புதிய வீடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம் எப்பொழுது ?

நாட்டின் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோடோகார்ப் எலக்ட்ரிக் பிராண்டு வீடா குறிப்பிட்ட சில மாநகரங்களில் மட்டும் விற்பனைக்கு கிடைக்கும் நிலையில் பல்வேறு நகரங்களில் விரிவுப்படுத்துவதுடன் கூடுதலாக மாறுபட்ட ரேஞ்சு, டிசைன் கொண்ட பல்வேறு பேட்டரி மின்சார ஸ்கூட்டர்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் சுமார் 100க்கு மேற்பட்ட டீலர்களை துவங்க திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஹீரோ வீடா ஸ்கூட்டர் சென்னை, கோவை என இரு மாநகரங்களில் மட்டும் கிடைக்கின்றது. … Read more

hero xtreme 160r 4v vs rivals – ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V vs போட்டியாளர்கள் – ஒப்பீடு

160cc சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டுள்ள புதிய எக்ஸ்ட்ரீம் 160R 4V மாடலுக்கு மிக கடுமையான சவாலினை ஏற்படுத்துகின்ற அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி, பல்சர் என்எஸ் 160 என இரண்டு மாடல்கள் நேரடியாக எதிர்கொள்ளுகின்றது. மறைமுகமாக யமஹா FZ-S FI 4.0, எக்ஸ்ட்ரீம் 160ஆர் 2வி, பல்சர் என்160, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 2வி, ஹோண்டா எக்ஸ்-பிளேடு, மற்றும் ஹோண்டா யூனிகார்ன் 160 ஆகியவற்றுடன் 160cc சந்தையை பகிர்ந்து கொள்ளுகின்றது. இங்கே ஒப்பீடுக்காக நேரடியான … Read more

Hyundai Verna N Line – ஹூண்டாய் வெர்னா N-line சோதனை ஓட்ட படங்கள் வெளியானது

ஹூண்டாய் வெர்னா காரின் சக்திவாய்ந்த மாடலாக வரவிருக்கும் வெர்னா N-line செடான் ரக மாடல் சென்னை அருகே சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் படங்கள் வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக விற்பனைக்கு வந்த வெர்னா அமோக வரவேற்பினை பெற்றது. சர்வதேச அளவில் பல்வேறு மாடல்களின் என்-லைன் எனப்படும் பவர்ஃபுல் மாடல்களை விற்பனை செய்து வரும் நிலையில், இந்திய சந்தையில் புதிய என்-லைன் கார்களை ஹூண்டாய் அறிமுகம் செய்ய தீவர முயற்சி எடுத்துவருகின்றது. 2023 Hyundai Verna N-line … Read more

ஹீரோ பேஷன் பிளஸ் பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள் – 2023 Hero Passion Plus Price, Mileage, Images

ஹீரோ மோட்டோகார்ப் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ள பேஷன் பிளஸ் பைக்கின் சிறப்புகள், மைலேஜ், நிறங்கள், மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம். Table of Contents 2023 Hero Passion Plus ஹீரோ பேஷன் பிளஸ் நுட்பவிரங்கள் ஹீரோ பேஷன் பிளஸ் நிறங்கள் 2023 Hero Passion Plus on-Road Price Tamil Nadu Hero Passion+ Rivals Faq Hero Passion+ 100 2023 Hero Passion plus Bike Image Gallery … Read more

ChatGPT Powered MBUX – மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களில் நுழைந்த சாட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவு

இணைய உங்கில் பிரபலமாகி வரும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சாட் ஜிபிடி அம்சத்தை முதன்முறையாக மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. OpenAI உருவாக்கியுள்ள சாட் ஜிபிடி எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சத்தை பயன்படுத்தி பயனர்கள் விரும்பும் தகவலை வழங்குகின்றது. தேடுப்பொறி போல அல்லாமல் உடனடியாக தகவலை வழங்குகின்றது. ChatGPT-Powered Hey Mercedes ஜூன் 16, 2023 முதல், மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் சாட் ஜிபிடி மூலம் குரல் வழி வசதிகளை வழங்கும் சோதனை முயற்சியை … Read more

kia seltos – 2023 கியா செல்டோஸ் எஸ்யூவி படங்கள் வெளியானது

அடுத்த சில நாட்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற கியா செல்டோஸ் எஸ்யூவி காரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தோற்ற அமைப்பில் சிறிய மாற்றங்கள் கூடுதல் வசதிகள் பெற்றதாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது. மற்றபடி என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இல்லாமல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினுடன் கூடுதலாக 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2023 Kia Seltos Facelift உலகளாவிய சந்தையில் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வடிவமைப்பை பெற்றுள்ள இந்திய மாடல் … Read more

Raptee Electric Motorcycle – ரேப்டீ எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம் எப்பொழுது ?

இந்தியாவின் பேட்டரி எலக்ட்ரிக் வாகனங்களின் தலைநகரமாக உருவாகி வரும் தமிழ்நாட்டில் மற்றொரு ஸ்டார்ட் அப் நிறுவனமான ரேப்டீ (Raptee) உற்பத்தி ஆலையை துவங்குவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது. எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை தயாரிப்பதற்கான தனது முதல் தொழிற்சாலையை ரேப்டீ சென்னையில் திறந்துள்ளது. ஆண்டுக்கு 1 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலையில் முதற்கட்டமாக ரூ.85 கோடி முதலீடு செய்ய ரேப்டீ திட்டமிட்டுள்ளது. Raptee Electric Motorcycle ரேப்டீ R&D மையம் தளத்தில் மேம்பாடு மற்றும் சோதனை … Read more

honda unicorn 160 – 2023 ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கின் முக்கிய அம்சங்கள்

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹோண்டா நிறுவனத்தின் யூனிகார்ன் 160 பைக்கின் விலை ₹ 1,08,400 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைமுறைக்கு வந்துள்ள பிஎஸ்6 இரண்டாம் கட்ட நடைமுறைக்கு இணங்க விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.600 வரை விலை தமிழ்நாட்டில் குறைக்கப்பட்டுள்ள நிலையில் டெல்லி உட்பட பல்வேறு நகரங்களில் ரூ.4,500 வரை விலை உயர்வை யூனிகார்ன் சந்தித்துள்ளது. 2023 Honda Unicorn 160 ஹோண்டா தனது மாடல்களில் பெரிய அளவிலான மேம்பாடினை வழங்கவில்லை. … Read more

2023 Triumph Street Triple 765 range – ட்ரையம்ப ஸ்டீரிட் டிரிபிள் 765 விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் புதுப்பிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான ட்ரையம்ப ஸ்டீரிட் டிரிபிள் 765 பைக்கின் R மற்றும் RS என இரண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்ட்ரீட் டிரிபிள் 765 ஆர் விலை ரூ. 10.16 லட்சம் முதல் ரூ. 12.07 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை கிடைக்கின்றது. அடுத்தப்படியாக, புதிய ஸ்ட்ரீட் டிரிபிள் 765 ஆர்எஸ் விலை ரூ. 11.81 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக துவங்குகின்றது. நேக்டூ ஸ்போர்ட்டிவ் பைக்குகளில் 765 RS மாடல் சிறப்பபான ரேஸ் … Read more

Simple Energy escooter – குறைந்த விலையில் இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட உள்ள சிம்பிள் எனர்ஜி

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில், குறைந்த விலையில் அதிக விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்யும் நோக்கில் சிம்பிள் எனர்ஜி இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிட உள்ளதை உறுதி செய்துள்ளது. 212 கிமீ ரேஞ்சு வழங்குகின்ற சிம்பிள் ஒன் பேட்டரி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து டெலிவரியை துவங்கியுள்ளது. அடுத்த சில மாதங்களில் முன்னணி நகரங்களில் 100 க்கு மேற்பட்ட டீலர்களை துவங்க உள்ளது. Simple Energy escooter சிம்பிள் … Read more