2024 பஜாஜ் பல்சர் என்160 பைக்கில் யூஎஸ்டி ஃபோர்க் அறிமுகம்

ஏபிஎஸ் ரைடிங் மோடு, அப்சைடு டவுன் ஃபோர்க் உடன் வெளியிடப்பட்டுள்ள பஜாஜ் ஆட்டோவின் 2024 பல்சர் N160 மோட்டார்சைக்கிள் ரூ.1.40 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த மாடலில் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் உடன் கூடிய ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப்ஷனை பெற்றுள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்ற மாடலை விட மேம்பட்ட சஸ்பென்ஷனை வெளியிப்படுத்துகின்ற வகையில் கோல்டன் நிறத்திலான USD ஃபோர்க் ஆனது வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி, பின்புறத்தில் தொடர்ந்து மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகின்றது. … Read more

BNCAP கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற டாடா நெக்ஸான்.இவி

டாடா மோட்டார்சின் 2 எலக்ட்ரிக் கார்களுக்கான பாரத் NCAP சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதில் இரண்டு மாடல்களும் அதாவது நெக்ஸான்.இவி மற்றும் பஞ்ச்.இவி என இரண்டும் தற்பொழுது 5 ஸ்டார் மதிப்பீடு பெற்றுள்ளன. Tata Nexon.ev Crash Test இந்தியாவின் அதிகாரப்பூர்வ BNCAP சோதனையானது முதன்முறையாக சஃபாரி மற்றும் ஹாரியர் கார்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற நிலையில் தற்போது முதல் முறையாக எலக்ட்ரிக் வாகனங்களின் விபரமானது சோதனை செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற … Read more

2040க்குள் ICE இருசக்கர வாகனங்களை நீக்கும் ஹோண்டா

உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் ஒன்றான ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் 2040 ஆம் ஆண்டுக்குள் ICE வாகனங்களை முழுமையாக நீக்குவதற்கான திட்டத்தை செயல்படுத்த துவங்கி உள்ளது. பரவலாக பல்வேறு நாடுகளும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க துவங்கியுள்ள நிலையில் ICE பெற்ற வாகனங்கள் பரவலாக விடைபெற தொடங்கி விட்டன இந்த நிலையில் தனது போர்ட்ஃபோலியோவில் உள்ள அனைத்து மாடல்களையும் மின்சார வாகனங்களாக மாற்றுவதற்கு 2040 ஆம் ஆண்டுக்குள் இலக்கினை இந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. முதற்கட்டமாக … Read more

பஞ்ச்.இவி காரின் கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் வழங்கிய BNCAP

இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்சின் பஞ்ச்.இவி காரினை பாரத் NCAP கிராஷ் டெஸ்டில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட முடிவில் வயது வந்தோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு என இரண்டிலும் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. பார்த் கிராஷ் டெஸ்டில் சோதனை செய்யப்பட்ட நெக்ஸான்.இவி போல பஞ்ச் எலக்ட்ரிக் காரும், அதிகபட்சமாக வயது வந்தோருக்கான பாதுகாப்பில் 32 புள்ளிகளை பெறுவதற்கு 29.86 புள்ளிகளை பெற்று 5 நட்சத்திரம் மதிப்பீட்டை வயது வந்தோர் பிரிவில் நெக்ஸானது பெற்றிருக்கின்றது … Read more

ஆப்பிள் கார் பிளே புதிய மேம்பாடுகளின் சிறப்பு அம்சங்கள் என்ன..!

முற்றிலும் புதுப்பிக்கபட்ட பல்வேறு நவீன தலைமுறை அம்சங்களை ஆதரிக்கவும், கார் தயாரிப்பாளர்களுக்கு ஏற்ற கஸ்டமைஸ் வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய ஆப்பிள் கார் பிளே ஓஎஸ் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் போர்ஷே மற்றும் ஆஸ்டன் மார்டின் கார்களில் முதற்கட்டமாக இடம்பெற உள்ளது. முதன்முறையாக 2014 ஆம் ஆண்டு ஃபெராரி FF காரில் முதன்முறையாக வந்த கார் பிளே சிஸ்டம் இப்பொழுது அகலமான திரை, பல்வேறு நவீன அம்சங்கள் என விரிவடைந்து வாடிக்கையாளர்களுக்கு பலதரப்பட்ட … Read more

110சிசி ஹோண்டா பைக்குகளின் விலை மற்றும் சிறப்புகள்

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பைக் தயாரிப்பாளராக உள்ள ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) விற்பனை செய்து வருகின்ற CD110 ட்ரீம் டீலக்ஸ் மற்றும் லிவோ 110 என இரண்டு 110cc பைக்குகளின் சிறப்பு அம்சங்கள் மற்றும் ஆன் ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம். 2024 Honda Livo ஸ்டைலிஷான தோற்ற அமைப்பினை பெற்றுள்ள லிவோ 110 பைக்கில் ப்ளூ, பிளாக் மற்றும் மேட் கரிஸ்ட் என மூன்று விதமான நிறங்களை கொண்டு … Read more

ரூ.1.70 லட்சம் வரை விலை குறைக்கப்பட்ட ஜீப் காம்பஸ் எஸ்யூவி

இந்தியாவில் ஜீப் காம்பஸ் எஸ்யூவி விலை துவக்க நிலை Sport வேரியண்ட் ரூபாய் ஒரு லட்சத்து 70 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற வேரியண்டுகள் ரூபாய் 14 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளன. காம்பஸ் எஸ்யூவி காரில் தற்போது 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. 170 HP பவரை வழங்குகின்ற இந்த எஞ்சின் ஆனது ஆறு வேகம் மேனுவல் மற்றும் ஒன்பது வேக ஆட்டோமேட்டிக் கன்வெர்ட்டர் கியர் பாக்ஸை கொண்டு இருக்கின்றது. காம்பசில் … Read more

ரூ.30,000 வரை விலை உயர்த்தப்பட்ட எம்ஜி ஹெக்டர், ஹெக்டர் பிளஸ்

எம்ஜி மோட்டாரின் பிரசத்தி பெற்ற ஹெக்டர் மற்றும் 6 அல்லது 7 இருக்கை கொண்ட ஹெக்டர் பிளஸ் எஸ்யூவி மாடலின் விலையை ரூ.17,000 முதல் ரூ.30,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், ஹெக்டரின் துவக்க நிலை ஸ்டைல் வேரியண்டின் விலையில் மாற்றமில்லாமல் ரூ.13.99 லட்சத்தில் துவங்குகின்றது. இரு மாடல்களிலும் 143hp, 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. 6-ஸ்பீடு மேனுல் மட்டுமே பெற்றுள்ள 170hp, 2.0-லிட்டர் டீசல் எஞ்சினும் உள்ளது. எம்ஜி ஹெக்டர் … Read more

₹ 29.50 லட்சத்தில் நியூ ஹாலண்ட் வொர்க்மாஸ்டர் 105 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது

100+HP பிரிவில் இந்தியாவில் பாரத் TREM-IV அடிப்படையில் தயாரிக்கப்பட்டு ரூ.29.50 லட்சம் விலையில் நியூ ஹாலண்ட் வொர்க்மாஸ்டர் 105 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகப்படுத்தபட்டுள்ளது. CNH  கீழ் செயல்படுகின்ற நியூ ஹாலண்ட் நிறுவனத்தின் வொர்க்மாஸ்டர் டிராக்டரில் உள்ள சக்திவாய்ந்த என்ஜின் அதிகபட்சமாக 106 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் நிலையில், மிக குறைந்த பராமரிப்பை உறுதி செய்யும் வகையில் 600 மணி நேரத்துக்கு ஒரு தடவை ஆயில் மாற்றும் வகையில் உள்ள 3.4 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஆல் வீல் … Read more

ரூ.18,000 கோடி முதலிடூ.., 10 எலக்ட்ரிக் கார்கள் என திட்டத்தை விரிவுப்படுத்தும் டாடா

FY30 ஆம் நிதியாண்டுக்குள் ரூ.16,000-ரூ.18,000 கோடி முதலீடு செய்து தனது போர்ட்ஃபோலியோவில் 10 எலக்ட்ரிக் பயணிகள் வாகனங்கள் கொண்டிருப்பதுடன், வர்த்தக வாகனங்களுக்கு ஹைட்ரஜன் சார்ந்த என்ஜின் என மாறுபட்ட திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக டாடா மோட்டார்ஸ் முதலீட்டாளர்களுக்கான கூட்டத்தில் தெரிவித்துள்ளது. டாடா மோட்டார்சின் எதிர்கால மாடல்கள் பற்றி முக்கிய குறிப்புகள் FY24-25 நடப்பு நிதியாண்டில் ஹாரியர்.ev மற்றும் கர்வ்.ev இரண்டு எலக்ட்ரிக் கார்களை வெளியிட உள்ளது. FY26-ல் பிரத்தியேக பிரீமியம் அவெனியா (Tata Avinya) எலக்ட்ரிக் பிராண்டை … Read more