ஜமைக்காவில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு

ஜமைக்கா: ஜமைக்கா சென்றுள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா – ஜமைக்கா இடையிலான உறவுகள் 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நீண்ட உறவை  வலுப்படுத்தும் வகையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அரசு முறை பயணமாக ஜமைக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டிற்கு சென்ற முதல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் என்பதால், அவருக்கு ஜமைக்காவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவரை புலம்பெயர்ந்த … Read more

செஸ் ஒலிம்பியாட் தொடரில் அனுமதிக்கக் கோரி சர்வதேச செஸ் கூட்டமைப்பிடம் ரஷ்யா முறையீடு

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடரில் அனுமதிக்கக் கோரி சர்வதேச செஸ் கூட்டமைப்பிடம் ரஷ்யா முறையீடு செய்தது. உக்ரைன் போரால் செஸ் தொடரில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை என தகவல் வெளியான நிலையில் முறையீடு செய்தனர்.

நிலக்கரி ஊழல் விவகாரம் மம்தா மருமகன், மனைவிக்கு சுப்ரீம் கோர்ட் ‘செக்’: டெல்லிக்கு பதிலாக கொல்கத்தாவில் விசாரிக்க அனுமதி

புதுடெல்லி: நிலக்கரி ஊழல் விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜியின் மருமகன், மனைவியின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், டெல்லிக்கு பதிலாக கொல்கத்தாவில் விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் குனுஸ்டோரியா மற்றும் கஜோரா பகுதிகளில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் பல கோடி ரூபாய் நிலக்கரி ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கூறி 2020 நவம்பர் மாதம், முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பண மோசடி தடுப்பு சட்டத்தின் விதிகளின் கீழ் லாலா என்ற உள்ளூர் நிலக்கரி இயக்குநரான அனுப் மஜ்ஹி, … Read more

மே 21-ம் தேதி குரூப்-2 தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி

சென்னை: மே 21-ம் தேதி குரூப்-2 தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார். 11.78 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். 4.96 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், 6.81 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்துள்ளதாக அவர் பேட்டியளித்தார்.    

பல கோடி மதிப்புள்ள 16 சாமி சிலைகள் கொள்ளை இரவில் பயங்கரமான கனவு வந்து மிரட்டுது!: சிலைகளை திருப்பி ஒப்படைத்த கொள்ளையர்கள்

லக்னோ: சித்ரகூட் பாலாஜி கோயிலில் 16 சாமி சிலைகள் கொள்ளை போன விவகாரத்தில், இரவில் பயங்கரமான கனவு வருவதாக கூறி கொள்ளையடித்த சிலைகளை கொள்ளையர்கள் திருப்பி வைத்துவிட்டு சென்றுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் சித்ரகூடத்தில் உள்ள பாலாஜி கோயிலில், 16 பழமையான சிலைகள் கடந்த சில தினங்களுக்கு முன் கொள்ளையடிக்கப்பட்டன. அவற்றில் 14 சிலைகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை கொள்ளையர்கள் கோயிலில் வைத்துவிட்டு சென்றுவிட்டனர். இந்த சிலைகளுடன், ஒரு கடிதத்தையும் கொள்ளையர்கள் விட்டுச் சென்றுள்ளனர்.  அதில், தாங்கள் மனம் திருந்தி … Read more

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காற்றுடன் கூடிய கனமழை..!!

திருவள்ளூர்: பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அசானி புயல் காரணமாக கோடை வெப்பம் தணிந்திருந்த நிலையில் புயலுக்கு பின்னர் மீண்டும் வெயில் சுட்டெரித்து வந்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பொன்னேரியில் மழை பெய்து வருகிறது.

சீனர்களுக்கு முறைகேடான வகையில் விசா பெற்று தந்த விவகாரம்: டெல்லியில் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ நடத்திய சோதனை நிறைவு

டெல்லி: டெல்லியில் ப.சிதம்பரம் வீட்டில் நடைபெற்று வந்த சோதனை நிறைவு பெற்றது. 269 சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா  வழங்க ரூ.50 லட்சம் பெற்றதாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான சென்னை, மும்பை, கர்நாடகா உட்பட நாடு முழுவதும் 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. … Read more

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து, ரூ.38,112-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து, ரூ.38,112-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.36 உயர்ந்து, ரூ.4,764-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.40 உயர்ந்து, ரூ.65.60-க்கு விற்கப்படுகிறது.

டெல்லியில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ நடத்தி வந்த சோதனை நிறைவு..!!

டெல்லி: டெல்லியில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ நடத்தி வந்த சோதனை நிறைவுபெற்றது. தேசிய பங்குச்சந்தை ஊழலில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புள்ள இடங்களில் சிபிஐ அதிகாரிகள் காலி 7 மணி முதல் சோதனை நடத்தி வந்தனர்.

ஆயுர்வேத மருத்துவ படிப்புகளில் கலந்தாய்வில் நிரம்பாத காலியிடங்களை கல்லூரிகள் நிரப்புவதில் தவறில்லை: ஐகோர்ட் விளக்கம்

சென்னை: ஆயுர்வேத மருத்துவ படிப்புகளில் கலந்தாய்வில் நிரம்பாத காலியிடங்களை நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் தனியார் கல்லூரிகள் நிரப்புவதில் தவறில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. கலந்தாய்வின்றி மாணவர் சேர்க்கை கூடாது என்ற உத்தரவு இளநிலை மருத்துவ படிப்புக்கே பொருந்தும். ஆயுர்வேதம் போன்ற இந்திய மருத்துவ படிப்புகளுக்கு பொருந்தாது என்று உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் தெரிவித்திருக்கிறார்.