கர்நாடகாவில் லுலு குழுமம் ரூ.2,000 கோடியை முதலீடு செய்ய அரசுடன் ஒப்பந்தம்

பெங்களூரு: அபுதாபியை சேர்ந்த லுலு குழுமம் கர்நாடகாவில் ரூ.2,000 கோடியை முதலீடு செய்ய அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 4 வணிக வளாகங்கள், ஹைப்பேர் மார்க்கெட் மற்றும் ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்காக லுலு குழுமம்  ரூ.2,000 கோடியை முதலீடு செய்துள்ளது.  

டெல்லி துணை நிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனாவை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு

டெல்லி: டெல்லி துணை நிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனாவை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான அனில் பைஜால் கடந்த 2016-ம் ஆண்டு டெல்லியில் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவரின் பதவி காலத்தில் அவருக்கும் டெல்லியில்  ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக மோதல் ஏற்பட்டது.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அனில் பைஜால் ஆளுநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதையடுத்து தனிப்பட்ட … Read more

ஹெல்மேட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக மாலை 6 மணி நேர நிலவரப்படி 1903 வழக்குகள் பதிவு

சென்னை: ஹெல்மேட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக மாலை 6 மணி நேர நிலவரப்படி 1903 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் பின் இருக்கையில் அமர்ந்து இருந்ததாக 2023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் சென்னையில் 3926 ஹெல்மெட் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

தலைநகர் மணிலாவில் இருந்து கியூசான் சென்ற படகில் தீ விபத்து

மணிலா: தலைநகர் மணிலாவில் இருந்து கியூசான் சென்ற படகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 5 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 3 டன் கெட்டு போன இறைச்சி பறிமுதல்

சென்னை: கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 3 டன் கெட்டு போன இறைச்சி பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் கெட்டு போன இறைச்சி கொண்டு வந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாடிக்கையாளராக நடித்த போலீஸ்காரரிடம் கேள்வி 11 பெண்களில் யார் உங்களுக்கு வேணும்?: மசாஜ் சென்டர் நிர்வாகி உட்பட 12 பேர் கைது

புதுடெல்லி: டெல்லியில் உள்ள மாலில் செயல்பட்ட மசாஜ் சென்டரில் விபசாரத்தில் ஈடுபட்ட 11 பெண்கள் உட்பட 12 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தலைநகர் டெல்லியின் ஷாஹ்தரா பகுதியில் உள்ள தனியார் மாலில், ‘ஸ்பா’ மற்றும் மசாஜ் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு விபசார தொழில் அமோகமாக நடப்பதாக டெல்லி போலீசுக்கு புகார் சென்றது. அதையடுத்து போலீஸ்காரர் ஒருவர் வாடிக்கையாளரை போன்று, அந்த மசாஜ் சென்டருக்கு சென்றார். அவரிடம் ரூ.1,000 வசூலித்துக் கொண்டு மசாஜ் … Read more

மே 27-ம் தேதி முதல் மதுரை – தேனி இடையே பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது: தெற்கு ரயில்வே அறிவிப்பு

மதுரை: மே 27-ம் தேதி முதல் மதுரை – தேனி இடையே பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை-தேனி இடையே பயணிகள் ரயில் இயக்கப்படுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளது. வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிப்ட்டி ஆகிய நிலையங்களில் ரயில் நின்று செல்லும் என ரயில்வே துறை கூறியுள்ளது.

விபத்தில் சிக்கிய லாரியில் இருந்த மதுவை போட்டிபோட்டு அள்ளிச்சென்ற குடிமகன்கள்: உறவினர்கள், நண்பர்களையும் வரவழைத்து உற்சாகம்

திருமலை: விபத்தில் சிக்கிய லாரியில் ஏற்றி வந்த பீர் பாட்டில்கள் சாலையில் சிதறியது. இதையறிந்த குடிமகன்கள் போட்டிபோட்டு அள்ளிச் சென்றனர். மேலும் சிலர் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து உற்சாகமடைந்தனர்.ஆந்திர மாநிலம், காகுளத்தில் இருந்து சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளிக்கு பீர் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நேற்று சென்றது. பிரகாசம் மாவட்டம் சிங்கரயகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரியில் கொண்டு செல்லப்பட்ட பீர் பாட்டில்கள் … Read more

உயர்தர மதுபான விடுதிகளுக்கான வணிக துறையின் வரி வசூலிப்பதற்கு தடை: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: உயர்தர மதுபான விடுதிகளுக்கான வணிக துறையினரால் விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்ய உத்தரவிட கோரிய வழக்கில் வரி வசூலிக்க வணிகவரி துறைக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகாசியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உதவியுடன் ரயில் தண்டவாளங்களை தகர்க்க சதி திட்டம்: மாநிலங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை

புதுடெல்லி: பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உதவியுடன் இந்தியாவில் உள்ள ரயில் தண்டவாளங்களை தகர்க்க திட்டமிட்டுள்ளதாக, ஒன்றிய மற்றும் மாநிலங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள ரயில் தண்டவாளங்களில் குண்டுவெடிப்பு நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. முக்கியமாக பஞ்சாப் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள ரயில் பாதைகளை தகர்க்க ஐஎஸ்ஐ திட்டமிட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதையடுத்து உளவுத்துறை, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுதொடர்பான சுற்றறிக்கையில், ‘சரக்கு போக்குவரத்தை முற்றிலும் … Read more