குறைந்த விலை பஜாஜ் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக விபரம்

வரும் நாட்களில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் குறைந்த விலை சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு வெளியிட தயாராகி வருகின்றது. ஏற்கனவே சந்தையில் கிடைக்கின்ற சேட்டக் மாடல் ரூபாய் 1 லட்சத்து 32 ஆயிரம் முதல் துவங்குகின்ற நிலையில் அந்த மாடலை விட சற்று குறைவாக ஒரு லட்சம் ரூபாய் அல்லது ரூ.1.10 லட்சம் விலைக்குள் எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய மாடல் இந்திய சந்தையில் கிடைக்கின்ற ஓலா S1X உட்பட குறைந்த விலையில் கிடைக்கின்ற பல்வேறு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எதிர்கொள்ளவும் … Read more

நிசான் மேக்னெட் எஸ்யூவி திரும்ப அழைக்கப்படுகின்றது

இந்தியாவில் நிசான் நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற மேக்னெட் எஸ்யூவி காரில் முன்புற டோர் சென்சாரில் ஏற்பட்ட விழா கோளாறுகளை சரி செய்வதற்காக திரும்ப அழைத்துள்ளது.  கடந்த நவம்பர் 2020 முதல் டிசம்பர் 2023 வரை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட கார்களில் மட்டுமே இந்த பிரச்சனை எழுந்துள்ளது குறிப்பாக ஆரம்ப நிலை XE மற்றும் XL வேரியண்டுகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் எவ்வளவு எண்ணிக்கைகள் என்ற விபரத்தை தற்போது இந்த நிறுவனம் வெளியிடவில்லை. மேலும் இந்நிறுவனத்தின் அறிக்கையில்  … Read more

கூடுதலாக 5 % மைலேஜ் தரும் டொயோட்டா ஃபார்ச்சூனர் 48V அறிமுகம்

மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை பெற்றுள்ள புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி மாடல் 5 % வரை கூடுதலான மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டிருப்பதுடன், இந்திய சந்தைக்கு புதிய ஹைபிரிட் சிஸ்டத்தை பெற்ற மாடல் அடுத்த சில மாதங்களுக்கு பிறகு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்பாக இதே போன்ற ஹைபிரிட் நுட்பத்தை பெற்ற டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக் வெளியிடப்பட்ட நிலையில், தற்பொழுது ஃபார்ச்சூனரும் தென் ஆப்பிரிக்கா சந்தையில் வெளியாகியுள்ளது. செயல்திறனில் எந்தவொரு சமரசமும் இல்லாமல் தொடர்ந்து 2.8 … Read more

ஐரோப்பாவில் ஸ்டைலிஷான் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் வெளியானது

ஐரோப்பா சந்தையில் புதிய சிட்ரோன் C3 ஏர்கிராஸ் மற்றும் eC3 ஏர்கிராஸ் (Citroen C3 Aircross) எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மாடல் முற்றிலும் மாறுபட்ட டிசைன் அம்சங்களை பெற்றிருந்தாலும் இரு மாடல்களும் ஒரே ஸ்டெல்லானைட்ஸ் ஸ்மார்ட் கார் பிளாட்பாரத்தில் தான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இந்திய சந்தையில் தற்பொழுது பெட்ரோல் மட்டும் உள்ள அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் c3 ஏர்கிராஸ் இவி மாடல் ஆனது அடுத்த சில மாதங்களுக்குப் பிறகு வெளியாகலாம். அதேபோல தற்பொழுது … Read more

தமிழ்நாட்டில் JLR எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் டாடா மோட்டார்ஸ்

இந்தியாவின் முன்னணி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) எலக்ட்ரிக் கார்கள் மற்றும் ICE மாடல்களையும் தமிழ்நாட்டில் உள்ள ராணிப்பேட்டையில் ரூ.9,000 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 2 லட்சம் கார்களை தயாரிக்கும் திறனுடன் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. சில வாரங்களுக்கு முன்பாக ரூ.9,000 கோடி முதலீடு ஒப்பந்தம் தமிழ்நாடு முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் கையெழுத்தாகியிருந்த நிலையில், தற்பொழுது தயாரிப்பு தொடர்பான திட்டங்கள் வெளியாகியுள்ளது. ஜாகுவார் லேண்ட் ரோவர் … Read more

இந்தியாவில் ஏப்ரிலியா டுவாரெக் 660 விற்பனைக்கு வெளியானது

இந்திய சந்தையில் ஏப்ரிலியா நிறுவன முதல் அட்வென்ச்சர் டுவாரெக் 660 (Aprilia Tuareg 660) பைக்கின் ரூ.18.85 லட்சம் முதல் ரூ.19.16 லட்சத்தில் மிக சிறப்பான ஆஃப் ரோடு சாகங்களுக்கு ஏற்ற செயல்திறனுடன் மூன்று விதமான நிறங்களை பெற்றிருக்கின்றது. Tuareg 660 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 659சிசி, லிக்விட் கூல்டு, பேரலல்-ட்வின் இன்ஜின், அதிகபட்சமாக 80bhp மற்றும் 79Nm டார்க் வழங்குகின்றது. இதில் ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷன் அமைப்பில் 43மிமீ அப் சைடு டவுன் ஃபோர்க் … Read more

ஸ்மார்ட் கீ வசதியுடன் 2024 யமஹா ஏரோக்ஸ் 155 விற்பனைக்கு வெளியானது

யமஹா நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற ஏரோக்ஸ் 155cc (Aerox) மேக்ஸி ஸ்டைல் ஸ்போர்ட்டிவ் ஸ்கூட்டரில் கூடுதலாக ஸ்மார்ட் கீ வசதி இணைக்கப்பட்ட மாடலை Version S என்ற பெயரில் ரூ.1.51 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கீ பெறப்பட்ட ஏரோக்ஸ் வெர்ஷன் எஸ் வேரியண்டில் சில்வர் மற்றும் ரேசிங் ப்ளூ என இரு நிறங்களை கொண்டதாக கிடைக்கின்றது. 2024 Yamaha Aerox 155cc Version S என்ஜின் உட்பட அடிப்படையான மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் … Read more

2024 யமஹா MT-15 V2 பைக்கின் சிறப்பு அம்சங்கள் மற்றும் ஆன்-ரோடு விலை

ஆர்15 அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள 2024 ஆம் வருடத்தின் யமஹா MT-15 V2 நேக்டு ஸ்டைல் ஸ்போர்டிவ் மாடலில் உள்ள பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன் ரோடு விலை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். மிக நேர்த்தியான எம்டி பைக்குகளுக்கு உரித்தான கம்பீரமான முரட்டுதனத்தை வெளிப்படுத்துகின்ற ஸ்டைலை பெற்றுள்ள எம்டி-15 வி2 பைக்கில் கூடுதலாக சியான் ஸ்ட்ரோம் DLX, சைபர் க்ரீன் DLX  என இரு புதிய நிறங்களுடன் தற்பொழுது 8 நிறங்களை கொண்டுள்ளது. 2024 Yamaha MT-15 … Read more

₹ 17.70 லட்சத்தில் சுசூகி ஹயபுஸா 25வது ஆண்டு விழா பதிப்பு வெளியானது

இந்தியாவில் சுசூகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் சிறப்பு எடிசன் ஹயபுஸா மாடலான 25வது ஆண்டு விழா பதிப்பை ரூ.17.70 லட்சம் விலையில் வெளியிட்டு இருக்கின்றது. சர்வதேச அளவில் சில மாதங்களுக்கு முன்பாகவே இந்த மாடல் கிடைக்க துவங்கிய நிலையில் தற்போது இந்திய சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது மிக நேர்த்தியான ஸ்டைலிங் மாற்றங்களை மட்டும் கொண்டுள்ள இந்த மாடலானது சாதாரண வேரியன்டை விட ரூபாய் 80 ஆயிரம் வரை கூடுதலான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு ஆரஞ்சு மற்றும் கருப்பு … Read more

இந்தியா வரவுள்ள ஃபோர்டு எவரெஸ்ட் உட்பட மூன்று மாடல் விபரம்

இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு வரவுள்ள ஃபோர்டு எவரெஸ்ட் எஸ்யூவி உட்பட C-வகை எஸ்யூவி மற்றும் எம்பிவி என இரு மாடல்களுக்கான டிசைன் காப்புரிமை பெற்றுள்ளதால் 2025 முதல் தனது மாடல்களை கொண்டு வரவுள்ளது. ஃபோர்டு இந்திய சந்தையை விட்டு வெளியேறிய நிலையில் மீண்டும் தனது மாடல்களுக்கான டிசைன் மற்றும் பெயர்களுக்கான காப்புரிமையை பதிவு செய்திருப்பதுடன் கூடுதலாக சென்னை தொழிற்சாலையை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளதால், முதல் எஸ்யூவி எவரெஸ்ட் 2025 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் வெளியாகலாம். ஃபோர்டு … Read more