வணிகர்கள் காவல்துறை அவசர உதவியை நாட 'வணிகர் உதவி' என்ற வசதி காவல் உதவி செயலியில் அமைப்பு..!!

சென்னை: வணிகர்கள் காவல்துறை அவசர உதவியை நாட ‘வணிகர் உதவி’ என்ற வசதி காவல் உதவி செயலியில் அமைக்கப்பட்டுள்ளது. ரவுடிகளின் இடையூறு, மாமூல், கந்து வட்டி போன்ற புகார்களை அளிக்க செயலியில் வசதி செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

விஸ்தாரா விமான நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது விமான போக்குவரத்து இயக்குநரகம்

டெல்லி: விஸ்தாரா விமான நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது. விமானத்தை டேக் ஆப் செய்வது, தரை இயக்குவதற்கான அனுமதி விதிகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.

நீட் விலக்கு சட்டமுன்வடிவை ஜனாதிபதிக்கு அனுப்பியற்காக ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி

சென்னை: சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன்வடிவுகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் முதல்வர் வலியுறுத்தினார். நீட் விலக்கு கோரும் சட்டமுன்வடிவை  ஜனாதிபதிக்கு அனுப்பியதாக ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்டமுன்வடிவு 2022க்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நடிகையின் பாலியல் வன்கொடுமை புகார்: மலையாள பட நடிகர் விஜய்பாபுவிடம் 2ம் நாளாக விசாரணை.!

திருவனந்தபுரம்: கேரளாவில் பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக மலையாள பட நடிகர் விஜய்பாபுவிடம் 2ம் நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. நடிகையின் புகார் பற்றி எர்ணாகுளத்தில் நடிகரும், தயாரிப்பாளருமான விஜய்பாபுவிடம் விசாரணை நடக்கிறது. கேரளாவை சேர்ந்த நடிகரும், சினிமா தயாரிப்பாளருமான விஜய்பாபு மீது மலையாள நடிகை ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்தார். விஜய்பாபு, தன்னை வீட்டுக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து நடிகர் விஜய்பாபு, அந்த நடிகையை பற்றி சமூக ஊடகங்களில் கருத்து … Read more

கலைஞர் எழுதுகோல் விருதுக்கு மூத்த பத்திரிக்கையாளர் ஐ.சண்முகநாதன் தேர்வு

சென்னை: கலைஞர் எழுதுகோல் விருதுக்கு மூத்த பத்திரிக்கையாளர் ஐ.சண்முகநாதன் தேர்வாகியுள்ளார். திருச்சியை சேர்ந்த ஐ.சண்முகநாதன் 70 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் பணியாற்றி வருகிறார்.   பத்திரிக்கையாளர் ஐ.சண்முகநாதனுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வழங்குகிறார்.

ஜம்மு காஷ்மீரில் குண்டுவெடிப்பு ராணுவ வீரர்கள் 3 பேர் படுகாயம்

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் ராணுவ வீரர்கள் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு தனியார் வாகனத்தில் ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக வந்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் 3 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஷோபியான் சேடோவில் நடந்த குண்டுவெடிப்பில் … Read more

கடந்த ஓராண்டில் ரூ.409 கோடியில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 189 பணிகள் நடைபெற்றுள்ளன: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: கடந்த ஓராண்டில் ரூ.409 கோடியில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 189 பணிகள் நடைபெற்றுள்ளன என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட ரிப்பன் கட்டிடத்தை பொதுமக்கள் பார்வைக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.கஸ்டாலின் உரையாற்றினார்.

ஏப்ரலில் 16 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களின் கணக்குகள் தடை: வாட்ஸ் அப் அதிரடி

புதுடெல்லி: ஏப்ரல் மாதத்தில் 16 லட்சத்திற்கும் அதிகமான இந்திய பயனர்களின் கணக்குகளை தடை செய்துள்ளதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. மொபைல் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப், செயலியில் தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டை தடுக்க ஏப்ரல் மாதத்தில் 16 லட்சத்திற்கும் அதிகமான இந்திய பயனர்களின் கணக்குகளை தடை செய்துள்ளது என்று நிறுவனத்தின் மாதாந்திர அறிக்கை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, பயனர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் நிறுவனம், 122 கணக்குகளை தடைசெய்தது. அதே நேரத்தில் வாட்ஸ் அப்பில் தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டை தடுக்க … Read more

யுபிஎஸ்சி தேர்வுகள் காரணமாக ஜூன் 4, 5 தேதிகளில் சென்னை புறநகர் ரயில்கள் வார நாட்கள் அட்டவணைப்படி இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகள் காரணமாக ஜூன் 4 மற்றும் 5ம் தேதிகளில் சென்னை புறநகர் ரயில்கள் வார நாட்கள் அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தேர்வுகளுக்கு செல்லும் தேர்வர்கள் பயனடையும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

காஷ்மீர் பள்ளி ஆசிரியை கொலை ராகுல் புகார்; அமித்ஷா நாளை ஆலோசனை

டெல்லி: காஷ்மீரில் பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒன்றிய அரசை ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுனருடன் நாளை அவசர ஆலோசனை நடத்த உள்ளார். ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்னி பாலா. பள்ளி ஆசிரியையான இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளியில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.காஷ்மீர் பண்டிட் இனத்தை சேர்ந்த அந்த ஆசிரியை சுட்டு கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது … Read more