Hyundai Creta – 2024 ஹூண்டாய் கிரெட்டாவின் இன்டிரியர் படங்கள் வெளியானது

ஹூண்டாய் நிறுவனம் புதிய கிரெட்டா எஸ்யூவி காரை 16 ஜனவரி 2024 ஆம் தேதி வெளியிட உள்ள நிலையில் டீலர்களுக்கு அனுப்ப துவங்கியுள்ளதால் பல்வேறு படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வகையில் இன்டிரியர் தொடர்பான படங்களும் கிடைத்துள்ளது. இந்திய சந்தையில் 8 ஆண்டுகளாக கிரெட்டா எஸ்யூவி அமோக வரவேற்பினை பெற்று லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. 2024 Hyundai Creta interior 2024 ஆம் ஆண்டிற்கான கிரெட்டா மாடல் தொடர்பான இன்டிரியர் படங்களை அதிகார்ப்பூர்வமாக ஹூண்டாய் வெளியிட்டிருந்த பொழுதும் புதிய … Read more

₹ 15.49 லட்சத்தில் 2024 Mahindra XUV400 புரோ விற்பனைக்கு வெளியானது

மஹிந்திரா நிறுவனத்தின் XUV400 புரோ எலக்ட்ரிக் எஸ்யூவி 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் ரூ.15.49 லட்சம் முதல் ரூ.17.49 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட புதப்பிக்கப்பட்ட வசதிகளுடன் கூடுதலான அம்சங்களை பெற்றுள்ளது. XUV400 புரோ காரில் தற்பொழுது  34.5 kWh பேட்டரி பெற்ற ஆரம்பநிலையிலும் பல்வேறு கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதவிர டாப் வேரியண்டில் 39.4 kWh பேட்டரி உள்ளது. 2024 Mahindra XUV400 Pro புதிய XUV400 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் … Read more

2024 பஜாஜ் சேட்டக் vs ஏதெர் 450S vs டிவிஎஸ் ஐக்யூப் Vs ஓலா S1 ஏர் – ஒப்பீடு

பஜாஜ் ஆட்டோ வெளியிட்ட 2024 சேட்டக் உட்பட இந்திய சந்தையில் கிடைக்கின்ற ஏதெர் 450S vs டிவிஎஸ் ஐக்யூப் Vs ஓலா S1 ஏர் உள்ளிட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் ஒப்பீடு செய்து பல்வேறு முக்கிய தகவல்களை அறிந்து கொள்வதனால் இலகுவாக மின் ஸ்கூட்டரை தேர்ந்தெடுக்கலாம். குறிப்பாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டும் ஒப்பீடுவதற்கான காரணம் இந்தியாவின் விற்பனையில் முதல் நான்கு இடங்களை கைப்பற்றி 80 % கூடுதலான சந்தை மதிப்பினை இந்நிறுவனங்கள் கொண்டுள்ளது. 2024 Bajaj Chetak … Read more

Hero Mavrick spied – ஹீரோ மேவரிக் 440 பைக்கின் ஸ்பை படங்கள் வெளியானது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய 440சிசி என்ஜின் பெற்ற மேவரிக் பைக்கின் சாலை சோதனை ஓட்ட படங்கள் தற்பொழுது கிடைத்துள்ளது. ரோட்ஸ்டெர் ஸ்டைலை சார்ந்த வடிவமைப்பினை பெற்று X440 பைக்கிலிருந்து முற்றிலும் வித்தியாசப்படும் வகையிலான தோற்றத்தை கொண்டுள்ளது. முன்பே ஹீரோ தனது வலைதளத்தில் அறிமுக தேதியை ஜனவரி 23 என உறுதிப்படுத்தியிருந்த நிலையில் மேவரிக் என்ற பெயரையும் குறிப்பிட்டிருந்தது. Hero Mavrick Spied ஹார்லி-டேவிட்சன் X440 பைக்கின் என்ஜினை பகிர்ந்து கொள்ளும் இந்த மாடல் 440cc ஏர் … Read more

Ather 450S escooter Price dropped – ஏதெர் 450S எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.20,000 குறைந்தது

ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் 450S எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டு, தற்பொழுது விலை ரூ.1.10 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மாடலில்  2.9Kwh லித்தியம் ஐயன் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஏதெர் நிறுவனம் 10வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு 450 ஏபெக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.1.89 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Ather 450S Escooter குறைந்த விலையில் கிடைக்கின்ற ஏதெர் 450S ஸ்கூட்டர் மாடலில் 2.9 Kwh லித்தியம் ஐயன் பேட்டரி பொருத்தப்பட்டு … Read more

2024 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி வெளியானது

வரும் 16 ஜனவரி 2024 விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள 2024 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி காரின் படங்கள் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் புதுப்பிக்கப்பட்ட கிரெட்டாவில் மூன்று விதமான என்ஜின் கொண்டுள்ளது. கிரெட்டா எஸ்யூவி காரில்  E, EX, S, S(O), SX, SX Tech, மற்றும் SX(O) மொத்தமாக 7 விதமான வேரியண்ட் அடிப்படையில் வரவுள்ளது. 2024 Hyundai Creta SUV இந்திய சந்தையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியிடப்பட்ட கிரெட்டா எஸ்யூவி தற்பொழுது வரை … Read more

வின்ஃபாஸ்ட் VF3 எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியா வருமா ? – CES 2024

தமிழ்நாட்டில் ரூ.16,000 கோடி முதலீட்டை மேற்கொள்ளும் வின்ஃபாஸ்ட் ஆட்டோ நிறுவனம் CES 2024 அரங்கில் VF3 எலெக்ட்ரிக் மினி எஸ்யூவி மற்றும் VF வைல்ட் எலக்ட்ரிக் பிக்கப் டிரக் கான்செப்ட் ஆகியவற்றை அறிமுகம் செய்து காட்சிப்படுத்தியுள்ளது. 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் துவங்கப்பட உள்ள வின்பாஸ்ட் நிறுவனம் முதற்கட்டமாக ரூ.4000 கோடியில் ஒருங்கிணைந்த பேட்டரி மற்றும் வாகன தயாரிப்பு ஆலையை 2024 ஆம் ஆண்டு இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டு திறக்க … Read more

Triumph Daytona 660 – டிரையம்ப் டேடோனா 660 அறிமுகம்., இந்தியா வருமா ?

டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் வெளியிட்டுள்ள பேரிங் ஸ்டைல் பெற்ற புதிய டேடோனா 660 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் 2024 ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே சந்தையில் உள்ள ட்ரைடென்ட் 660 அடிப்படையில் என்ஜினை பகிர்ந்து கொண்டாலும் கூடுதல் பவர் மற்றும் டார்க் வெளிப்படுத்துகின்ற ஸ்போர்ட்டிவ் டேடோனா 660 இங்கிலாந்து சந்தையில் 8,595 பவுண்ட் (ரூ. 9.09 லட்சம்) ஆக விலை அறிவிக்கப்பட்டுள்ளது. Triumph Daytona 660 புதிதாக வந்துள்ள ஸ்போர்ட்டிவ் ஃபேரிங் பேனல் … Read more

புதிய கியா சொனெட் விற்பனைக்கு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகின்றது

கியா அறிமுகம் செய்துள்ள புதிய சொனெட் எஸ்யூவி காரின் விலை விபரம் முழுமையாக ஜனவரி 12 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. முந்தைய மாடலை விட பல்வேறு வகையில் மேம்பட்டு கூடுதல் வசதிகளை பெற்றதாக வரவுள்ளது. 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள எஸ்யூவி ரக மாடல்களுக்கு சவால் விடுக்கின்ற வகையில் அமைந்துள்ள சொனெட் காரில் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் கொண்டுள்ளது. 2024 கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் 2024 கியா சொனெட் காரில் … Read more

2024 யமஹா FZ சீரிஸ் விற்பனைக்கு வெளியானது

150சிசி சந்தையில் உள்ள இந்தியாவின் பிரபலமாக உள்ள யமஹா FZ சீரிஸ் வரிசையில் இடம்பெற்றுள்ள FZ-S FI Ver 4.0 DLX, FZ-S FI Ver 3.0, FZ FI Ver 3.0, மற்றும் FZ-X ஆகியவற்றை விற்பனைக்கு புதிய நிறங்களை மட்டும் பெற்றதாக வந்துள்ளது. ரெட்ரோ ஸ்டைல் பெற்ற FZ-X இரண்டு நிறங்களையும், FZ-S FI Ver 4.0 DLX அடிப்படையில் ரேசிங் ப்ளூ, மேட் பிளாக் & மெஜஸ்டி ரெட் என மூன்று நிறங்களை … Read more