கொரோனாவுக்கு உலக அளவில் 6,289,402 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.89 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,289,402 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 522,740,138 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 492,784,166 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,188 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாரணாசி ஞானவாபி மசூதியில் சிவலிங்கம்: சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு

வாரணாசி: வாரணாசி ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட பகுதியை சீல் வைக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என 5 பெண்கள், வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணையில், ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை … Read more

அருணாச்சல் நிலச்சரிவில் 4 பேர் பலி

இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் தொடர் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலியாகினர். வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல், அசாமில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அசாமில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியான நிலையில், அருணாச்சலில் நேற்று பெண் ஒருவர் உள்பட 4 பேர் நிலச்சரிவில் சிக்கி பலியாகினர். அருணாச்சலில் ஏற்பட்ட கனமழையால் அங்குள்ள பஞ்சாபி தாபா … Read more

மூத்த குடிமக்கள் சலுகை ரத்தால் ரயில்வேக்கு கூடுதலாக ரூ.1500 கோடி லாபம்

புதுடெல்லி: மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்பட பல பிரிவினர்களுக்கும், ஒன்றிய அரசு ரயில் கட்டணத்தில் சலுகை அளித்து வந்தது. கொரோனா பரவலுக்கு பின், ரயில்வே நிர்வாகம் வருவாய் இழப்பை சந்தித்ததால், மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை நிர்வாகம் ரத்து செய்தது. தற்போது, மாற்றுத் திறனாளிகள், நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாணவர்களுக்கு மட்டும் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த தகவல் ஆர்வலர் சந்திரசேகர் கவுர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் மனுதாக்கல் … Read more

இந்தியாவின் ஏற்றுமதி தடையால் சர்வதேச சந்தையில் கோதுமை விலை எகிறியது: ஜி7 நாடுகள் எதிர்ப்புக்கு சீனா கண்டனம்

புதுடெல்லி: இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், உலகளவில் கோதுமை விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் போரால் உலகளவில் கோதுமை விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான நாடுகள் இந்தியாவின் கோதுமையை நம்பி உள்ளன. இதற்கிடையே, இந்தியாவில் தனியார் வர்த்தகர்கள் மூலம் கோதுமை ஏற்றுமதி அதிகரித்ததால், உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டு கோதுமை விலை அதிகரித்தது. இதனால், கோதுமை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு திடீர் தடை விதித்துள்ளது.இதன் காரணமாக, சர்வதேச சந்தையில் நேற்று … Read more

பான் இந்தியா ஸ்டாராக ஜூனியர் என்டிஆர் தேர்வு

மும்பை: பான் இந்தியா ஸ்டார் யார் என்ற கருத்து கணிப்பில் ஜூனியர் என்டிஆர் முதலிடம் பெற்றுள்ளார். தெலுங்கில் தற்போது பான் இந்தியா படங்கள் அதிகமாக உருவாகி வருகின்றன. இந்த படங்கள் பாலிவுட்டில் அதிக வசூல் சாதனை படைக்கின்றன. இதையொட்டி பாலிவுட்டில் இயங்கும் மீடியா நிறுவனம் ஒன்று, இந்த ஆண்டின் பான் இந்தியா ஸ்டார் யார் என மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தியது. இதில் இந்தி நடிகர்களை பின்னுக்கு தள்ளி ஜூனியர் என்டிஆர் முதலிடம் பிடித்திருக்கிறார். ஆர்ஆர்ஆர் படத்தில் … Read more

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கிய படம்

மும்பை: இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் 99 என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார். தற்போது லீ மாஸ்க் என்ற பெயரில் 36 நிமிட  குறும்படத்தின் மூலம் இயக்குனராகவும் ஆகியிருக்கிறார். அவரது மனைவி சாய்ரா கூறிய யோசனையில் இருந்து இந்த படத்தை அவர் உருவாக்கி உள்ளார். இது இசையையும், மரணத்தையும் இணைத்து சொல்லும் புதுமையான படம். இதில் ஜெனிபர் கான்னெல்லி மற்றும் நோரா அர்னெசெடர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது. … Read more

திருப்பதியில் வசந்த உற்சவத்தின் 2ம் நாளில் தங்க ரதத்தில் பத்மாவதி தாயார்

திருமலை: திருச்சானூர் கோயிலில் தங்க ரதத்தில் எழுந்தருளிய பத்மாவதி தாயாரை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த உற்சவத்தின் 2வது நாளான நேற்று தங்க ரதத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க சுவாமி வீதி உலா வந்து அருள் பாலித்தார். கோயிலின் நான்கு மாடவீதியில் திரண்டிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி … Read more

அசாமில் வெள்ளப் பெருக்கு; 222 கிராமங்கள் நீரில் மூழ்கின

கவுகாத்தி: கடந்த சில நாள்களாக அசாம் மற்றும் அதன் அண்டை மாநிலங்களான மேகாலயா, அருணாசலப் பிரதேசம் ஆகியவற்றில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோபிலி நதியின் நீர் அளவு வெள்ள அபாயத்தை தாண்டியுள்ளது. அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ‘காம்ரூப், நாகோவன், கர்பி அங்லாக், ஹோஜாய், தீமாஜி, சச்சார் ஆகிய ஆறு மாவட்டங்களின் 222 கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன இதன் காரணமாக சுமார் 25 ஆயிரம் … Read more

ரஷ்யாவில் இருந்து வெளியேற அமெரிக்காவின் பிரபல உணவு நிறுவனமான மெக்டொனால்ட்ஸ் முடிவு

ரஷ்யா: ரஷ்யாவில் இருந்து வெளியேற அமெரிக்காவின் பிரபல உணவு நிறுவனமான மெக்டொனால்ட்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் அந்நாட்டிலிருந்து வெளியேற மெக்டொனால்ட்ஸ் முடிவு செய்துள்ளது.