சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.616 உயர்ந்து ரூ.37,920-க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.616 உயர்ந்து ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.77 உயர்ந்து ரூ.4,740-க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.68.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மலையாள படத்தில் அறிமுகமாகும் ஸ்ரீராம்

மலையாள படத்தில் அறிமுகமாகும் ஸ்ரீராம் 2/17/2022 3:09:29 PM பசங்க படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றவர் ஸ்ரீராம். தற்போது அவர் மலையாளப் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ப்ளூம் இண்டர்நேஷனல் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வேணு கோபாலகிருஷ்ணன் தயாரிப்பில் ‘எக்ஸிட் ‘ எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில்  தனி நாயகனாக ஸ்ரீராம் அறிமுகமாகிறார் . புதுமுக இயக்குநர் ஷாகீன் படத்தை இயக்கி வருகிறார். கடந்த ஜனவரி 15 ஆம்தேதி … Read more

விமான கட்டணம் 3மடங்கு உயர்வு: உக்ரைனில் இருந்து தாயகம் திரும்ப இந்திய மாணவர்கள் ஆர்வம்

புதுடெல்லி: போர் பதற்றம் காரணமாக உக்ரைனில் உள்ள இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் உக்ரைனில் இருந்து இந்தியா வருவதற்கான விமான கட்டணம் 3 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. கேரளா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 20,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் உக்ரைனில் தங்கி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை படித்து வருகின்றனர். இந்த நிலையில் உக்ரைன்-ரஷ்யா இடையே போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளதால்  பெரும்பாலான மாணவர்கள் இந்தியா திரும்ப முனைப்பு காட்டி வருகின்றனர். ஆனால் இந்தியா திரும்புவதற்கான விமான … Read more

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சி திமுக வேட்பாளர் மாரடைப்பால் உயிரிழப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சி 9 வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அனுசுயா பரப்புரையின் போது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். மேலும் இன்று காலை ஈரோடு அம்மாபேட்டை திமுக வேட்பாளர் சித்தி ரெட்டி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்துவர எத்தனை விமானங்களை வேண்டுமானாலும் இயக்கலாம்!: ஒன்றிய அரசு அனுமதி

டெல்லி: உக்ரைனில் இருந்து எவ்வளவு விமானங்களை வேண்டுமானாலும் இந்தியாவுக்கு இயக்கலாம் என்று விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையே எந்த நேரத்திலும் போர் மூளலாம் என்ற அபாயம் நீடிப்பதால் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகள் உக்ரைனில் இருந்து வெளியேற தங்கள் நாட்டு மக்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. உக்ரைனில் இருந்து இந்தியர்கள் அங்கு தேவையில்லாமல் உள்நாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே உக்ரைனில் … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலைப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலைப்பகுதியில் இருந்து நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வனத்துறையினர் நடத்திய சோதனையில் நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஹிஜாப் அணிய வேண்டும் என குரானில் இல்லை!: போராடும் மாணவிகள் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள்..கேரள ஆளுநர் பேச்சு

திருவனந்தபுரம்: மாணவ, மாணவிகளின் சீருடையை தீர்மானிக்கும் அதிகாரம் பள்ளி, கல்லூரிகளுக்‍கு உண்டு என்றும் ஹிஜாப்பிற்காக போராடும் மாணவிகள் தங்களது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவி துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகளை அணியக்கூடாது என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கர்நாடகாவில் போலீஸ் பாதுகாப்புடன் க‌ல்லூரிகள் திறக்கப்பட்டது. ஆனால், நீதிமன்ற … Read more

விருதுநகர் அருகே பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்டதாக புகாரில் போலீசார் விசாரணை

விருதுநகர்: செவல்பட்டியில் ரூ.2 லட்சத்திற்கு ஒருவயது பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் தாய் கலைச்செல்வி உட்பட 8 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவில் கட்டுக்குள் வந்தது கொரோனா பரவல் : ஒரே நாளில் 30,757 பேருக்கு கொரோனா, 541 பேர் பலி;

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 30,757 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,27,54,315 ஆக உயர்ந்தது.* புதிதாக 541 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

பிப்-17: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.