பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எதிரொலி திருப்பதி கோயிலில் பக்தர்கள் அலைமோதல்: 12 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

திருமலை: தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளித்துள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் அலைமோதுகின்றனர். இதனால் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  கொரோனா பரவல் தடுப்பு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. தொற்று எண்ணிக்கை குறைந்தபோது ஆன்லைனில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதனால் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் சரிவர செயல்படாமல் விடுமுறை … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவேன்: சிஎஸ்கே கேப்டன் தோனி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவேன் என சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியுள்ளார். சென்னைக்கு நன்றி சொல்லாமல் இருப்பது நியாயமல்ல, ரசிகர்களை ஏமாற்றுவது சரியாகாது என தோனி தெரிவித்துள்ளார்.

கோட்டயம் அருகே இரட்டை ரயில் பாதை பணிகள் நாகர்கோவில் ரயில் உட்பட 21 ரயில்கள் ரத்து

திருவனந்தபுரம்: கோட்டயம் அருகே இரட்டை ரயில் பாதைக்கான பணிகள் நடைபெறுவதால் இன்று முதல் நாகர்கோவில் உள்பட 21 ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.  திருவனந்தபுரம்- மங்களூரு இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. திருவனந்தபுரத்திலிருந்து கர்நாடக மாநிலம் மங்களூரு செல்வதற்கு கோட்டயம் மற்றும் ஆலப்புழா ஆகிய இரண்டு பாதைகள் உள்ளன. இதில் கோட்டயம் வழியாக உள்ள பாதையில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் … Read more

வாரிசு சான்று வழங்க லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர், விஏஓ கைது

திருச்சி: மண்ணச்சநல்லூரில் வாரிசு சான்று வழங்க லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர் மற்றும் விஏஓ ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணிக்கம் என்பவரிடம் ரூ.12,000 லஞ்சம் பெட்ரா வருவாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் விஏஓ இளவரசன் கைது செய்யப்பட்டனர்.

2021-22ம் நிதியாண்டில் ஒன்றிய அரசுக்கு ரூ.30 ஆயிரத்து 307 கோடியை ஈவுத் தொகையாக வழங்க ரிசர்வ் வங்கி முடிவு

டெல்லி: 2021-22ம் நிதியாண்டில் ஒன்றிய அரசுக்கு ரூ.30 ஆயிரத்து 307 கோடியை ஈவுத் தொகையாக வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு ஈவுத் தொகையை வழங்குவது நடைமுறையான ஒன்று ஆகும். இதேபோல் 2020-2021 ம் நிதியாண்டிற்கான ஈவுத்தொகையாக சுமார் ரூ. 99 ஆயிரத்து 122 கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிமாற்றம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. முந்தைய ஆண்டை காட்டிலும் தற்போது ஈவுத்தொகை குறைவு என்றாலும் இந்த … Read more

விக்ரமின் 'கோப்ரா' ஆகஸ்ட் 11-ம் தேதி ரிலீஸ்!!

சென்னை: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஆ.ஆர்.ரகுமான் இசையில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கோப்ரா’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

ஆட்சேர்ப்பு முறைகேடு சம்பவத்தில் புதிய வழக்கு; லாலு வீட்டில் சிபிஐ சோதனை.! பீகாரில் பரபரப்பு

பாட்னா: கால்நடைத் தீவன ஊழல் விவகாரம் தொடர்பாக டொராண்டா கருவூலத்தில்  இருந்து சட்டவிரோதமாக பணம் எடுத்த வழக்கில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரும்,  பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவுக்கு ஜார்க்கண்ட் உயர்  நீதிமன்றம் கடந்த மாதம் 22ம் தேதி ஜாமீன் வழங்கியது. தொடர்ந்து அவர் சில  நாட்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன் பிறகு அவரது மூத்த  மகள் மிசா பாரதியின் டெல்லி வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.வழக்கின்  விசாரணைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் … Read more

சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் மீண்டும் தீ: கரும்புகை வெளியேறுவதால் மக்கள் அவதி

சென்னை: சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டு புகை வெளியேறுவதால் மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள் . தீயை அணைக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்களுடன் தீயணைப்பு வீரர்களும்  ஈடுபட்டுள்ளனர். கொடுங்கையூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ இரவுக்குள் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தகவல் தெரிவித்துள்ளார். 

கார்த்தி சிதம்பரத்தை தற்போது கைது செய்யும் எண்ணம் இல்லை: சி.பி.ஐ தகவல்

டெல்லி: கார்த்தி சிதம்பரத்தை தற்போது கைது செய்யும் எண்ணம் இல்லை என்று டெல்லி உயர்நநீதிமன்றத்தில் சி.பி.ஐ தகவல் தெரிவித்துள்ளது . கைது செய்வதாக இருந்தால் 3 நாள் முன்னர் தெரியப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைக்கு சி.பி.ஐ பதில் அளித்துள்ளது.

புதுக்கோட்டையில் புதையல் எடுத்து தருவதாக பெண்ணிடம் ரூ.75,000 பெற்று மோசடி செய்த புகாரில் 3 பேர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் புதையல் எடுத்து தருவதாக பெண்ணிடம் ரூ.75,000 பெற்று மோசடி செய்த புகாரில் 3 பேரை கைது செய்தனர். மண்டையூர் கிராமத்தில் முத்துலட்சுமி என்பவரிடம் மோசடி செய்த மணி, முப்புலி, ராசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.