பெரம்பலூர் மாவட்டத்தில் தாயை நாட்டு வெடிகுண்டு வைத்து கொலை செய்த மகன் செல்வகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

சென்னை: பெரம்பலூர் மாவட்டத்தில் தாயை நாட்டு வெடிகுண்டு வைத்து கொலை செய்த வழக்கில் மகன் செல்வகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. களத்தூர் பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு சொத்தை அண்ணனுக்கு எழுதிவைத்ததால் ஆத்திரமடைந்த செல்வகுமார் தாயை நாட்டு வெடிகுண்டு வைத்து கொலை செய்துள்ளார்.

உ.பி.யில் இரும்பு கிரில் அறுந்ததால் கிணற்றில் விழுந்து 13 பெண்கள் உயிரிழப்பு: திருமண விழாவில் சோகம்

லக்னோ: உ.பி.யில் இரும்பு கிரில் அறுந்ததால் கிணற்றில் அமர்ந்திருந்த 13 பெண்கள் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தனர். திருமண விழாவில் நடந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் குஷி மாவட்டத்தில் உள்ள நௌரங்கியா கிராமத்தில் நேற்று ஒரு திருமணம் நடந்தது. மணமகன், மணமகள் வீட்டார் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் விழாவுக்கு வந்திருந்தனர். விழாவின் போது, ​சடங்கு நிகழ்ச்சிக்காக ​கூடியிருந்த பெண்கள் அங்கிருந்த கிணற்று இரும்பு கிரிலில் அமர்ந்திருந்தனர். அதிக … Read more

பெங்களூரு விமான நிலையத் தாக்குதல் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்கத் தடை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பெங்களூரு விமான நிலையத் தாக்குதல் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்கத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் மகா காந்தி என்பவரை பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதி, மேலாளர் தாக்கியதாக வழக்கு தொடரப்பட்டது.

ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை முதல் ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளுக்கு பயணம்

டெல்லி: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை முதல் வரும் 23ஆம் தேதி வரை ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.  முனிச் பாதுகாப்பு மாநாடு உட்பட பல நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

லீ மெரிடியன் ஹோட்டலை கையகப்படுத்தும் திட்டம் ரத்து: தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தீர்ப்பு

சென்னை: அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் லீ மெரிடியன் ஹோட்டலை, எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நிறுவனம் கையகப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. லீ மெரிடியன் ஹோட்டலை கையகப்படுத்தும் திட்டத்தை ரத்து செய்து தேசிய நிறுவன தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.

சினாமிகாவின் கதை என்ன- பிருந்தா மாஸ்டர் விளக்கம்

நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் முதன் முதலாக இயக்கும் படம் ஹே சினாமிகா.  இப்படத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் நடித்துள்ளனர். தமிழ், மலையாள மொழிகளில் வருகிறமார்ச் 3ம் தேதி  …

'வீடுகளில் பாதுகாப்பு இல்லாதவர்களே ஹிஜாப் அணிய வேண்டும்': பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்குர் சர்ச்சை பேச்சு

போபால்: வீடுகளில் பாதுகாப்பு இல்லாதவர்களே ஹிஜாப் அணிய வேண்டும் என பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குர் தெரிவித்துள்ள கருத்து சர்சையை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவி துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகளை அணியக்கூடாது என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கர்நாடகாவில் போலீஸ் பாதுகாப்புடன் க‌ல்லூரிகள் திறக்கப்பட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி ஹிஜாப்புக்கு தடை விதித்ததால் மாணவிகள் … Read more

திண்டுக்கல் நர்சிங் கல்லூரி தாளாளரின் ஜாமீனை ரத்து செய்யகோரிய வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை:பாலியல் தொல்லை அளித்த வழக்கில் திண்டுக்கல் நர்சிங் கல்லூரி தாளாளரின் ஜாமீனை ரத்து செய்யகோரிய வழக்கு அரசின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தனியார் நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

சொகுசு கார் வாங்கிய ரம்யா பாண்டியன்

சொகுசு கார் வாங்கிய ரம்யா பாண்டியன் 2/17/2022 4:59:03 PM ஜோக்கர், ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். சினிமா வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மம்முட்டி நடிக்கும் நன்பகல் நேரத்து மயக்கம் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் ரம்யா பாண்டின் பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். இதன் மதிப்பு 50 லட்சத்துக்கு மேல் என்கிறார்கள். தான் காருடன் நிற்கும் படத்தை … Read more

தேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது!: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்..!!

டெல்லி: தேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நியூட்ரினோ திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிக்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நியூட்ரினோ திட்ட அமைவிடம், மதிகெட்டான் – பெரியார் புலிகள் இடம்பெயர்வு பாதையில் அமைந்துள்ளதால் காட்டுயிர் வாரிய அனுமதி வழங்க முடியாது என தேனி மாவட்ட வனத்துறை பரிந்துரைத்துள்ளதாக … Read more