பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 63.44% வாக்குகள் பதிவு

ஒரே கட்டமாக நடைபெறும் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 63.44% வாக்குகள் பதிவாகியுள்ளன. மூன்றாம் கட்டமாக நடைபெறும் உத்திரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 57.44% வாக்குகள் பதிவாகியுள்ளது.

பட்டியலின ஐபிஎஸ் அதிகாரி குதிரை ஊர்வலம் செல்ல போலீஸ் பாதுகாப்பு

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் பட்டியலினத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி, குதிரையில் திருமண ஊர்வலம் செல்ல பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது. பண்டி மாவட்டத்தில் திருமணத்தன்று பட்டியலினத்தவர்கள் குதிரை ஊர்வலம் செல்ல குறிப்பிட்ட சாதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த பட்டியலின ஐபிஎஸ் அதிகாரி தன்வந்தா, திருமணத்தன்று குதிரையில் செல்ல பாதுகாப்பு கோரினார். தாம் ஐபிஎஸ் அதிகாரி என்றாலும், சொந்த கிராமத்தில் சாதி ரீதியான அச்சுறுத்தல் இருப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் முழு … Read more

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 185 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

கொல்கத்தா: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 185 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா. கொல்கத்தாவில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து இந்திய அணி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்க உள்ளது.

அரசு பஸ்களில் செல்போனில் சத்தம்போட்டு பேசக்கூடாது: கேரளாவில் போக்குவரத்து கழகம் உத்தரவு

திருவனந்தபுரம்: கேரள அரசு பஸ்களில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செல்போனில் சத்தம் போட்டு பேசுவதற்கும், அதிக சத்தத்தில் பாட்டு வைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில்களிலும், பஸ்களிலும் பயணம் செய்பவர்களுக்கு செல்போன் மூலம் ஏற்படும் சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. செல்போனில் சத்தமாக பேசுவதும், அதிக சத்தத்தில் வீடியோ, பாட்டுகளை கேட்பதும் பயணிகளுக்கு பெரும் இடையூறாக இருந்து வருகிறது. இதன் காரணமாக பயணிகள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்ப்பதற்காக ரயில்களில் இரவு நேரங்களில் 10 … Read more

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங்

கொல்கத்தா: 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட்யில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. கொல்கத்தாவில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து இந்திய அணி முதலில் களமிறங்க உள்ளது.

உ.பி.யில் யோகிக்கு ஓட்டு போடாதவர்களது வீடுகளை இடிப்போம் என பாஜ எம்எல்ஏ சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை

லக்னோ: உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் வன்முறை தூண்டும் வகையில் பேசியதாக தெலங்கானா பாஜ எம்எல்ஏ ராஜா சிங் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.உத்தரபிரதேசத்தில் 2 கட்ட சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 3ம் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் தெலங்கானாவை சேர்ந்த பாஜ எம்எல்ஏ ராஜா சிங், சமீபத்தில் உத்தரபிரதேச தேர்தல் குறித்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘உத்தரபிரதேச தேர்தலில் பாஜதான் வெற்றிபெறும். இந்துக்கள் … Read more

நகர்ப்புற தேர்தலை ரத்து செய்து மறுவாக்குப்பதிவு நடத்துவதே நியாயமானது: கமல்ஹாசன்

சென்னை: தேர்தல் அத்துமீறல்களை மாநில தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளோம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மாற்றுக்கட்சி வேட்பாளர்களை வாக்காளர்கள் என நினைத்து பணம் கொடுக்க முயன்றது அவல நகைச்சுவை என அவர் தெரிவித்துள்ளார். நகர்ப்புற தேர்தலை ரத்து செய்து மறுவாக்குப்பதிவு நடத்துவதே நியாயமானதாக இருக்க முடியும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

உத்திரப்பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என சமாஜ்வாதி கட்சி கனவு காண்கிறது: பிரதமர் மோடி

லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என சமாஜ்வாதி கட்சி கனவு காண்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் உன்னோவ் நகரில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி இவ்வாறு பேசியுள்ளார்.

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 34.10% வாக்குகள் பதிவு

ஒரே கட்டமாக நடைபெறும் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 34.10% வாக்குகள் பதிவாகியுள்ளன. மூன்றாம் கட்டமாக நடைபெறும் உத்திரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மதியம்1 மணி நிலவரப்படி 35.88% வாக்குகள் பதிவாகியுள்ளது.

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் 3 மணி நிலவரப்படி 49.81% வாக்குகள் பதிவு

ஒரே கட்டமாக நடைபெறும் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் 3 மணி நிலவரப்படி 49.81% வாக்குகள் பதிவாகியுள்ளன. மூன்றாம் கட்டமாக நடைபெறும் உத்திரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 3 மணி நிலவரப்படி 48.81% வாக்குகள் பதிவாகியுள்ளது.