இலங்கை பிரதமராக பதவியேற்றுள்ள ரணிலுக்கு முதல் நாளிலேயே எதிர்ப்பு: ஜே.வி.பி குற்றசாட்டு

இலங்கை: இலங்கை பிரதமராக பதவியேற்றுள்ள ரணிலுக்கு முதல் நாளிலேயே எதிர்ப்பு எழுத்துள்ளது. ராஜபக்சே குடும்பத்தை காப்பாற்றவே ரணில் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஜே.வி.பி  குற்றசாட்டு வைத்துள்ளார். ரணில்  தலைமையிலான அரசு ஒரு மதம் கூட நீடிக்காது என்று ஜே.வி.பி தெரிவித்துள்ளார்.

நிலக்கரி ஊழல் வழக்கில் சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரணை ஏன் இன்னும் நிறைவு பெறவில்லை?: ஒன்றிய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

டெல்லி: நிலக்கரி ஊழல் வழக்கில் சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரணை ஏன் இன்னும் நிறைவு பெறவில்லை? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. எப்.ஐ.ஆர். பதிவு செய்து 10 ஆண்டுகளாகியும் விசாரணை ஏன் நிறைவுபெறவில்லை? என ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பப்பட்டது. நிலக்கரி ஊழல் வழக்கின் நிலை குறித்து விளக்கமளிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்கும் சவாலை ஏற்றுக்கொண்டு உள்ளேன்: பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பேட்டி

கொழும்பு: இலங்கையின் பொருளாதாரத்தை மீட்கும் சவாலை ஏற்றுக்கொண்டு உள்ளேன்; அதை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று இலங்கை பிரதமர் ரணில் பேட்டி அளித்துள்ளார். இந்தியா உடனான உறவு மேலும் வலுப்படுத்தப்படும் என்று கொழும்புவில் இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பேட்டி அளித்துள்ளார்.

தேசிய பங்குச் சந்தை முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா ஜாமின் மனு தள்ளுபடி..!!

டெல்லி: தேசிய பங்குச் சந்தை முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை செயலாக்க அதிகாரி ஆனந்த் சுப்பிரமணியனின் ஜாமின் மனுவும் நிராகரிக்கப்பட்டது.

மணிகண்டன் மரணத்துக்கு மக்கள் நியாயம் கேட்பார்கள் : அண்ணாமலை

திருவாரூர்: திருவாரூரில் ஊழலை எதிர்த்து உயிர்விட்ட மணிகண்டன் ஆத்மாவுக்கு ஒரு அர்த்தம் வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். இலவச வீடுகட்டும் திட்டத்தில் நிதி வழங்காததால் இளைஞர் தற்கொலை செய்த சம்பவத்தில் அரசு பதில் சொல்ல வேண்டும் என்றும் மாநில அரசை மக்கள் தட்டிக் கேட்பார்கள் என்று  கூறியுள்ளார். மணிகண்டன் மரணத்துக்கு மக்கள் நியாயம் கேட்பார்கள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.   

தேசியப் பங்குச் சந்தை முறைகேடு வழக்கு: சித்ரா ராமகிருஷ்ணா,ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

டெல்லி: தேசியப் பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள சித்ரா ராமகிருஷ்ணா,ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனராக கடந்த 2013 முதல் 2016-ம் ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணன் பணியாற்றி வந்தார். அப்போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் குற்றம் சாட்டியது. முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியன் என்பரை, தலைமை வியூக அதிகாரியாக நியமித்ததுடன், பிற சலுகைகள் வழங்கியதாக குற்றச்சாட்டு … Read more

ஆம்பூர் பிரியாணி திருவிழா சர்ச்சை: திருப்பத்தூர் ஆட்சியரை மாற்றம் செய்யப்போவதாக தகவல்

ஆம்பூர்: ஆம்பூர் பிரியாணி திருவிழா சர்ச்சை  தொடர்பாக திருப்பத்தூர் ஆட்சியரை மாற்றம் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 நாட்களுக்கு கிருஷ்ணகிரி, திருப்பத்தூரில் கனமழை பெய்யும் என்ற காரணத்தால் பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி பிரியாணியை சேர்க்க வேண்டும் என ஒரு தரப்பும், விழாவை தடை செய்ய வேண்டும் என்று மற்றொரு தரப்பும் கோரிக்கை வைத்துள்ளனர்

காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு : ராஜஸ்தானில் நாளை தொடங்குகிறது

புதுடெல்லி: காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் ‘சிந்தனை அமர்வு’ என்ற மாநாடு நாளை தொடங்குகிறது. இந்த மாநாடு  3 நாள் நடக்கிறது.  மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 2013ம் ஆண்டு ‘சிந்தனை அமர்வு’ நடந்தது. ஆனால் தற்போது மத்தியில் ஆட்சியில் இல்லாததுடன், 2 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி நடத்தி வருகிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்த்து 100க்கும் குறைவான எம்.பி.க்களையே கொண்டுள்ளது.இந்த சூழ்நிலையில், 9 ஆண்டுகளுக்குப்பின் நாளை பிற்பகல் 2 மணிக்கு மாநாடு … Read more

படுக்கை, போர்வை விற்பனை செய்யும் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

சென்னை: தாம்பரம் அருகே காவிரிவாக்கத்தில் படுக்கை, போர்வை விற்பனை செய்யும் 2 மாடி கட்டிடத்தில்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது, தாம்பரம், மேடவாக்கம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் உள்ளனர்

தாஜ்மஹாலில் பூட்டி இருக்கும் 22 அறைகளை திறக்கக் கோரும் மனு தள்ளுபடி: அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு

லக்னோ: தாஜ்மஹாலில் நீண்ட காலமாக பூட்டி இருக்கும் 22 அறைகளை திறக்கக் கோரும் மனுக்களை அலகாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தாஜ்மஹாலில் உள்ள 22 ரகசிய அறைகளில் இந்து கடவுள் சிலைகள் இருப்பதாகக் கூறி பாஜக நிர்வாகி பொதுநல வழக்கு தொடர்ந்தார். பொதுநல வழக்கு தாக்கல் செய்த பாஜக நிர்வாக ரஜினிஸ் சிங்-க்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.