TVS Scooter on-road price Tamilnadu list – டிவிஎஸ் ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை பட்டியல் மே 2023

ஸ்கூட்டர் சந்தையில் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தயாரிப்பாளராக உள்ள டிவிஎஸ் மோட்டார் ஸ்கூட்டர்களின் என்ஜின், மைலேஜ், சிறப்புகள் மற்றும் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம். டிவிஎஸ் நிறுவனம் 110cc சந்தையில் ஜூபிடர், ஜெஸ்ட் 110 மற்றும் 125cc சந்தையில் ஜூபிடர் 125 மற்றும் என்டார்க் 125 ஆகியவற்றுடன் கூடுதலாக டிவிஎஸ் ஸ்கூட்டி பெப்+ என 5 மாடல்கள் விற்பனை செய்து வருகின்றது. இதுதவிர எலக்ட்ரிக் பிரிவில் ஐக்யூப் ஸ்கூட்டரை விற்பனை செய்கின்றது. Table of … Read more

Yamaha RD350 Returns – மீண்டும் யமஹா RD350 பைக் விற்பனைக்கு வருகையா.!

யமஹா மோட்டார் நிறுவனம் மீண்டும் ரெட்ரோ ஸ்டைலுடன் RD350 மற்றும் RD250 பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பல்வேறு நாடுகளில் RZ350 மற்றும் RZ250 என்ற பெயரில் 1980-1990 களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்திய சந்தையில் யமஹா நிறுவனம் மற்றும் எஸ்கார்ட்ஸ் குழுமத்துடன் இணைந்து ராஜ்தூத் 350 பைக் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. 1983 முதல் 1989 வரை தயாரிக்கபட்டு விற்பனை செய்யப்பட்டது. RD என்றால் Race Dervied என்பது … Read more

இந்தியாவின் வாகன விற்பனை நிலவரம் – ஏப்ரல் 2023

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து விதமான வாகனங்களின் ஏப்ரல் 2023 மாதந்திர ஒட்டுமொத்த எண்ணிக்கை 17,24,935 ஆகும். முந்தயை 17,97,432 ஏப்ரல் 2022 உடன் ஒப்பீடுகையில் 4.03 சதவீத வீழ்ச்சி அடைந்துள்ளது. FY2023-2024 ஆம் நிதி ஆண்டின் துவக்க மாதத்தில் சரிவுடன் விற்பனை துவங்கியுள்ளது. இருசக்கர வாகனங்களில் விற்பனை எண்ணிக்கை 12,29,911 ஆகவும், பயணிகள் வாகன எண்ணிக்கை 2,82,674 ஆகவும், வர்த்தக வாகனங்கள் எண்ணிக்கை 85,587, டிராக்டர் எண்ணிக்கை 55,835 மற்றும் 3 சக்கர வாகனங்களின் … Read more

Tata Tiago.ev – 4 மாதங்களில் 10,000 டாடா டியாகோ எலக்ட்ரிக் கார் விநியோகம்

இந்தியாவில் மிக வேகமாக முன்பதிவு செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார்களில் டாடா டியாகோ.ev கார் விற்பனைக்கு வந்த நான்கு மாதங்களில் 10,000 வாகனங்கள் டெலிவரி வழங்கப்பட்டுள்ளது. ₹ 8.69 லட்சம் முதல் ₹ 11.99 லட்சம் வரை இரு விதமான பேட்டரி ஆப்ஷனில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. முன்பதிவு துவங்கப்பட்ட 24 மணி நேரத்தில் 10,000 எலக்ட்ரிக் கார்களை பதிவு செய்துள்ளனர். Tata Tiago.ev இந்தியா முழுவதும் 491 நகரங்களில் விற்பனை செய்யப்பட்டு கார்களில் 1.6 மில்லியன் கிராம் … Read more

simple one – சிம்பிள் எனெர்ஜி ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி துவங்கியது

இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகின்ற அதிக ரேஞ்சு வழங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான சிம்பிள் ஒன் சிங்கிள் சார்ஜில் 236 கிமீ ரேஞ்சு வழங்கும் என கூறப்படுகின்றது. ஓசூர் அருகே சூளகிரியில் அமைந்துள்ள ஆலையில் முதல் ஒன் ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 2021 ஆம் ஆண்டில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட சிம்பிள் ஒன் தொடர்ந்து உற்பத்தி ஆலை துவங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக டெலிவரி வழங்கப்படாமல் இருந்தது. Simple one electric scooter வரும் மே 23 ஆம் … Read more

MG Comet EV Price – எம்ஜி காமெட் எலக்ட்ரிக் காரின் விலை பட்டியல் வெளியானது

₹ 7.98 லட்சம் முதல் அதிகபட்சமாக ₹ 9.98 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள எம்ஜி காமெட் EV காரின் அறிமுக சலுகை விலை முதல் 5,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். முன்பதிவு மே 15 ஆம் தேதி துவங்கும் நிலையில் மே 22 முதல் டெலிவரி துவங்கப்பட உள்ளது. முதல் 5,000 வாடிக்கையார்களுக்கு மட்டுமே தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள விலை அதன்பிறகு கணிசமாக விலை உயர்த்தப்பட உள்ளது. எலக்ட்ரிக் காருக்கு வாரண்டி மற்றும் (BuyBack) திரும்ப … Read more

Citroen C3 Turbo – சிட்ரோன் சி3 ஷைன் டர்போ வேரியண்ட் அறிமுகம்

விற்பனையில் கிடைத்து வருகின்ற சிட்ரோன் C3 ஷைன் வேரியண்டில் 1.2 லிட்டர் டர்போ என்ஜின் கொண்ட மாடலாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. தற்பொழுது மாடல் ₹ 6.16 லட்சம் முதல் ₹ 8.80 லட்சம் வரை கிடைக்கின்றது. ஷைன் வேரியண்டில் டர்போ என்ஜின் விருப்பத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதிக அம்சங்கள் மற்றும் RDE இணக்கத்துடன் வந்துள்ளது. ரியர் வாசருடன் கூடிய வைப்பர் மற்றும் டீஃபோகர் ஆகியவற்றை பெற்றுள்ளது. 2023 Citroen C3 Turbo 1.2 லிட்டர் டர்போ … Read more

₹ 67,000 வரை டொயோட்டா கார்களின் விலையை உயர்ந்தது

டொயோட்டா நிறுவனத்தின் அர்பன் க்ரூஸர் ஹைரைடர், இன்னோவா ஹைக்ராஸ், கிளான்ஸா, மற்றும் கேம்ரி ஹைபிரிட் உள்ளிட்ட மாடல்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஹைரைடர் எஸ்யூவி விலை ₹ 60,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் விற்பனைக்கு வந்த இன்னோவா க்ரிஸ்டா, ஃபார்ச்சூனர், ஹைலக்ஸ் மற்றும் வெல்ஃபயர் கார்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. டொயோட்டா கார் விலை பட்டியல் கிளான்ஸா காரின் விலை வேரியண்ட் வாரியாக ரூ.5,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் மாடல் ரூ.46,000 … Read more

Hyundai Exter leaked – புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் படங்கள் கசிந்தது

ஹூண்டாய் இந்தியா வெளியிட உள்ள புதிய எக்ஸ்டர் எஸ்யூவி காரின் உற்பத்திநிலை படங்கள் தென்கொரியாவில் இருந்து முதன்முறையாக கசிந்துள்ளது.  கிராண்ட் ஐ10 நியோஸ் பிளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள காரின் விலை ₹ 6.50 லட்சம் முதல் துவங்க வாய்ப்புகள் உள்ளது. விற்பனையில் உள்ள டாடா பஞ்சு எஸ்யூவி காரை எதிர்கொள்ள உள்ள எக்ஸ்டெர் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். பெட்ரோல் தவிர சிஎன்ஜி ஆப்ஷனில் எதிர்பார்க்கலாம். Hyundai Exter 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள … Read more

ஏதெர், ஓலா, டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கியவர்களுக்கு ரூ.288 கோடி திரும்ப தருகின்றது

  இந்திய அரசின் FAME-II மானியம் தொடர்பான எலக்ட்ரிக் சார்ஜருக்கான ₹ 288 கோடி பணத்தை திரும்ப வழங்க ஏதெர், ஓலா எலக்ட்ரிக், டிவிஎஸ் மோட்டார் மற்றும் ஹீரோ வீடா நிறுவனங்கள் முன்வந்துள்ளது. முன்பே இது தொடர்பாக ஓலா திரும்ப தர உள்ள 130 கோடி தொடர்பான செய்தியை வெளியிட்டிருந்தோம். மேலும் ஹீரோ எலக்ட்ரிக், ஓகினாவா ஆட்டோடெக் என இரு நிறுவனத்துக்கு  249 கோடி ரூபாயை மீட்டெடுக்க ஒன்றிய அரசு கோரியுள்ளதாக கூறப்படுகிறது. ஓகினவா ஆட்டோடெக் நிறுவனத்திடம் … Read more