற்கான தேதி ஜனவரி 17 முதல் ஜனவரி 22 வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக நடைபெற உள்ள கண்காட்சி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபம் (புது டெல்லி), யஷோபூமி இந்தியா இன்டர்நேஷனல் கன்வென்ஷன் மற்றும் எக்ஸ்போ சென்டர் (துவாரகா, டெல்லி NCR) மற்றும் இந்தியா எக்ஸ்போ சென்டர் & மார்ட் (கிரேட்டர் நொய்டா) ஆகிய … Read more