இந்திய பொருளாதாரத்தை உலக அரங்கில் உயர்த்தி காட்டியவர் பிரதமர் மோடி!: மன்மோகன் சிங்கின் குற்றச்சாட்டுகளுக்‍கு நிர்மலா சீதாராமன் பதில்..!!

டெல்லி: பிரதமர் மோடி மற்றும் இந்திய பொருளாதாரம் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்திருப்பதற்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவை உலகின் பார்வையில் கீழ் இறக்கிவிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஒன்றிய பாஜக அரசின் அதன் பொருளாதாரம் மற்றும் வெளியுறவு கொள்கைகளையும் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்திருந்தார். பொருளாதார கொள்கைகளில் பாஜகவுக்கு துளியும் புரிதல் இல்லை என்றும் நாட்டில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள் என்றும் ஏழைகள் … Read more

நாகை அருகே கொடூர சம்பவம் :மனைவி, 2 மகள்கள் மீது கல்லை தலையில் போட்டு கொன்று தானும் தற்கொலை!!

நாகை : நாகை மாவட்டம் புதுச்சேரி கிராமத்தை சேர்ந்த லக்ஷ்மணன் தனது மனைவி புவனேஸ்வரி 45, மகள்கள் வினோதினி (18), அக்சயா (15) ஆகியோரை கல்லை தலையில் போட்டு கொலை செய்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 3  மாதங்களுக்கு முன்பு மூத்த மகள் காதல் திருமணம் செய்ததால், மன உளைச்சலில் இருந்த லக்‌ஷ்மணன், மனைவி மற்றும் இரு மகள்களை கொன்று தற்கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜெய்ப்பூர் அருகே நில அதிர்வு: ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவு!!

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூர் அருகே இன்று காலை 8 மணிக்கு திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.8 என்ற அளவில் இருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வு காரணமாக பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர் என்றும் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது

காவி கொடி இந்தியாவின் தேசிய கொடியாகும் என பேசிய கர்நாடக அமைச்சர் பதவி விலக வேண்டும் : காங்கிரஸ் தர்ணா போராட்டம்

பெங்களூரு : காவி கொடி இந்தியாவின் தேசிய கொடியாகும் என பேசிய கர்நாடக பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா பதவி விலக வேண்டும் என சட்டப்பேரவையை முடக்கி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சில எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தில் நேற்றிரவு தூங்கினர்.

கொரோனாவுக்கு உலக அளவில் 5,880,454 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58.80 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,880,454பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 419,985,775 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 343,825,691பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 84,688 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது: தமிழக அரசு திட்டவட்டம்

புதுடெல்லி: தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை கண்டிப்பாக அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தேனி மாவட்டம், பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க கடந்த 2011ம் ஆண்டு ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதில், 2.5 கிமீ பரப்புக்கு சுரங்கம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ‘தேசிய வனவிலங்கு வாரியத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்பதால், இத்திட்டத்திற்கு … Read more

ரூ.9 கோடி மதிப்பு சொத்துக்கள் ஏழுமலையானுக்கு காணிக்கை

திருமலை: சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் ரேவதி விஸ்வநாத். இவருடைய சகோதரி பர்வதம். இவர் கடந்தாண்டு மே மாதம் இறந்தார். இவருக்கு சென்னை திருவான்மியூரில் ஒரு வீடும், உத்தண்டியில் ஒரு வீடும் இருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.6 கோடி. மேலும், வங்கியில் ரூ.3.20 கோடி டெபாசிட்டும் வைத்திருந்தார். தனது மறைவுக்குப் பிறகு தனது சொத்துகள், பணத்தை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு காணிக்கையாக கொடுக்கும்படி பர்வதம் கடைசி விருப்பமாக தெரிவித்து இருந்தார். அதன்படி, இந்த வீடுகளுக்கான ஆவணங்களையும், வங்கி … Read more

டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் பதவிக்கு ஐசிஎம்ஆர் தலைவர் உட்பட 32 பேர் போட்டி

புதுடெல்லி: டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் பதவிக்கு ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்கவா உட்பட 32 பேர் போட்டியில் உள்ளனர். டெல்லியில் உள்ள எய்ம்ஸ் எனப்படும் அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் இயக்குனராக உள்ள  ரன்தீப் குலாரியா அடுத்த மாதம் 23ம் தேதி ஓய்வு பெறுகிறார். காலியாக உள்ள அப்பதவிக்கு  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குனர் ஜெனரலாக உள்ள பல்ராம் பார்கவா, எய்ம்ஸ் மருத்துவமனை  எலும்பு மூட்டுவியல் துறை பேராசிரியர் ராஜேஷ் மல்கோத்ரா,விபத்து சிகிச்சை பிரிவு … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக பரப்புரை

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அதிமுக 10 ஆண்டுகளில் செய்ய முடியாததை திமுக 9 மாத கால ஆட்சியில் செய்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தனியார் வேலையில் 75% இடஒதுக்கீடு அரியானா சட்டத்துக்கு அனுமதி: உயர் நீதிமன்ற தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: அரியானா மாநிலத்தை சேர்ந்த மக்களுக்கு தனியார் துறை வேலைகளில் 75 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு பஞ்சாப் – அரியானா உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.அரியானா மாநிலத்தில் தனியார் துறை வேலைகளில் 75 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை இம்மாநில அரசு கொண்டு வந்தது. இதற்கு தடை விதிக்கும்படி, மாநிலத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தொழில் நிறுவனங்கள், பஞ்சாப் – அரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. … Read more