மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு திட்டத்தை மேலும் 3 ஆண்டு நீட்டிக்க வேண்டும்: காங். சிந்தனை அமர்வு கூட்டத்தில் வலியுறுத்தல்
உதய்பூர்: ஒன்றிய பாஜ அரசால் இந்திய பொருளாதாரத்தின் நிலை மிகுந்த கவலை அளிக்கும் விதத்தில் இருப்பதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ஜிஎஸ்டி இழப்பீட்டை மேலும் 3 ஆண்டுக்கு நீட்டிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார். கட்சியை வலுப்படுத்தவும், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கவும் காங்கிரசின் 3 நாள் சிந்தனை அமர்வு கூட்டம் ராஜஸ்தானின் உதய்பூரில் நடக்கிறது. 2ம் நாளான நேற்றைய கூட்டத்தில், நாட்டின் பொருளாாதார பிரச்னைகள் குறித்து விவாதிக்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் ஒன்றிய நிதி … Read more