ரெனால்ட் நிசான் இந்திய கூட்டு ஆலையை ரெனால்ட் கையகப்படுத்துகின்றது | Automobile Tamilan

ரெனால்ட் நிசான் இந்திய (Renault Nissan Automotive India Private Ltd – RNAIPL) கூட்டு ஆலையில் 51 % நிசான் பங்குகளை ரெனால்ட் நிறுவனம் முழுவதுமாக அடுத்த மூன்று மாதங்களுக்குள் கையகப்படுத்தும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரெனால்ட் நிறுவனம் சென்னை ஆலையின் 100% உரிமையை கொண்டிருக்கும். ஆனால் நிசான் கார்கள் தயாரிப்பில் எந்த மாற்றும் இருக்காது. அதேநேரத்தில் ரெனால்ட் நிசான் இந்திய தொழில்நுட்பம் மற்றும் வணிக மையம் (Renault Nissan Technology & Business … Read more

விரைவில் டாடா கர்வ் பிளாக் எடிசன் விற்பனைக்கு வெளியாகிறது

டாடா கர்வ் பிளாக் எடிசன் டாடா மோட்டார்சின் கூபே ஸ்டைல் கர்வ் காரில் EV, ICE என இரண்டிலும் விற்பனைக்கு கிடைக்கின்ற நிலையில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரு எஞ்சினிலும் சில வாரங்களுக்குள் கிடைக்க துவங்க உள்ளது. 125hp, 225Nm டார்க் வெளிப்படுத்தும் பெட்ரோல்  மற்றும் 118hp, 260Nm டார்க் வெளிப்படுத்தும் டீசல் எஞ்சின் ஆனது 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் பெற்றிருக்கும் … Read more

ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள் – Royal Enfield Super Meteor 650 on-road price and specs

பிரபலமான நடுத்தர மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு நிறுவன க்ரூஸர் ரக சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் என்ஜின், மைலேஜ், நிறங்கள், அம்சங்கள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து முக்கிய விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். 2025 Royal Enfield Super Meteor 650 மிகவும் சக்திவாயந்த க்ரூஸர் ரக மாடலாக விளங்குகின்ற 650சிசி சூப்பர் மீட்டியோரில் பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சின் பெற்று அதிகபட்சமாக அதிகபட்சமாக 47hp பவரினை 7250rpm-லும் 5,650rpm-ல் 52.3Nm டார்க்கினை … Read more

2025 சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள் – Suzuki Burgman Street 125 on road price and specs

துவக்கநிலை 125சிசி சந்தையில் கிடைக்கின்ற மேக்ஸி ஸ்டைல் சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் மாடலின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். 2025 Suzuki Burgman Street 125 மேக்ஸி ஸ்டைலை பெற்றதாக கிடைக்கின்ற பர்க்மன் ஸ்டீரிட் 125ல் OBD-2B ஆதரவு கொண்ட புதிய ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் 124cc இன்ஜின்  6,750 rpm-ல் அதிகபட்சமாக 8.6 hp பவர், 5,500 rpm-ல் 10Nm டார்க் வெளிப்படுத்தம் நிலையில் சிவிடி … Read more

2,978 கூர்கா வாகனங்களுக்கான ஆர்டரை பெற்ற ஃபோர்ஸ் மோட்டார்ஸ்

நமது இந்திய ராணுவத்தின் இலகுரக ஸ்டிரைக்கிங் (Light Strike Vehicle) வாகனங்கள் பிரிவில் கூர்கா எஸ்யூவி மாடலை 2,978 எண்ணிக்கையில் வாங்குவதற்கான ஆர்டரை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஃபோர்ஸ் மோட்டார்ஸின் வலுவான பொது சேவை வாகனங்கள் மூலம் இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களை ஆதரிப்பதில் உள்ள நீடித்த உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என இந்நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளது. கரடு முரடான சாலைகளில் பயணிப்பதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற கூர்கா எஸ்யூவி … Read more

சுசூகி அவெனிஸ் 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள் – Suzuki Avenis 125cc on-road price and specs

சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஸ்போர்ட்டிவ் ஸ்டைலை பெற்ற 125சிசி அவெனிஸ் ஸ்கூட்டர் மாடலின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். 2025 Suzuki Avenis 125 ஸ்போர்ட்டிவான ஸ்டைலை பெற்றுள்ள புதிய அவெனிஸ் 125 ஸ்கூட்டரில் OBD-2B ஆதரவு கொண்ட புதிய ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் 124cc இன்ஜின்  6,750 rpm-ல் அதிகபட்சமாக 8.7 hp பவர், 5,500 rpm-ல் 10.2 Nm டார்க் வெளிப்படுத்தம் நிலையில் சிவிடி … Read more

ஏப்ரல் 2025 முதல் மஹிந்திரா வாகனங்கள் விலை 3% உயருகின்றது

நாட்டின் முன்னணி யூட்டிலிட்டி வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் பயணிகள் வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் என அனைத்தும் 3% வரை விலை உயர்த்தப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்தி மூலப் பொருட்களின் விலை உயர்வு, மற்ற செலவினங்களை எதிர்கொள்ளுவதற்கு விலை உயர்த்துவது கட்டாயமாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்த மின்சார எலக்ட்ரிக் கார்களான BE 6, XEV 9e போன்ற மாடல்களும் விலை உயர்த்தப்பட உள்ளது. … Read more

இறுதிகட்ட சோதனையில் விடா ஜீ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் எப்பொழுது.?

ஹீரோவின் விடா எலக்ட்ரிக் பிராண்டில் வரவிருக்கும் புதிய ஜீ எலக்ட்ரிக் கூட்டல் மாடல் இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளதால் அடுத்த சில மாதங்களுக்குள் சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. EICMA 2024ல் Z என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்ட மாடல் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு இருக்கின்றது. குறிப்பாக ஐரோப்பாவில் இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த மாடல் அறிமுகம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டு வருகின்றது. தற்பொழுது சந்தையில் உள்ள விடா வி2 … Read more

2025 பஜாஜ் டோமினார் 400 அறிமுகம் எப்பொழுது..?

2025 ஆம் ஆண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட பஜாஜ் ஆட்டோவின் டோமினார் 400 பைக் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இந்த பைக்கில் இடம்பெறப் போகின்ற கிளஸ்டர் அமைப்பானது ஏற்கனவே பல்சர் NS400 இஸட் மாடலில் இருப்பதைப் போல அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இதன் மூலம் பல்வேறு கனெக்டிவிட்டி சார்ந்த அம்சங்களை ஸ்மார்ட்போன் வாயிலாக இணைக்கும் போது பெற முடியும். குறிப்பாக டர்ன் பை டர்ன் நேவிகேஷன் கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட் … Read more

ஆடம்பர எலக்ட்ரிக் எம்ஜி சைபர்ஸ்டெர், M9 முன்பதிவு துவங்கியது

ஜேஎஸ்டபிள்யூ-எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் பிரீமியம் வாகனங்களுக்கான எம்ஜி செலக்ட் டீலர்கள் மூலம் சைபர்ஸ்டெர் மற்றும் M9 எலக்ட்ரிக் எம்பிவி என இரு மாடல்களுக்கான முன்பதிவு துவங்கியுள்ள நிலையில் கட்டணமாக ரூ.51,000 வசூலிக்கப்படுவதனால், விலை ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டு டெலிவரி துவங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக எம்ஜி செலக்ட் டீலர்கள் சென்னை, மும்பை, தானே, புனே, டெல்லி, குர்கான், சண்டிகர், பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், கொல்கத்தா, கொச்சி மற்றும் சூரத் என மொத்தமாக 13 நகரங்களில் துவங்கப்பட்டுள்ளது. MG M9 … Read more