2024 கியா சொனெட் காரில் கூடுதல் வசதிகள் அறிமுகம்

விற்பனையில் உள்ள புதிய 2024 கியா சொனெட் எஸ்யூவி காரில் கூடுதல் வசதிகள் பெற்ற HTE(O) மற்றும் HTK(O) என இரண்டு வேரியண்டுகள் சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற வேரியண்ட்களின் வசதிகளில் எந்த மாறங்களும் இல்லை. புதியதாக சொனெட்டில் இடம்பெற்றுள்ள வேரியண்டுகளில் சன்ரூஃப் வசதியை குறைந்த விலையில் வழங்கும் நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய HTE(O) வேரியண்ட் விலை ரூ.8.19 லட்சத்திலும், டீசல் மாடல் ரூ. 10 லட்சமாக உள்ளது. அடுத்த வந்த HTK(O) வேரியண்ட்டின் விலை ரூ.9.25 லட்சம் ஆகும். … Read more

₹ 54 லட்சத்தில் ஸ்கோடா சூப்பர்ப் விற்பனைக்கு வெளியானது

மீண்டும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்கோடா சூப்பர்ப் செடான் காரில் விலை ரூ.54 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. CBU முறையில் விற்பனைக்கு கிடைக்க உள்ள இந்த கார் 100 யூனிட்டுகள் மட்டுமே கிடைக்கும். சூப்பர்ப் காரில்  2.0 லிட்டர் பொருத்தப்பட்டு டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 188 BHP பவர் மற்றும் 320 Nm டார்க் உற்பத்தி செய்கின்றது. இதில் 7 வேக டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டும் இடம்பெற்றிருக்கின்றது. Skoda Superb இந்தியாவில் … Read more

டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்

டொயோட்டா நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள அர்பன் குரூஸர் டைசர் (Toyota Urban Cruiser Taisor) கிராஸ்ஓவர்  விலை ரூ.7.73 லட்சம் முதல் ரூ.13.03 லட்சத்தில் (எக்ஸ்ஷோரூம்) அமைத்துள்ளது. இந்த மாடலை பொருத்தவரை ஏற்கனவே சந்தையில் இருக்கின்ற மாருதி சுசூகி நிறுவனத்தின் ஃப்ரான்க்ஸ் காரின் அடிப்படையில் ரீபேட்ஜ் செய்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுசூகி மற்றும் டொயோட்டா நிறுவனத்தின் கூட்டணி மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு மாடல்களை மாருதி சுசூகி வசமிருந்த இருந்து டொயோட்டா நிறுவனம் பெற்று இருக்கின்றது. … Read more

ஏப்ரல் 10.., பஜாஜ் பல்சர் 250 விற்பனைக்கு வெளியாகிறது

வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகின்ற புதுப்பிக்கப்பட்ட 2024 பல்சர் N250, F250 பைக்குகள் பல்வேறு வசதிகளுடன் புதிய நிறங்களுடன் வரவுள்ளது. சமீபத்தில் பல்சர் வரிசை பைக்குகளில் இடம் பெற்றிருக்கின்ற என்.எஸ் மற்றும் என் சீரியஸ் பைக்குகளில் ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி எல்லாம் டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் புதுப்பிக்கப்பட்ட எல்ஈடி ஹெட்லைட் போன்ற பல்வேறு மாற்றங்கள் பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. 2024 Pulsar N250, F250 அதேபோல இந்த மாடலும் அடிப்படையான டிஜிட்டல் … Read more

எரிபொருள் பம்பில் கோளாறு கிளான்ஸாவை ரீகால் செய்த டொயோட்டா

சமீபத்தில் பலேனோ காருக்கு மாருதி திரும்ப அழைக்கும் அழைப்பை விடுத்திருந்த நிலையில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட டொயோட்டா கிளான்ஸா காரிலும் உள்ள எரிபொருள் மோட்டார் பம்பில் உள்ள கோளாறினை நீக்க 2,305 கார்களை நாடு முழுவதும் திரும்ப அழைத்துள்ளது. கடந்த ஏப்ரல் 2, 2019, முதல் அக்டோபர் 6, 2019 வரை தயாரிக்கப்பட்ட வாகனங்களில் இடம்பெற்றுள்ள ஃப்யூவல் மோட்டார் பம்பில் (Fuel Pump Motor component) உள்ள பிரசன்னையின் காரணமாக வாகனம் ஸ்டார்ட் செய்யும் பொழுது சிரமங்கள் உள்ளதாக … Read more

2024 கியா கேரன்ஸ் எம்பிவி விலை மற்றும் சிறப்புகள் | Automobile Tamilan

கியா நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான கேரன்ஸ் எம்பிவி மாடலில் கூடுதலாக டீசல் மேனுவல் கியர்பாக்ஸ் உட்பட பல்வேறு வேரியண்டுகளில் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டு மொத்தமாக 30 வேரியண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிதாக இணைக்கப்பட்டுள்ள Premium (O), Prestige (O), மற்றும் Prestige+ (O) என மூன்று வேரியண்டுகள் சேர்க்கப்பட்டிருப்பதுடன் டாப் எக்ஸ்-லைன் வேரியண்டில் டேஷ்கேம் மற்றும் 7 இருக்கை வகை ஆப்ஷனலாக உள்ளது. MY2024 Kia Carnes கேரன்ஸ் 2024 மாடலில் தொடர்ந்து 1.5 லிட்டர் பெட்ரோல், … Read more

Hero bikes – 56.21 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹீரோ மோட்டோகார்ப் FY’24

இந்தியாவில் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் ஒட்டு மொத்தமாக 2023-2024 நிதியாண்டில் சுமார் 56,21,455 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் 53,28,546 இரு சக்கர வாகனங்கள் விற்பனையுடன் ஒப்பீடுகையில் 5.49% வளர்ச்சி  அடைந்துள்ளது. ஆனால் கடந்த மார்ச் 24 விற்பனையில் 4,90,415 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்து முந்தைய மார்ச் 2023 உடன் ஒப்பீடுகையில் 5.57%. வீழ்ச்சி அடைந்துள்ளது. தொடர்ந்து 23 ஆண்டுகளுக்கு மேலாக … Read more

9.13 லட்சம் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்த ராயல் என்ஃபீல்டு | Automobile Tamilan

உலகின் முன்னணி நடுத்தர மோட்டார்சைக்கிள் (250cc-750cc) பிரிவின் தலைவராக உள்ள ராயல் என்ஃபீல்டு FY23-24 ஆம் ஆண்டில் 912,732 இரு சக்கர வாகனங்கள் விற்றுள்ள நிலையில் முந்தைய நிதியாண்டில் 834,895 யூனிட்களாக விற்பனை பதிவு செய்துள்ளதால் 9 % வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிறுவனத்தின் 350சிசி பைக்குகள் பிரிவில் உள்ள மாடல்களின் மூலம் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை 90 % வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராயல் என்ஃபீல்டு மார்ச் 2023-ல் விற்பனை செய்யப்பட்ட 72,235 யூனிட்களிலிருந்து 5% அதிகரித்து … Read more

FY ’24ல் 7.77 லட்சம் கார்களை விற்பனை செய்த ஹூண்டாய் இந்தியா | Automobile Tamilan

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரான ஹூண்டாய் இந்தியா FY 23-24 நிதியாண்டில் சுமார் 7,77,876 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய நிதியாண்டில்  7,20,565 யூனிட்டுகளுடன் ஒப்பீடுகையில் 8 % வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. உள்நாட்டில் ஹூண்டாய் 2023-2024 ஆம் நிதியாண்டில்  6,14,721 யூனிட்டுகளும், கடந்த 2022-2023 ஆம் ஆண்டில் 5,67,546 யூனிட்டுகளை விற்பனை செய்திருந்தது. ஏற்றுமதி சந்தையில் 2022-23 நிதியாண்டில் 1,53, 019 யூனிட்களாக இருந்த எண்ணிக்கை 7 சதவீதம் உயர்ந்து 1,63,155 யூனிட்டுகளாக … Read more

இந்தியாவில் எம்ஜி மோட்டார் விற்பனை நிலவரம் FY’24 | Automobile Tamilan

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் மாரச் 2024 விற்பனை 23 % வீழ்ச்சி அடைந்திருந்தாலும் ஒட்டு மொத்த 2023-2024 ஆம் நிதியாண்டின் விற்பனை முந்தைய நிதி வருடத்துடன் ஒப்பீடுகையில் 14 % வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்ஜி கடந்த ஆண்டு இதே மாதத்தில் 6,051 யூனிட்களை விற்பனை செய்திருந்த நிலையில், இந்த மார்ச் மாதத்தில் சில்லறை விற்பனையில் 23 சதவீதம் சரிவடைந்து 4,648 யூனிட்டுகளாக மட்டுமே பதிவாகியுள்ளது. 2023-24 நிதியாண்டில், 2022-23 நிதியாண்டில் விற்பனையில் ஆண்டு வளர்ச்சியில் சுமார் … Read more