குறைந்த விலையில் ஆட்டோமேட்டிக் கார் வாங்கலாமா ? – Affordable automatic cars under 7-8 lakhs

நடப்பு 2024 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள கார்களில் போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ற குறைந்த விலை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்ற சிறந்த பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் கார் மாடல்களின் என்ஜின் (பேட்டரி) விபரம், மைலேஜ், முக்கிய அம்சங்கள் மற்றும் விலை என அனைத்தும் அறிந்து கொள்ளலாம். இங்கே தொகுக்கப்பட்டுள்ள பட்டியல் குறைந்த விலை என்பதனை கடந்து பாதுகாப்பு தரத்தையும் மற்றும் வசதிகளும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இந்த கட்டுரையை துவங்குவதற்கு முன்பாக நாம் ஒன்றை தெரிந்து … Read more

Mitsubishi SUV : இந்தியாவில் மீண்டும் மிட்சுபிஷி கார் விற்பனைக்கு அறிமுகமா..?

டிவிஎஸ் மற்றும் மிட்சுபிஷி மோட்டாருக்கு இடையில் ஏற்பட்டுள்ள கூட்டணி மூலம் டிவிஎஸ் மொபைலிட்டி பிரிவின் 32 சதவீத பங்குகளை ஜப்பானிய நிறுவனம் 300 கோடி மதிப்பில் வாங்க உள்ளது.  இந்த முதலீட்டின் மூலம் நாடு முழுவதும் மொபைலிட்டி தேவைகளை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. TVSVMS இந்தியாவின் முன்னணி வாகன டீலர்களில் ஒன்றாக விளங்குகின்றது. இந்நிறுவனம் ஹோண்டா, ரெனால்ட், அசோக் லேலண்ட் மற்றும் மஹிந்திரா உள்ளிட்ட பல வாகன உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படும் வணிக மற்றும் பயணிகள் வாகனங்களின் … Read more

Qargos F9 Cargo Escooter : சரக்கு போக்குவரத்துக்கு ஏற்ற கார்கோஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

புனேவை தலைமையிடமாக கொண்ட கார்கோஸ் (Qargos) ஸ்டார்ட்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய F9 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் அதிகபட்சமாக 120 கிலோ சுமை தாங்கும் திறனுடன் 225 லிட்டர்  கொள்ளளவு கொண்ட கார்கோ பாக்ஸ் முன்பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்தவுடனே பலருக்கு நினவுக்கு வருகின்ற முன்பக்கத்தில் ஐஸ்பெட்டி வைத்து ஐஸ் வியாபரம் செய்யும் சைக்கிள்களை பார்த்திருக்கலாம். அந்த வடிவமைப்பினை அடிப்படையாக கொண்ட மாடர்ன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்தான்…! பல்வேறு சரக்குகளை எடுத்துச் செல்ல ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ள Qargos … Read more

XUV300: போட்டியாளர்களுக்கு சவால் விடுக்குமா.! 2024 மஹிந்திரா எக்ஸ்யூவி 300

காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் மஹிந்திராவின் புதுப்பிக்கப்பட்ட 2024 எக்ஸ்யூவி 300 மாடல் அடுத்த சில வாரங்களுக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் முக்கிய மாற்றங்கள் மற்றும் வசதிகள் குறித்தான தகவலை அறிந்து கொள்ளலாம். 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் கிடைக்கின்ற பிரசத்தி பெற்ற டாடா நெக்ஸான், கியா சொனெட், ஹூண்டாய் வென்யூ, நிசான் மேக்னைட், ரெனால்ட் கிகர் மற்றும் மாருதி சுசூகி பிரெஸ்ஸா ஆகியவற்றுக்கு சவால் விடுக்கும் வகையில் எக்ஸ்யூவி 300 … Read more

Kawasaki Eliminator 400: கூடுதல் வசதிகளுடன் 2024 கவாஸாகி எலிமினேட்டர் 400 அறிமுகம்

ஜப்பானில் வெளியிடப்பட்டுள்ள புதிய கவாஸாகி எலிமினேட்டர் 400 பைக்கில் கூடுதலாக நிற மாற்றங்களை பெற்று கூடுதல் வசதிகள் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு மார்ச் 2024 ஜப்பானிலும், மற்ற நாடுகளில் அடுத்த சில மாதங்களுக்கு பிறகு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய 398சிசி பேரலல் ட்வின் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. 10,000ஆர்பிஎம்-ல் 48bhp பவரையும், 8,000ஆர்பிஎம்-ல் 37 Nm டார்க்கை உற்பத்தி செய்வதுடன் ஆறு வேக கியர்பாக்ஸுடன்  மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச்சை 2024 கவாஸாகி எலிமினேட்டர் … Read more

Bajaj Pulsar NS160 : 2024 பஜாஜ் பல்சர் என்எஸ்160 பைக்கின் முக்கிய அம்சங்கள்

பஜாஜ் ஆட்டோ தனது மாடல்களுக்கு ரைட் கனெக்ட் ஆப் வசதியை வழங்கி வரும் நிலையில் பல்சர் NS160 பைக்கின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடலில் புதிய எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் கன்சோல் கொண்டதாக வந்துள்ளது. மற்றபடி, அடிப்படையான மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றங்களும் இல்லை. புதிதாக இணைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் கன்சோல் மூலம் ஸ்மார்ட்போனை ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் பொழுது ஸ்மார்ட்போனின் மொபைல் சிக்னல், எஸ்எம்எஸ் அலர்ட், அழைப்புகளை ஏற்க அல்லது நிராகரிக்கும் வசதியை பல்சர் என்எஸ்160 பைக் … Read more

Mahindra Bolero Maxx pikup : ஏசி கேபினுடன் மஹிந்திராவின் பொலிரோ மேக்ஸ் பிக்கப் டிரக் வெளியானது

இந்தியாவின் முன்னணி சிறிய வர்த்தக வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா வெளியிட்டுள்ள புதிய பொலிரோ மேக்ஸ் பிக்கப் டிரக்கில் ஏசி கேபின் மற்றும் கூடுதலாக 14 ஐமேக்ஸ் கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்று ரூ.8.49 லட்சம் முதல் ரூ.11.22 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படுள்ளது. 1.3 டன், 1.4 டன், 1.7 டன மற்றும் 2 டன் வரையில் சுமார் 7 வகைகளில் சிட்டி மற்றும் HD என இரு பிரிவில் 3050 mm நீளம் கொண்ட சுமை தாங்கும் … Read more

Hyundai Creta: 5 நிமிடத்திற்கு ஒரு கிரெட்டா என வெற்றிகரமாக 10,00,000 வாகனங்களை விற்ற ஹூண்டாய்

2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா தற்பொழுது 10,00,000 இலக்கை வெற்றிகரமாக கடந்து நடுத்தர எஸ்யூவி சந்தையில் முதன்மையான மாடலாக விளங்கி வருகின்றது.  இந்தியாவில் தயாரிக்கப்பட்டு 2,80,000 யூனிட்டுகள் ஏற்றுமதி சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட 8 ஆண்டுகளில் அமோகமான வரவேற்பினை பெற்றுள்ள கிரெட்டா விற்பனை எண்ணிக்கை மாதந்தோறும் 12,000 கூடுதலான யூனிட்டுகளை விற்பனை செய்தி வருகின்றது. ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் 1 கிரெட்டா என விற்கப்படுகிறது. விற்பனை சாதனை … Read more

Vida Escooter: ரூ.1 லட்சத்துக்கும் குறைந்த விலை ஹீரோ வீடா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக விபரம்

ஹீரோ மோட்டோகார்ப் கீழ் செயல்படுகின்ற வீடா புதிதாக இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பட்ஜெட் விலையில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த மாடல் குறைந்த விலையில் கிடைக்கின்ற போட்டியாளர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்திருக்கலாம். நாம் முன்பே ஹீரோ வோர்ல்டு 2024 தொடர்பாக பல்வேறு பிரத்தியேக தகவல்களை வெளியிட்டிருந்த நிலையில் வீடா பேட்டரி ஸ்கூட்டர் தொடர்பில் இரண்டு மாடல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களுக்கு ஹீரோ மோட்டோகார்ப் பகிர்ந்த தகவலின் மூலம் இரண்டு பேட்டரி ஸ்கூட்டரும் ரூ. 80,000 … Read more

ரெட்ரோ ஸ்போர்ட்டிவ் 2024 கவாஸாகி Z650RS விற்பனைக்கு அறிமுகமானது

கவாஸாகி நிறுவனம் இந்திய சந்தையில் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய Z650RS பைக்கின் விலை ரூ.6.99 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 67bhp பவரை வழங்கும் 649சிசி பேரலல் ட்வீன் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. கவாஸாகி Z650RS பைக்கில் இடம்பெற்றுள்ள 649cc பேரலல்-ட்வின் எஞ்சின் 67bhp அதிகபட்ச பவர் 64Nm உச்ச டார்க்கை உற்பத்தி செய்கின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் கொண்டுள்ளது. ரைடருக்கு கூடுதல் பாதுகாப்பினை வழங்க 2-மோட் டிராக்ஷன் கன்ட்ரோல் … Read more