இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியும் அறிவிப்பு

டெல்லி :இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.ரோகித் சர்மா தலைமையிலான அணியில் கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), சுப்மன் கிளை இடம் பெற்றுள்ளனர். கொரோனாவால் இங்கிலாந்து அணிக்கெதிரான 5-ம் டெஸ்ட் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் நடக்க உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது

நெல்லை கல்குவாரி விபத்தில் இறந்தோரின் குடும்பத்துக்கு கல்குவாரி சங்கம் சார்பில் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி

நெல்லை: நெல்லை கல்குவாரி விபத்தில் இறந்தோரின் குடும்பத்துக்கு கல்குவாரி சங்கம் சார்பில் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோருக்கு இறுதி சடங்கு செலவாக ரூ.25,000ம் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டுப்புற நிகழ்ச்சியில் நடனமாடிய நடிகை மீது வழக்கு

மும்பை: மும்பையில் நாட்டுப்புற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடிய நடிகை வைஷ்ணவி பாட்டீல் உள்ளிட்ட மூன்று பேர் மீது போலீசார் வழக்குபதிந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வரலாற்று சிறப்புமிக்க லால் மஹாலில், சத்ரபதி சிவாஜி தொடர்பான நாட்டுப்புற நடன நிகழ்ச்சி ஒன்று கடந்த கடந்த ஏப்ரல் 16ம் தேதி நடத்தப்பட்டது. நடிகையும், மாடல் அழகியுமான வைஷ்ணவி பாட்டீல் உள்ளிட்டோர் நடனமாடினர். மராத்தி திரைப்படம் ஒன்றிற்காக, இந்த நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆனால், நடனத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் … Read more

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவித்துள்ளது கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வீரர் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். டி-20 இந்திய அணியில் ரிஷப் பந்த் (துணை கேப்டன்), இஷான் கிஷன் , தீபக் ஹீடா , ஸ்ரேயாஸ் அய்யர் சேர்க்கபட்டுள்ளனர்

எரிபொருள் விலை குறைப்பு குறித்த அறிவிப்பால் மக்களை முட்டாளாக்குவதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்: ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி: எரிபொருள் விலை குறைப்பு குறித்த அறிவிப்பால் மக்களை முட்டாளாக்குவதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் விலை 110 ரூபாயையையும், டீசல் விலை 100 ரூபாயையும் தாண்டி விற்பனையானதால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. கடந்த 45 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில்,  பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து நேற்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் … Read more

நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கி இருந்த 6-வது நபரின் உடல் பாறை இடுக்கில் இருப்பது கண்டறியப்பட்டது

நெல்லை: நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கி இருந்த 6-வது நபரின் உடல் பாறை இடுக்கில் இருப்பது கண்டறியப்பட்டது. பாறை இடுக்கில் உள்ளவரின் உடலை மீட்கும் பணியில் மீட்பு படையினர் முழு விசில் ஈடுபட்டுள்ளனர். 8 நாட்களுக்கு பின் 6-வது நபரின் உடல் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவரது உடலை  மீட்கும் பனியில் மீட்பு படையினர் தீவிரமாக  செயல்பட்டு வருகிறார்கள்

பழங்குடியின மக்களின் தொடர் எதிர்ப்பால் தபி – நர்மதா நதிகள் இணைப்பு திட்டம் ரத்து: குஜராத் தேர்தல் தோல்வி அச்சத்தால் பாஜக பல்டி

காந்திநகர்: குஜராத் தேர்தலுக்கு மத்தியில், பழங்குடியின மக்களின் தொடர் எதிர்ப்பால் தபி – நர்மதா நதிகள் இணைப்பு திட்டம் ரத்து செய்யப்படுதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்தர் படேல் தலைமையிலான பாஜக அரசு நடக்கிறது. சவுராஷ்டிரா மற்றும் கட்ச் ஆகிய பகுதி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அம்மாநில அரசு தபி – நர்மதா நதிகள் இணைப்பு திட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், இத்திட்டத்திற்கு பழங்குடியின சமூக மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து … Read more

பாலிடெக்னிக் கல்லூரி படிப்புகளுக்கு கட்டணம் உயர்வு: AICTE அறிவிப்பு

சென்னை: பாலிடெக்னிக்கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சம் ரூ.67,900 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஒரு செமஸ்டருக்கு அதிகபட்சமாக ரூ.1,49,900 ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் B.E., B.Tech., B.Arch. ஆகிய படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு: புதிய கட்டண விகிதத்தை வெளியிட்டது AICTE

டெல்லி: நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் B.E., B.Tech., B.Arch. ஆகிய படிப்புகளுக்கான கட்டணம் உயர்ந்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில்யில்; B.E., B.Tech., B.Arch., படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சரமாக ரூ.1,89,800 ஆக நிர்ணயம் டிப்ளமோ படிப்புகளுக்கு குறைந்தபட்சமாக ஒரு செமஸ்டருக்கு ரூ.67,900, அதிகபட்சமாக ரூ.1,40,900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. M.E., M.Tech., M.Arch., படிக்க ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக … Read more

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்தப்பட்டுள்ளது புதிய கட்டண விகிதத்தை வெளியிட்டது AICTE

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்தப்பட்டுள்ளது புதிய கட்டண விகிதத்தை வெளியிட்டது  AICTE. நாடு முழுவது உள்ள தொழிநுட்ப கல்வி நிறுவனங்களில் B.E, B.Tech, B.Arch படிப்புகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.1,89,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.