மகாராஷ்டிராவில் மாட்டை பாலியல் வன்புணர்வு செய்தவர் கைது

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மாட்டை பாலியல் வன்புணர்வு செய்த 22 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக IPC பிரிவு 377ல் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் இஸ்ரேல் துணைப் பிரதமர் சந்திப்பு

டெல்லி: அரசு முறைப்பயணமாக டெல்லி வந்துள்ள இஸ்ரேல் துணைப்பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான பெஞ்சமின் கான்ஸ், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். சந்திப்பின் போது பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்யும் இஸ்ரேல் நிறுவனங்கள், இந்தியாவுடன் இணைந்து உற்பததி செய்ய முன்வரவேண்டும். இஸ்ரேலுடனான 30ஆண்டுகால ராஜீய உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் கூட்டு ஆராய்ச்சிகளும், உற்பத்தி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களும் செயல்படுத்தப்படும் என பிரதமர் உறுதி அளித்தார்.

மாநாடு வசூல் 117 கோடி: தயாரிப்பாளர் தகவல்

மாநாடு வசூல் 117 கோடி: தயாரிப்பாளர் தகவல் 6/3/2022 3:04:54 PM வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு, கடந்த நவம்பர் மாதம் வெளியானது.  இதில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரிதர்ஷன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். யுவன் இசை அமைத்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் 117 கோடி ரூபாய் வசூலித்ததாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதற்காக அவர் சிம்பு, வெங்கட்பிரபு, யுவன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றி … Read more

மதம் மாறுவது எந்த சட்டத்தின்படியும் தடை செய்யப்படவில்லை: டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து

டெல்லி: தனிநபர் ஒருவர் தான் விரும்பிய மதத்தை பின்பற்ற உரிமை உண்டு என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒருவர் விரும்பும் மதத்துக்கு மாற அரசியல் சட்டப்படி உரிமை உண்டு. மதம் மாறுவது எந்த சட்டத்தின்படியும் தடை செய்யப்படவில்லை என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.   

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 9 பேர் நிரந்தர நீதிபதிகளாக நாளை பதவியேற்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 9 பேர் நிரந்தர நீதிபதிகளாக நாளை பதவியேற்க உள்ளனர். கூடுதல் நீதிபதிகளாக உள்ள சந்திரசேகரன், சிவஞானம், இளங்கோவன், ஆனந்தி, கண்ணம்மாள், சதிக்குமார், முரளிசங்கர், மஞ்சுளா, தமிழ்ச்செல்வி ஆகியோர் நாளை நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர்.

இசை அமைப்பாளரின் காதலியான நடிகரின் முன்னாள் மனைவி

இசை அமைப்பாளரின் காதலியான நடிகரின் முன்னாள் மனைவி 6/3/2022 3:13:15 PM சிறுத்தை, வீரம், விஸ்வாசம், படங்களை இயக்கிய சிவாவின் தம்பி பாலா. தமிழில் அறிமுகமாகி சில படங்களில் நடித்த பாலா மலையாளத்தில் முன்னணி நடிகராகி ஏராளமான படங்களில் நடித்தார். கடந்த 2010ம் ஆண்டு அம்ரிதா சுரேஷ் என்கிற மலையாள பாடகியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு பரஸ்பரம் விவாகரத்து செய்து கொண்டு … Read more

ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை

டெல்லி: ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ஆலோசித்த நிலையில் தற்போது உயர்மட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஐந்து ஆலோசனையில் ஆளுநர் மனோஜ் சின்ஹா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ராணுவ தளபதி பங்கேற்றுள்ளனர்.

தென்கொரியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கம்

சியோல்: தென்கொரியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஜூன் 8ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தாத பயணிகளுக்கு கட்டாய தனிமைப்படுத்தல் இல்லை. சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகிறது. இருப்பினும் பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் சார்பிக்க வேண்டியது அவசியம் என தென்கொரிய பிரதமர் ஹான் டக்-சூ தெரிவித்துள்ளார்.

பேருந்து – சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கமலாபுரா கிராமத்தில் பேருந்து – சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கோவாவில் இருந்து ஐதராபாத்துக்கு சுற்றுலா பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து கர்நாடகாவில் உள்ள குல்பர்கா மாவட்டம் வழியாக சென்று கொண்டிருந்தபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த சரக்கு வாகனம் மீது மோதியது.விபத்து நடைபெற்ற இடத்தில் ஒரு பாலம் இருந்ததால் சரக்கு வாகனம் மீது மோதிய பேருந்து அந்த … Read more

10, +2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை

சென்னை: 10, +2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. திட்டமிடப்பட்ட தேதியில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்பதால் ஆசிரியர்கள் தவறாமல் வர உத்தரவிட்டுள்ளது.