புறாவை பிடிக்க முயன்ற மாணவர் கிணற்றில் விழுந்து பலி

சேலம்: தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை பெரியார் நகரில் புறாவை பிடிக்க முயன்ற மனோஜ்குமார்(22) கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். மாணவர் மனோஜ்குமார் தனது வீட்டின் அருகே 70 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.

குரங்கம்மை தடுக்க தீவிர கண்காணிப்பு: ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: கொரோனா வைரசைத் தொடர்ந்து தற்போது இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ‘மங்கிபாக்ஸ்’ எனப்படும் குரங்கம்மை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இங்கிலாந்தில் குரங்கம்மை பாதித்தோர் எண்ணிக்கை 20 ஆக நேற்று அதிகரித்தது. இந்த வைரஸ் பாதித்தவர்களுக்கு சின்னம்மை, பெரியம்மைவிட அளவில் பெரிய கொப்பளங்கள் உடல் முழுவதும் நூற்றுக்கணக்கில் ஏற்படும். இந்நிலையில், இந்தியாவில் இந்த வைரஸ் பரவுவதை தடுக்க ஒன்றிய சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘‘நாடு முழுவதும் அனைத்து விமான … Read more

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

உதகை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி ஊட்டியில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கருணை உள்ளம் கொண்டவர் தனது தந்தை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து ராகுல் காந்தி உருக்கம்..!

டெல்லி: கருணை உள்ளம் கொண்டவர் தனது தந்தை என முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக்கு வந்த ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி மறைந்து 31ம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி … Read more

சென்னையில் 1 கிலோ தக்காளி விலை ரூ.90க்கு விற்பனை

சென்னை: சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் 1 கிலோ தக்காளி விலை ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனை நிலையங்களில் 1 கிலோ தக்காளி விலை ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் ஒரே நாளில் 2,323 பேருக்கு கொரோனா.. 25 பேர் உயிரிழப்பு.. 2,346 பேர் குணமடைந்தனர்!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 2,323 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,34,145 ஆக உயர்ந்தது.* புதிதாக 25 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட வாய்ப்பு

சேலம்: காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் 115.35 அடியை எட்டியது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டினால் வழக்கமாக திறக்கப்படும் ஜூன் 12க்கு முன்பாகவே பாசனத்திற்கு நீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

சிறப்பு குழுவை அறிவித்த ஓரிரு நாளிலேயே கோதுமை ஏற்றுமதிக்கு தடை ஏன்?..விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கையா?

சென்னை:  ‘இந்தியாவில்  உள்ள 140 கோடி பேருக்கு  வழங்கும் அளவுக்கு உணவு தானியம் உள்ளது. எனவே, உலக வர்த்தக அமைப்பு இன்று அனுமதி அளித்தால், இந்தியா நாளை முதலே உலக நாடுகளுக்கு உணவு தானியங்களை ஏற்றுமதி செய்யத் துவங்கும்’ – கடந்த ஏப்ரல் 11ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோபைனிடம் பிரதமர் நரேந்திர மோடி அழுத்தம் திருத்தமாக கூறிய வார்த்தைகள்தான் இவை. இவ்வளவு ஏன்?… கோதுமை ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய மொராக்கோ, துனிசியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் சம்பத் உள்ளிட்ட 1,500 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சம்பத் உள்ளிட்ட 1,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் பேருந்து நிலையம் வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதை கண்டித்து நேற்று அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக புதுநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோடை விடுமுறையால் குவியும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க 12 மணி நேரம் காத்திருப்பு: 2 கிமீ தூரத்துக்கு நீண்ட வரிசை

திருமலை: கோடை விடுமுறையால் திருப்பதியில் பக்தர்களின் வருகை அதிகரித்து, 12 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது அனைத்து மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகளில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திருப்பதி  ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய தமிழகம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது. கொரோனா குறைந்து வருவதால், இலவச தரிசனத்தில் கட்டணமின்றி தரசிக்க வரும் பக்தர்கள், வைகுண்டம் வளாகத்தில் உள்ள 31 … Read more