நெல்லை மாநகராட்சியை கைப்பற்றியது திமுக

நெல்லை: நெல்லை மாநகராட்சி மற்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ள அம்பை, களக்காடு, விக்கிரமசிங்கபுரம் நகராட்சிகளை திமுக கைப்பற்றிஉள்ளது. 17 பேரூராட்சிகளில் மொத்தமாக உள்ள 273 வார்டுகளில் 152 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி கைது

ஜம்மு: ராஜ்வார் பகுதியில் பதுங்கியிருந்த  ஜெய்ஷ் – இ -முகமது இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.  ஜம்மு – காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ராஜ்வார் பகுதியில் தப்பியோட முயன்ற தீவிரவாதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர், அந்த தீவிரவாதியை கைது செய்தனர். விசாரணையில், அவன் குப்வாரா மாவட்டத்தை சேர்ந்த உபைத் … Read more

நாமக்கல் பாண்டமங்கலம் பேரூராட்சி 3வது வார்டில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி

நாமக்கல்: நாமக்கல் பாண்டமங்கலம் பேரூராட்சி 3வது வார்டில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் 189 வாக்குகள் பெற்ற நிலையில் 190 வாக்குகள் பெற்று அதிமுகவின் செல்வி வெற்றி பெற்றார்.

பஜ்ரங் தள் பிரமுகர் கொலை வழக்கு; 3 பேர் கைது: அனைத்து கோணங்களிலும் விசாரணை நடப்பதாக போலீஸ் தகவல்..!

பெங்களூரு: பஜ்ரங் தள் பிரமுகர் கொலை வழக்கில் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடப்பதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலம், ஷிவமொக்கா மாநகர் பாரதிநகர் காலனியில் நேற்று முன்தினம் இரவு பஜ்ரங் தள அமைப்ைப சேர்ந்த பிரமுகர் ஹர்ஷா(25) என்பவரை மர்ம கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களால் வெட்டியது. படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மெக்கான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஹர்ஷா படுகொலை செய்யப்பட்ட தகவல் காட்டு தீப்ேபால் பரவியது. … Read more

கரூர் மாநகராட்சியை கைப்பற்றியது திமுக

கரூர்: கரூர் மாநகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. கரூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் திமுக 42 இடங்களில் வெற்றி பேருள்ளது. மேலும் அதிமுக 2, சுயேட்சைகள் 2, காங்கிரஸ் 1, சிபிஎம் 1 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றது.

புதிதாக அறிவிக்கப்பட்ட ராயசோட்டியை ரத்து செய்து மதனப்பள்ளியை மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம்-கலெக்டர் அலுவலகம் முன் நடந்தது

சித்தூர் : புதிதாக அறிவிக்கப்பட்ட ராயசோட்டி மாவட்டத்தை ரத்து செய்து மதனப்பள்ளியை மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன் எதிர்க்கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன் அனைத்து எதிர்க்கட்சியினர் ஒன்று சேர்ந்து மதனப்பள்ளியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில், முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஷாஜகான் பாஷா பேசியதாவது: ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் மாநிலத்தில் ஒவ்வொரு எம்பி தொகுதியையும் மாவட்டமாக அறிவிக்கப்படும் என அறிவித்தார். அதன்படி ஆந்திர … Read more

ஓசூர் மாநகராட்சி 13-வது வார்டில் திமுக வேட்பாளராக களமிறங்கிய 22 வயது சட்டக் கல்லூரி மாணவி வெற்றி

ஓசூர்: ஓசூர் மாநகராட்சி 13-வது வார்டில் திமுக வேட்பாளராக களமிறங்கிய 22 வயது சட்டக் கல்லூரி 3-ம் ஆண்டு மாணவி யஷாஸ்வினி வெற்றி  பெற்றார். 1146 வாக்குகள் பெற்ற யஷாஸ்வினி, 640 வாக்குள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தியுள்ளார்.

பஜ்ரங் தளம் பிரமுகர் படுகொலையால் கர்நாடகாவில் மீண்டும் கலவரம்: போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதால் பதற்றம்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவில் பஜ்ரங் தளம் அமைப்பை சேர்ந்த பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதால் ஷிவமொக்கா மாநகரில் கலவரம் வெடித்துள்ளது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு, தடியடியில் பலர் காயமடைந்தனர். கர்நாடக மாநிலம், ஷிவமொக்கா மாநகர் பாரதிநகர் காலனியில் நேற்று முன்தினம் இரவு பஜ்ரங் தள அமைப்ைப சேர்ந்த பிரமுகர்  ஹர்ஷா(25) என்பவரை மர்ம கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களால் வெட்டியது. படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மெக்கான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டாக … Read more

சென்னை 136வது வார்டில் திமுக இளம் வேட்பாளர் வெற்றி

சென்னை: சென்னை 136வது வார்டில் இளம் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். 136வது வார்டில் போட்டியிட்ட 22 வயதான திமுக இளம் வேட்பாளர் நிலவரசி துரைராஜ் வெற்றி பெற்றார்.

இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது : நேற்று மட்டும் 235 பேர் பலி!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 13,405 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,28,51,929 ஆக உயர்ந்தது.* புதிதாக 235 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more