நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நடிகர் மன்சூர் அலிகான், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வாக்களிப்பு..!!

சென்னை: நடிகர் மன்சூர் அலிகான், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமது வாக்கினை பதிவு செய்தனர். உடுமலை நகராட்சியில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

சட்டப்பேரவை உரைக்கு அனுமதி தராமல் இழுத்தடிப்பு கேரள முதல்வர் பினராயிடம் கவர்னர் ஆரிப் ரகசிய பேரம்

திருவனந்தபுரம்: கேரள  சட்டசபையின் 4வது கூட்டத் தொடர் கவர்னர் உரையுடன் நேற்று காலை துவங்கியது. சட்டமன்ற மரபுப்படி, அமைச்சரவை கூடி முடிவெடுக்கும் உரையை கவர்னர் அவையில் வாசிப்பார். சில தினங்களுக்கு முன்பு கவர்னர் உரையை கேரள அரசு கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு அனுப்பி  வைத்தது. இதற்கு நேற்று முன்தினம் காலை வரை அவர் அங்கீகாரம்  அளிக்கவில்லை. முதல்வர் பினராய் விஜயன் அவசர அவசரமாக கவர்னர்  மாளிகைக்கு சென்று  கவர்னர் ஆரிப் முகம்மது கானை சந்தித்து சமாதானம்  … Read more

சென்னை திருவான்மியூரில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கும் முயற்சியில் ஈடுபட்ட அதிமுகவினர்

சென்னை: சென்னை திருவான்மியூரில் 179-வது வார்டில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் விநியோகிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பூத் சிலிப்புகள் மற்றும் பணத்தை போட்டுவிட்டு அதிமுகவினர் தப்பிவிட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

நதிகள் இணைப்பு திட்டத்தை விரைவாக அமல்படுத்த வேண்டும்: டெல்லி கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் வலியுறுத்தல்

புதுடெல்லி: காவிரி – கோதாவரி உட்பட நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.நாடாளுமன்றத்தில் கடந்த 1ம் தேதி 2022-23 ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, ரூ.86 ஆயிரம் கோடியில் காவிரி – கோதாவரி உள்ளிட்ட 5 நதிகள் இணைப்பு திட்டம், மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு விரைவில் செயல்படுத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. இந்நிலையில், நதிகள் இணைப்பு திட்டம் குறித்து ஏற்கனவே … Read more

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்குக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்குக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 138 நகராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சுமார் 2.5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்கின்றனர்.

கொரோனாவுக்கு உலக அளவில் 5,891,806 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58.91 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,891,806 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 421,936,495 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 346,471,284 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 82,571 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொறியியல் நேரடி தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெறுவதால்,  இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைஅறிவித்துள்ளது.தொலைதூர கல்வி மாணவர்களுக்கு நாளை (20ம் தேதி) நேரடியாக நடைபெற இருந்த தேர்வு மார்ச் 9ம் தேதியும், வருகிற 21ம் தேதி நடக்க இருந்த தேர்வு மார்ச் 10ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை மற்றும் முனைவர் படிப்புகளுக்கு வருகிற 21 மற்றும் 22ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சோட்டாணிக்கரை பகவதியம்மன் கோயிலில் நயன்தாரா காதலனுடன் சாமி தரிசனம்

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சோட்டாணிக்கரை பகவதியம்மன் கோயிலும் ஒன்று. இங்கு மாசி மாதம் மகம் நாளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதில் கேரளா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பெண்கள் கலந்து கொள்வார்கள். நேற்றுமுன்தினம் மகம் நாள் என்பதால் ஏராளமான பெண்கள் கோயிலில் தரிசனம் செய்ய குவிந்தனர். இதில் நடிகை நயன்தாரா, தனது காதலனும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் வந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் … Read more

மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயிலில் மாசி மக தெப்ப உற்சவ விழா

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயிலில், மாசி மக தெப்ப உற்சவ விழா விமர்சையாக நடந்தது.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரில் அமைந்துள்ள  ஏரிகாத்த ராமர் என்கிற கோதண்டராமர் கோயில் மாசி மகம் தெப்ப உற்சவ விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதையாட்டி, மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் கருணாகர பெருமாள் எழுந்தருளி வலம் வந்தார். அதில், மதுராந்தகம் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து … Read more

ஆயிரம் ஏக்கர் வனத்தை தத்தெடுத்த நாகார்ஜுனா

ஐதராபாத்: தெலங்கானாவில் மெட்கல் மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியை தத்தெடுத்துள்ள நாகார்ஜுனா, அதை பராமரிக்க 2 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார். மறைந்த தனது தந்தையும் நடிகருமான அக்கினேனி நாகேஸ்வர ராவின் பெயரில் இந்தப் பணிகளை மேற்கொள்வதாக அவர் அறிவித்துள்ளார். இந்த வனத்தை நகர்ப்புற பூங்காவாக அவர் அமைக்கிறார். ஆயிரம் ஏக்கர் பரப்பில் ஏற்கனவே உள்ள மரங்களை பராமரிப்பதோடு, மேலும் மரக்கன்றுகள், பசுந்தாவரங்கள் நட்டு வளர்க்கவும் நாகார்ஜுனா திட்டமிட்டுள்ளார்.