பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு வரவேற்கதக்கது: டிடிவி தினகரன்

சென்னை: பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு வரவேற்கதக்கது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அற்புதம்மாள் என்ற தாய் நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் நீண்டகாலம் நடத்திய சட்டப்போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. ஆளுநர் போன்ற பதவியிலிருப்பவர்கள் மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முடிவை மதித்து செயல்படவேண்டியதன் அவசியத்தை இத்தீர்ப்பு உறுதிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. ‘தாமதிக்கப்பட்ட நீதி; மறுக்கப்பட்ட நீதி’ என்பதை உணர்ந்து எதிர்காலத்திலாவது இத்தகைய பிரச்னைகளில் அதிகாரத்தில் இருப்பவர்கள் உரிய நேரத்தில் முடிவெடுக்கவேண்டும். பேரறிவாளனைத் தொடர்ந்து எஞ்சிய 6 … Read more

கட்சியில் இருந்து விலகுவதாக குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் ஹர்திக் படேல் அறிவிப்பு

காந்திநகர்: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் ஹர்திக் படேல் அறிவித்து உள்ளார்.  குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஹர்திக் படேல் விலகியுள்ளதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, இன்று நான் தைரியமாக காங்கிரஸ் கட்சியின் பதவி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது முடிவை எனது சகாக்கள் மற்றும் குஜராத் … Read more

பேரறிவாளனுக்கு 30 ஆண்டுகளாக இழைக்கப்பட்ட அநீதி வீழ்த்தப்பட்டது: தொல்.திருமாவளவன்

சென்னை: ஒரு தாயின் அறப்போர் வென்றது; அற்புதம் அம்மாளின் நெடும்போருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். அனைத்து சனநாயக சக்திகளின் நல்லாதரவு மற்றும் தமிழக அரசு நல்கிய ஒத்துழைப்பால் விளைந்த நீதி. நீதிபதிகளின் நேர்மைக்கு பாராட்டுகள். பேரறிவாளனுக்கு 30 ஆண்டுகளாக இழைக்கப்பட்ட அநீதி வீழ்த்தப்பட்டது. ஒரு நிரபராதிக்கு எதிரான இந்த அநீதிக்கு காரணமானவர்களுக்குச் சட்டம் என்ன தண்டனை வழங்கப் போகிறது? இத்தகைய கேள்விக்கு இங்கே விடை இல்லை. பாதிக்கப்பட்டுள்ள … Read more

ஆளுநர் காலதாமதம் செய்தது தவறு.. பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் : உச்சநீதிமன்ற தீர்ப்பின் விவரம்!!

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளனை முழுமையாக விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுவித்தனர்.161வது பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தினால் உச்சநீதிமன்றமே முடிவெடுக்க வழிவகுக்கிறது 142 பிரிவு. உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், ‘ஆளுநர் காலதாமதம் செய்ததால் நீதிமன்றமே தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுவிக்கிறது. … Read more

பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது. பேரறிவாளனை விடுதலை செய்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் ஹர்திக் படேல்

குஜராத்: காங்கிரஸ் கட்சியில் இருந்து ஹர்திக் படேல் விலகியுள்ளார். குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஹர்திக் படேல் விலகியுள்ளதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பேரறிவாளன் வீட்டுக்கு உறவினர்கள் வருகை

சென்னை: ஜோலார்பேட்டையில் உள்ள பேரறிவாளன் வீட்டுக்கு, சகோதரி அன்புமணி, தந்தை குயில்நாதன் வந்துள்ளார். பேரறிவாளன் விடுதலை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கும் நிலையில் உறவினர்கள் வந்துள்ளார்.

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1,829 ஆக அதிகரிப்பு.. 33 பேர் பலி : ஒன்றிய சுகாதாரத்துறை

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 1,829 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,27,199 ஆக உயர்ந்தது.* புதிதாக 33 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

ஒகேனக்கல் ஆற்றில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!!

சேலம் : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காலை 6.00 மணி நிலவரப்படி 28,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி, ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் சவாரிக்கும், பொதுமக்கள் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இன்று, காலை முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை  தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது : அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூர் : தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது என்று தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மழையின் காரணமாக கடந்த 2 நாட்கள் மின் நுகர்வு குறைந்துள்ளது என்றும் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் சொந்த மின் உற்பத்தி 50 சதவீதத்தை எட்டும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.