Adventure Bikes on-road price list in Tamil Nadu – குறைந்த விலை அட்வென்ச்சர் பைக்குகளின் ஆன்-ரோடு விலை பட்டியல்

இந்திய சந்தையில் கிடைக்கின்ற ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற அட்வென்ச்சர் பைக்குகளின் என்ஜின், சிறப்பம்சங்கள், மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம். ரூ.5 லட்சம் விலைக்குள் மட்டும் அமைந்துள்ள அட்வென்ச்சர் பைக்குகள் மட்டுமே இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V, ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411, யெஸ்டி அட்வென்ச்சர், சுசூகி V-strom SX, பிஎம்டபிள்யூ G310 GS கேடிஎம் 250 அட்வென்ச்சர் மற்றும் கேடிஎம் 390 அட்வென்ச்சர் ஆகியவை … Read more

இந்தியாவில் ஹோண்டா CBR250RR பைக் அறிமுகம் எப்பொழுது ?

ஹோண்டா இந்தியா நிறுவனம் ஸ்போர்ட்டிவ் ஃபேரிங் ஸ்டைலை பெற்ற CBR250RR பைக் மாடலுக்கான வடிவமைப்பினை காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளது. ஆனால் எப்பொழுது அறிமுகம் செய்யப்படும் என உறுதியான தகவலும் இல்லை. சமீபத்தில் ஸ்கிராம்பளர் ஸ்டைல் பெற்ற ஹோண்டா CL300 பைக்கிற்கான வடிவமைப்பிற்கு காப்புரிமை கோரியிருந்த நிலையில் ஃபேரிங் ஸ்டைல் பெற்ற மாடல் CBR250RR பைக்கில் 249cc  பேரலல் ட்வீன் சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கின்றது. Honda CBR250RR முழுமையான ஃபேரிங் ஸ்டைலை பெற்ற ஹோண்டா CBR250RR மாடலில் எல்இடி … Read more

Maruti Jimny – மாருதி ஜிம்னி எஸ்யூவி அறிமுக தேதி வெளியானது

வரும் ஜூன் 7 ஆம் தேதி விற்பனைக்கு வெளியாகின்ற மாருதி சுசூகி ஜிம்னி எஸ்யூவி காரின் விலை ரூபாய் 10 லட்சம் முதல் ரூபாய் 12 லட்சம் முதல் அமைந்திருக்கலாம். மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் கூர்க்கா கார்களுக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்தும் மாடலாகும். கடந்த 5 மாதங்களுக்கு மேலாக முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் 30,000 க்கு அதிகமான முன்பதிவுகளை கடந்துள்ளது. ஆல்பா மற்றும் ஜெட்டா என இருவிதமான வேரியண்டுகளில் கிடைக்கின்றது. Maruti Suzuki Jimny … Read more

2023 யமஹா R15 V4 பைக்கில் டார்க் நைட் நிறம் அறிமுகம்

புதிதாக வந்துள்ள யமஹா R15 V4 பைக் டார்க் நைட் நிறத்தில் வேறு எந்த வடிவம், என்ஜின் தொடர்பான மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள மெட்டாலிக் ரெட், ரேசிங் ப்ளூ மற்றும் இன்டென்ஸ்ட்டி வெள்ளை என மூன்று நிறங்கள் கிடைக்கின்றது. OBD2 மற்றும் E20 ஆதரவுக்கு ஏற்ற 155cc சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு-கூல்டு VVA என்ஜின் அதிகபட்சமாக 18.1bhp பவரை 10,000 rpm-லும் மற்றும் 7500 rpm-ல் 14.2Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக … Read more

Tata Altroz CNG Price – ₹ 7.55 லட்சத்தில் டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி விற்பனைக்கு வந்தது

பிரசத்தி பெற்ற அல்ட்ராஸ் காரில் சிஎன்ஜி கொண்ட மாடல் விற்பனைக்கு ₹ 7.55 லட்சத்தில் முதல் ₹ 10.55 லட்சம் வரை விலையை டாடா மோட்டார்ஸ் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வேரியண்ட், உட்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் என அனைத்தும் அறிந்து கொள்ளலாம். 1.2 லிட்டர் பெட்ரோல் மாடலில் CNG எரிபொருள் பெற்ற வேரியண்ட் 77hp மற்றும் 97Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அல்ட்ராஸ் சிஎன்ஜி எரிபொருள் மைலேஜ் 27Km/kg ஆகும். Tata … Read more

Electric 2Wheeler Price hike – ஜூன் 1 முதல் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் விலை உயருகின்றது

வரும் ஜூன் 1, 2023 முதல் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களில் விலை உயரத்தப்படுவது உறுதியாகியுள்ளது. இந்திய அரசு வழங்கி வந்த FAME-II மானியம் குறைக்கப்பட்டுள்ளதால் விலை உயர்வது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே, வெளியிட்டிருந்த செய்தியில் ரூ.30,000 வரை ஸ்கூட்டர் மற்றும் பைக்குகள் விலை உயரக்கூடும் என குறிப்பிட்டிருந்தோம். E2W Price hike நடைமுறையில் உள்ள FAME-II மானியம் kWh ஒன்றுக்கு ரூ. 15,000க்கு பதிலாக இனி ஒரு kWh பேட்டரி திறனுக்கு ரூ.10,000 ஆக குறைக்கப்பட உள்ளது. தற்போது … Read more

TVS iQube ST Escooter – டிவிஎஸ் ஐக்யூப் ST எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் எப்பொழுது ?

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இரண்டு வேரியண்டுகள் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் ST எனப்படுகின்ற 4.56Kwh பேட்டரி, 145Km/Charge கொண்ட மாடல் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. விற்பனையில் கிடைக்கின்ற iQube மற்றும் iQube S என இரண்டு வேரியண்டுகளை போல அதைந்திருந்தாலும் கூடுதல் பேட்டரி பேக் திறன் மற்றும் அதிகப்படியான ரேஞ்சு கவனத்தை பெற முக்கிய காரணமாக உள்ளது. TVS iQube ST பிரசத்தி பெற்ற ஏதெர் 450X, ஓலா எலக்ட்ரிக் S1, … Read more

Maruti Suzuki Jimny Mileage – மாருதி சுசூகி ஜிம்னி எஸ்யூவி மைலேஜ் விபரம் வெளியானது

இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவிருக்கும் 5 கதவுகளை பெற்ற மாருதி சுசூகி ஜிம்னி எஸ்யூவி காரின் மேனுவல் வேரியண்ட் மைலேஜ் 16.94 Kmpl மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் 16.39 Kmpl வழங்கும் என ARAI சான்றளித்துள்ளது. வரவிருக்கும் 5 கதவுகளை பெற்ற மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் கூர்க்கா எஸ்யூவி கார்களை எதிர்கொள்ள உள்ள மாடலில் 1.5 லிட்டர் K15B பெட்ரோல் என்ஜின் ஜிம்னி காரில் இடம்பெற்றுள்ளது. 2023 Maruti Suzuki Jimny சமீபத்தில் மாருதி ஜிம்னி … Read more

₹ 34.69 லட்சத்தில் 2023 வோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி அறிமுகம்

Level 1 ADAS நுட்பத்தை பெற்ற மாடலாக வெளிவந்துள்ள 2023 வோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி காரில் புதிய RDE விதிமுறைகளுக்கு ஏற்ற மேம்பட்ட என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.49,000  வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. BS6 phase 2 இணக்கமான 2.0-லிட்டர் TSI பெட்ரோல் என்ஜின் ஆனது 190hp மற்றும் 320Nm டார்க் வழங்குகின்றது. 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச்  ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழியாக நான்கு சக்கரங்களுக்கும் ஆற்றலை வழங்குகிறது. மைலேஜ் 12.65kpl-லிருந்து 13.54kpl ஆக ARAI- சான்றளிக்கப்பட்டுள்ளது. … Read more

1,00,000 விற்பனை இலக்கை கடந்த டாடா ஹாரியர் எஸ்யூவி

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற மற்றொரு எஸ்யூவி மாடலான ஹாரியர் விற்பனை எண்ணிக்கை 1,00,000 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹாரியர் எஸ்யூவி விலை ₹ 14.99 லட்சம் முதல் ₹ 24.06 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மைல்கல்லை அடைய எஸ்யூவி ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் எடுத்துக் கொண்டு 19 விதமான வேரியண்டில் மற்றும் ஆறு வெளிப்புற வண்ணப்பூச்சு விருப்பங்களில் கிடைக்கிறது. டாடா … Read more