சாமி சிலைகள் இருப்பதாக சர்ச்சை தாஜ்மகாலில் சோதனையிடக் கூடாது: அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு

லக்னோ: முகலாய அரசர் ஷாஜஹான் தனது மனைவி நுார்ஜஹான் நினைவாக  கட்டியது தாஜ்மகால். ஆக்ராவில் அமைந்துள்ள இதைக் கட்ட அங்கிருந்த தேஜோலாயா எனும் சிவன் கோயில் இடிக்கப்பட்டதாக பாஜ பிரச்னையை எழுப்பி வருகிறது. இக்கோயிலில் இருந்த சிலைகள், தாஜ்மகாலில் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளில் இருப்பதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இதை திறந்து பார்க்க உத்தரவிடக் கோரி, பாஜ செய்தி தொடர்பாளர் ரஜ்னீஷ் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. … Read more

வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் இறப்பு தற்கொலையே: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ பிரமாணப் பத்திரம் தாக்கல்

புதுடெல்லி: ‘வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகனின் இறப்புக்கு தற்கொலைதான் காரணம்,’ என சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை, அண்ணா நகர், மேற்கு தங்கம் காலனியைச் சேர்ந்தவர் சங்கரசுப்பு. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர். இவரது மகன் சதீஷ் குமார் (24). இவர் கடந்த 2011  ஜூலை 13ம் தேதி சென்னை ஐ.சி.எப் வடக்கு காலனி ஏரியில் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு மாற்றி சென்னை … Read more

பாகிஸ்தான் பெண் ஏஜென்டிடம் மயங்கி ராணுவ ரகசியங்களை விற்ற அதிகாரி டிஸ்மிஸ்

புதுடெல்லி: இந்தியாவை சேர்ந்த ராணுவ அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகள், முக்கிய ரகசியங்களை கையாள்பவர்களை, அவர்களின் பலவீனத்தை பயன்படுத்தி பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ வலையில் சிக்க வைத்து ரகசியங்களை பெற்று வருகிறது. இதற்கு பணம், அழகிய பெண்களை பகடைக்காயாக பயன்படுத்துகிறது. இது போன்ற பலவீனத்தில் சிக்கி, நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை விற்ற பல ராணுவ அதிகாரிகள் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.இந்நிலையில், டெல்லி சுப்ரதோ பார்க் பகுதியில் உள்ள இந்திய விமானப் படையின் … Read more

பேரக் குழந்தையை பெற்று தரணும் இல்லையென்றால், ரூ.5 கோடி தரணும்: பைலட் மகன் மீது தாய் விநோத வழக்கு

புதுடெல்லி: ஒரு வருடத்தில் பேரக் குழந்தை வேண்டும். இல்லையென்றால் ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என ஹரித்துவார் நீதிமன்றத்தில் தாய் ஒருவர் வழக்கை தொடர்ந்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவார் மாவட்ட நீதிமன்றத்தில் தாய் ஒருவர் விநோதமான வழக்கை தொடர்ந்துள்ளார். அதில் அவர், ‘எனது மகன் விமான நிறுவனத்தில் விமானியாக உள்ளார். ஆசையாய் வளர்த்த மகனை அமெரிக்காவில் படிக்க வைத்தேன். அவரது எதிர்காலம் கருதி கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி திருமணம் செய்து வைத்து, … Read more

ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டல் தொழிலதிபரிடம் போலி ரெய்டு 4 சிபிஐ அதிகாரிகள் பணி நீக்கம்

புதுடெல்லி: சண்டிகரில் உள்ள ஒரு  நிறுவனத்தில்  பணம் பறிப்பதற்காக போலி ரெய்டு நடத்திய வழக்கில் நான்கு சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். 4 பேரையும் டிஸ்மிஸ் செய்ய சிபிஐ இயக்குனர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். சண்டிகரை சேர்ந்த ஒரு தொழிலதிபரின் அலுவலகத்திற்கு  கடந்த 10ம் தேதி டெல்லியை சேர்ந்த  சிபிஐ அதிகாரிகள் 4 பேர் வந்தனர். அவர்களுடன் வேறு சிலரும் வந்தனர். தொழிலதிபருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது. தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளன. … Read more

கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்டம்

பெங்களூரு: கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்டம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் சிறப்பாணை பிறப்பிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரு விதான சவுதாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது.  இக்கூட்டத்தில் மதமாற்ற தடை சட்டம் உடனடியாக அமலுக்கு வரும் நிலையில் சிறப்பாணை பிறப்பிப்பது தொடர்பாக விவாதித்து அதற்கு அனுமதி பெறப்பட்டதாக அமைச்சர் ஜேசி மாதுசாமி தெரிவித்தார்.இது தொடர்பாக நிருபர்களிடம் அமைச்சர் ஜேசி மாதுசாமி கூறியதாவது: … Read more

மடிப்பாக்கத்தில் கல் குட்டையில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி

சென்னை: சென்னை மடிப்பாக்கம் அருகே கல்குட்டையில் குளிக்கச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 4 சிறுவர்கள் குளிக்கச் சென்ற நிலையில் மோனிஷ் (13) பர்வேஷ் (12) ஆகியோர் நீச்சல் தெரியாததால் மூழ்கி உயிரிழந்தனர்

தடை செய்யப்பட்ட பகுதியில் ஜீப் ரேஸில் ஈடுபட்டதாக தேசிய விருது பெற்ற நடிகர் மீது போலீஸ் வழக்கு

திருவனந்தபுரம்: மலையாள குணச்சித்திர நடிகரும், ஹீரோவுமான ஜோஜு ஜார்ஜ் (45), தமிழில் தனுஷ் நடிப்பில் ஓடிடியில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அவர் மலையாளத்தில் நடித்த ‘ஜோசப்’ என்ற படம், தமிழில் ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் ‘விசித்திரன்’ என்ற பெயரில் திரைக்கு வந்துள்ளது. தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ள ஜோஜு ஜார்ஜ், மலையாளத்தில் சில படங்கள் தயாரித்துள்ளார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வாகமன் என்ற பகுதியில்,  மலைமுகடுகளுக்கு இடையே அனுமதி பெறாமல் … Read more

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையில் புதிய பிரதமராக பதவியேற்கிறார் ரணில் விக்ரமசிங்கே

இலங்கை: இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகிய நிலையில் ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பதிவியேற்றர். நேற்று மாலை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை ரணில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இன்று பதவியேற்றனர். ஏற்கனவே 5 முறை இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே  இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் 15ம் தேதி பதவியேற்பு புதிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு

புதுடெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக ராஜீவ் குமாரை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு, செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா இருந்து வருகிறார். நாளை, அதாவது மே 14ம் தேதி அவர் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். இவர் வரும் 15ம் … Read more