வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் – ஆணையர் அஜய் மிஸ்ரா நீக்கம்..!!

லக்னோ: வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் – ஆணையர் அஜய் மிஸ்ரா நீக்கப்பட்டனர். ஞானவாபி மசூதி நிர்வாக குழு தாக்கல் செய்த மனுவை ஏற்று ஆணையரை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. வாரணாசி நீதிமன்றம் மசூதியை ஆய்வு செய்ய நியமித்த ஆணையர் அஜய் மிஸ்ரா பாரபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது.

ரஷ்ய அதிபர் புதின் கனடா நாட்டிற்குள் நுழையத் தடை

கனடா : ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த சுமார் 1,000 பேர் தங்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்யும் மசோதாவை கனடா அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து ரஷ்யா மீது பல தடைகளை கனடா விதித்த நிலையில், கனடாவிற்குள் நுழைய புதினுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எல்ஐசி பங்குகள் மந்தமான அறிமுகம்.! முதல் நாளில் ரூ.42,500 கோடி இழப்பு: முதலீட்டாளர்கள் ஏமாற்றம்

புதுடெல்லி: பங்குச்சந்தையில் அறிமுகமான எல்ஐசி பங்குகள் 8 சதவீதம் விலை குறைத்து பட்டியலிடப்பட்ட நிலையில், பங்குகள் விலை பெரிய அளவில் அதிகரிக்காததால் முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். முதல் நாளிலேயே எல்ஐசி.யின் சந்தை முதலீட்டில் ரூ.42,500 கோடி இழப்பு ஏற்பட்டது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்தது. முதலில் 5 சதவீத பங்குகளை வெளியிட தீர்மானித்திருந்த ஒன்றிய அரசு, பங்கு சந்தை நிலவரம் சரியில்லாத … Read more

ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட இடத்தை பாதுகாக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட இடத்தை பாதுகாக்க வேண்டும் எனவும், மசூதியில் தொழுகை நடத்துவதை தடுக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்கக் கோரி 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மசூதியில் வீடியோ ஆய்வு … Read more

பேரறிவாளன் விடுதலை வழக்கில் இன்று தீர்ப்பு: தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்

புதுடெல்லி: பேரறிவாளன் விடுதலை வழக்கில் இன்று தீர்ப்பு அளிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘மாநில அமைச்சரவையின் முடிவிற்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்,’ என தெரிவித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 11ம் தேதி உத்தரவிட்டது. மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் தங்களின் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யும்படியும் தெரிவித்தது.இதன்படி, தமிழக அரசு நேற்று தனது எழுத்துப்பூர்வ பிரமாணப் பத்திரத்தை … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,292,252 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.92 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,292,252 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 523,744,953 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 493,621,141 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 38,860 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரதமர் மோடி பேச்சு அடுத்த 10 ஆண்டில் 6ஜி சேவை

புதுடெல்லி: ‘அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அதிவேக இணைய இணைப்பை வழங்கும் 6ஜி சேவையை தொடங்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது 3ஜி மற்றும் 4ஜி தொலைத்தொடர்பு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அடுத்ததாக, இன்னும் சில மாதங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த பல நிறுவனங்களும் தயாராகி வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் தொலைத்தொடர்பு துறை ஒழுங்குமுறை அமைப்பான டிராயின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: இந்த ஆட்சியில் … Read more

ஒரே பாலின திருமண அங்கீகார விவகாரம் ஒன்றிய அரசின் பதில் மனுவில் ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள்: டெல்லி நீதிமன்றம் கடும் கண்டனம்

புதுடெல்லி: ஒரே பாலினத்தவர் திருமணத்தை அங்கீகரிப்பது தொடர்பான வழக்கில் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களுடன் ஒன்றிய அரசு பதில் மனு தாக்கல் செய்ததை டெல்லி உயர் நீதிமன்றம் கடுமையான கண்டித்துள்ளது. ஒரே பாலினத்தவர் திருமணத்தை சட்டப்படி அங்கீகரிக்கக் கோரி, ஒரே பாலின தம்பதியினர் தாக்கல் செய்த மனுக்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணையை யூடியூப் போன்ற ஏதேனும் தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யக் கோரி சில தம்பதியினர் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கில் ஒன்றிய … Read more

5 உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள்: உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை

 புதுடெல்லி: உத்தரகாண்ட்,  இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் உட்பட 5 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான, உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் யு.யு.லலித், கன்வீல்கர் ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழு உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், அசாம், தெலங்கானா மாநிலங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்கும்படி ஒன்றிய அரசுக்கு … Read more

கார் பரிசளித்து நடிகையிடம் காதலை சொன்ன வாலிபர்கார் பரிசளித்து நடிகையிடம் காதலை சொன்ன வாலிபர்

மும்பை: நடிகைக்கு சொகுசு கார் பரிசளித்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் வாலிபர். நடிகை ராக்கி சாவந்த், ரித்தேஷ் என்பவரை காதலித்து மணந்தார். தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். இந்நிலையில் ஆதில் கான் என்பவருடன் ராக்கி சாவந்த் நட்பாக பழகி வந்தார். ஆதில் கான், ராக்கி சாவந்தை ஒரு தலையாக காதலித்து வந்தார். இந்நிலையில் திடீரென ராக்கி சாவந்துக்கு பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஒன்றை ஆதில் கான் பரிசளித்தார். அத்துடன் தனது காதலையும் அவரிடம் தெரிவித்தார். இதையடுத்து … Read more