Renault Kwid Facelift launch soon – புதிய ரெனால்ட் க்விட் என்னென்ன மாற்றங்கள் பெறலாம்.?

ரெனால்ட் இந்தியாவின் ட்ரைபர், கிகர் என இரண்டின் அறிமுகத்தை தொடர்ந்து க்விட் ஃபேஸ்லிஃட் மாடலை அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வெளியிட உள்ள நிலையில், குறிப்பாக பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் அடிப்படையாகவே 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டிருக்கலாம். 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பட்ஜெட் விலை க்விட் ஆனது ஆரம்பத்தில் 0.8லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என இரு என்ஜின் ஆப்ஷனை பெற்றிருந்த நிலையில் காலப்போக்கில் மாசு உமிழ்வு மேம்பாடுகளை தொடர்ந்து 0.8 லிட்டர் என்ஜின் நீக்கப்பட்டது. … Read more

5,145 ஜிக்ஸர் 250 பைக்குகளை திரும்ப அழைத்த சுசுகி மோட்டார்சைக்கிள்

சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 250cc என்ஜின் பெற்ற ஜிக்ஸர் 250, ஜிக்ஸர் SF 250 என இரு மாடல்களில் பின்புற பிரேக்கிங் அசெம்பிளியில் ஏற்பட்டுள்ள கோளாறினை இலவசமாக சரி செய்து தர நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்ட 5,145 பைக்குகளை திரும்ப அழைக்கின்றது. பிப்ரவரி 2022 முதல் ஜூன் 2025 வரை தயாரிக்கப்பட்ட மொத்தம் 5,145 பைக்குகள் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளன. Gixxer 250 மற்றும் Gixxer SF 250-ல் V-Strom 250 க்கான பின்புற பிரேக் … Read more

9-சீட்டர் விங்கர் பிளஸ் வேனை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்சின் பிரீமியம் வசதிகளை பெற்று மிக தாராளமான இடவசதியை கொண்ட 9 இருக்கைகள் பெற்ற விங்கர் பிளஸ் வேனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.20.60 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பணியாளர் போக்குவரத்து மற்றும் வளர்ந்து வரும் சுற்றுலா பிரிவுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. 2.2 லிட்டர் DICOR டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுபவர் 100hp @ 3750 r/min மற்றும் டார்க் 200 Nm @ 1250 – 3500 r/min ஆக உள்ள நிலையில் 6 வேக … Read more

25 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த ஸ்வராஜ் டிராக்டர்ஸ்

மஹிந்திராவின் ஸ்வராஜ் டிராக்டர்ஸ் 1974 ஆம் ஆண்டு உற்பத்தி துவங்கி தற்பொழுது வரை சுமார் 25,00,000 டிராக்டர்களை தயாரித்து  சாதனையை மொஹாலி, பஞ்சாபில் உள்ள ஆலையில் நிகழ்த்தியுள்ளது. 2022 ஆம் ஆண்டில் நிறுவனம் 20 லட்சம் யூனிட் உற்பத்தியைத் தாண்டிய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மைல்கல் எட்டப்பட்டது, இது கடந்த பத்தாண்டுகளில் உற்பத்தியில் நிலையான வளர்ச்சியை எட்டி வருகின்றது. 1974 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட டிராக்டரான ஸ்வராஜ் 724 மாடலை அறிமுகப்படுத்தியதன் … Read more

158 கிமீ ரேஞ்சுடன் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 3.1Kwh பேட்டரி ஆப்ஷனை பெற்று 158கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என உறுதிசெய்யப்பட்டு விலை ரூ.99,900 (எக்ஸ்-ஷோரூம்) ஆக அறிவிக்கப்பட்டு முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் கட்டணமாக ரூ.5,001 வசூலிக்கப்படுகின்றது. ஒற்றை வேரியண்டை பெற்றுள்ள ஆர்பிட்டரில் கவனிக்க வேண்டிய அம்சங்களாக க்ரூஸ் கண்ட்ரோல், ஹீல் ஹோல்டு அசிஸ்ட், எல்சிடி கிளஸ்ட்டரை பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் நியான் சன்பர்ஸ்ட், ஸ்ட்ராடோஸ் ப்ளூ, லூனார் கிரே, ஸ்டெல்லர் சில்வர், காஸ்மிக் டைட்டானியம் மற்றும் … Read more

TVS Orbiter on-road price and specs – டிவிஎஸ் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச், ஆன்ரோடு விலை, சிறப்புகள்

டிவிஎஸ் மோட்டாரின் பட்ஜெட் விலை மின்சார பேட்டரி ஆர்பிட்டர் ஸ்கூட்டரில் 3.1Kwh பேட்டரி ஆப்ஷனின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் முக்கிய சிறப்பு அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம். TVS Orbiter மாறுபட்ட டிசைன் வடிவமைப்பினை கொண்டுள்ள ஆர்பிட்டரில் ஒற்றை 3.1Kwh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் 158 கிமீ வழங்கும் என IDC சான்றிதழ் பெறப்பட்டுள்ளதால் நிகழ்நேர பயன்பாட்டில் ECO மோடில் 120 கிமீ வரை வெளிப்படுத்தலாம். கூடுதலாக … Read more

இந்தியாவில் வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள் செப்டம்பர் 6ல் அறிமுகம்

தென்தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் தயாரிக்கப்பட்டு வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் நிறுவனத்தின் VF6 மற்றும் VF7 என இரு கார்களுக்கும் முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் செப்டம்பர் 6 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட்டு உடனடியாக டெலிவரி வழங்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே, தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களால் உற்பத்தி துவக்கி வைக்கப்பட்ட நிலையில், தற்பொழுது 13 நகரங்களில் டீலர்கள் துவங்கப்பட்டுள்ளதால் உடனடியாக டெலிவரி வழங்கப்பட உள்ளது. VF6 காரில் 59.6kWh பேட்டரி பொருத்தப்பட்டு ECO, Plus என இரு … Read more

ரூ.12.99 லட்சம் முதல் 2025 இந்தியன் ஸ்கவுட் மோட்டார்சைக்கிள் வெளியானது

இந்திய சந்தையில் புதுப்பிக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான இந்திய ஸ்கவுட் மோட்டார்சைக்கிள் வரிசையில் ஸ்கவுட் சிக்ஸ்டி முதல் சூப்பர் ஸ்கவுட் வரை 8 விதமான மாடல்கள் ரூ.12.99 லட்சம் ஆரம்ப முதல் ரூ.16.15 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) அமைந்துள்ளது. ஸ்கவுட் சிக்ஸ்டி கிளாசிக், ஸ்கவுட் சிக்ஸ்டி பாபர் மற்றும் ஸ்போர்ட் ஸ்கவுட் சிக்ஸ்டி போன்ற மாடல்களில் 999cc, ஸ்பீட்பிளஸ் V-ட்வின், திரவ-குளிரூட்டப்பட்ட எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 85bhp மற்றும் 87Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக … Read more

2022க்கு முந்தைய ரெனால்ட் வாகனங்கள் E20 பெட்ரோலுக்கு ஏற்றதல்ல.!

இந்தியாவில் E20 பெட்ரோல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் 2022க்கு முந்தைய பெரும்பாலான தயாரிப்பாளர்களின் வாகனங்கள் ஏற்புடைதல்ல என வெளிப்படையாக உறுதிப்படுத்த முயற்சி செய்த நிலையில் திடீரென எந்த பாதிப்பும் வராது என ARAI ஆய்வை மேற்கோள் காட்டி அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. குறிப்பாக, இந்தியன் ஆயில் கழகம் மற்றும் மற்றும் இந்திய ஆட்டோமோட்டிவ் ஆராய்ச்சி சங்கம் (ARAI) ஆகியவை பல்வேறு எரிபொருள் சேர்க்கைகளை ஆய்வு செய்த நீடித்து உழைக்கும் தன்மை சோதனையை மேற்கொண்டன. E10 க்கு மட்டுமே … Read more

சுசுகி E-அக்சஸ் ஸ்கூட்டரை பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

சுசுகி நிறுவன முதல் E-அக்சஸ் வாங்கும் முன் பேட்டரி, ரேஞ்ச், தரம் அறிவதுடன் சில பின்னடைவுகளை அறியலாம்.