இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா மறுமணம் : முதல்வர், திரைப்பிரபலங்கள் வாழ்த்து

இந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என பெயர் எடுத்தவர் தமிழ் சினிமாவை சேர்ந்த ஷங்கர். இவரது இரு மகள்களில் இரண்டாவது மகளான அதிதி தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், புதுச்சேரியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரோஹித்துக்கும் 2022ல் திருமணம் நடந்தது. பின்னர் அவர்கள் பிரிந்துவிட்டனர். அதன்பின் ஐஸ்வர்யாவுக்கு ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரியும் தருண் கார்த்திகேயன் உடன் சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இன்று(ஏப்., 15) இவர்களின் திருமணம் … Read more

வித்யாபாலனின் காதல் தோல்வி : அவரே வெளியிட்ட தகவல்

தமிழ் சினிமாவில் நிராகரிக்கப்பட்டு ஹிந்தி சினிமாவில் பெரிய வெற்றி பெற்றவர் வித்யாபாலன். தற்போது அங்கு முன்னணி நடிகையாக இருக்கிறார். படங்களில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் பொது வெளியில் பல கருத்துகளை தைரியமாக முன்வைப்பவர். குறிப்பாக, நடிகை என்றால் உடல் மெலிந்து சிவப்பாக இருக்க வேண்டும் என்ற பிம்பம் மீது தன்னுடைய கடுமையான விமர்சனங்களை வைத்தவர். தொழில் அதிபர் சித்தார்த் ராய் கபூரை 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தனது முதல் காதல் … Read more

ரூ.45 கோடிக்கு வீடு வாங்கிய பூஜா ஹெக்டே

'முகமூடி' படத்தின் மூலம் மிஷ்கினால் அறிமுகப்படுத்தப்பட்டவர் பூஜா ஹெக்டே. அந்த படம் வரவேற்பை பெறாத நிலையில் தொடர்ந்து வாய்ப்பில்லாமல் போகவே தெலுங்கு பக்கம் சென்று அங்கு முன்னணி நடிகை ஆனார். ஆனால் அவர் சமீபகாலமாக நடித்த படங்கள் தோல்வி அடைந்தது. இதனால் அவர் ராசி இல்லாத நடிகை என்ற பெயரையும் பெற்றார். இந்த நிலையில் ரூ.45 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி உள்ளார். மும்பையின் பாந்த்ரா பகுதியில் 4,000 சதுர அடியில் இந்த வீடு அமைந்துள்ளது. அவர் … Read more

புதிய தொழில் தொடங்கினார் நிஷா

சின்னத்திரையின் காமெடி நட்சத்திரம் அறந்தாங்கி நிஷா. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவரான நிஷா, 2015ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றார். அதைத்தொடர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி, பிக் பாஸ் சீசன் 4, ஸ்டார் கிட்ஸ் என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். உள்நாடு, வெளிநாட்டு மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 2018ம் ஆண்டு வெளியான 'மாரி 2' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். … Read more

கோட் பாடல்… ஆரம்பித்தது சர்ச்சை : விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படத்தின் விசில் போடு என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் விஜய்யே அந்த பாடலை பாடி இருப்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. 24 மணிநேரத்திற்குள்ளேயே 21 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த நிலையில் இந்த பாடல் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், மது பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் இருப்பதாக ஆன்லைன் மூலம் டிஜிபி அலுவலகத்தில் ஒருவர் புகார் அளிக்கிறார். அதில், விசில் போடு பாடலில் … Read more

ராம் சரணுக்கு டாக்டர் பட்டம்: சிரஞ்சீவி நெகிழ்ச்சி

சென்னை வேல்ஸ் பல்கலைகழகத்தின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் 4555 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. மாணவர்கள் தவிர கலை, இலக்கியம், விளையாட்டு உட்பட பல துறைகளைச் சார்ந்தவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு கலைத் துறையில் இருந்து நடிகர் ராம் சரணுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. மகன் டாக்டர் பட்டம் பெற்றது குறித்து தெலுங்கு சினிமாவின் மூத்த முன்னணி நடிகரும், ராம் சரணின் தந்தையுமான சிரஞ்சீவி தனது … Read more

ஓட்டுக்கு பணம் : விஜய் ஆண்டனி விளக்கம்

சமீபத்தில் கோவையில் 'ரோமியோ' பட புரமோஷன் விழாவில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி, “ஓட்டுக்கு யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் பிடித்த வேட்பாளருக்கு வாக்களியுங்கள்” என்று கூறினார். அவரின் இந்த கருத்து சர்ச்சை ஆனது. இந்த நிலையில் படத்தின் புரமோசனுக்காக மதுரை சென்ற விஜய் ஆண்டனி இதுகுறித்து விளக்கம் அளித்தார். அங்கு அவர் கூறியிருப்பதாவது: ஓட்டுக்குப் பணம் வாங்குவது சரி என்று சொல்லவில்லை. வறுமையில் இருப்பவர்களுக்கு வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், நல்லவர்களுக்கு ஓட்டு … Read more

'கங்குவா'வில் இரண்டு வேடத்தில் நடிக்கும் சூர்யா

சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக தயாராகி வரும் படம் 'கங்குவா'. இரண்டு பாகங்களாக வெளிவரும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சிவா இயக்குகிறார். சூர்யாவுடன் பாபி தியோல், திஷா பதானி, நட்ராஜ், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடிக்கிறார்கள். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார், தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இந்த படம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கதை மற்றும் தற்போது நடக்கும் கதை என இரண்டு காலகட்டங்களில் நடக்கும் … Read more

ஆறு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மலையாளத்திற்கு திரும்பிய ராய் லட்சுமி

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கடந்த 15 வருடங்களாக கவர்ச்சி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ராய் லட்சுமி. இங்குள்ள முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்காவிட்டாலும் மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டியுடன் தலா ஐந்து படங்களில் இணைந்து நடிக்கும் அளவிற்கு அங்கே அவருக்கு மலையாள ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தனர். அந்த வகையில் கடந்த 2018ல் ‛ஒரு குட்டநாடன் பிளாக்' என்கிற படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்திருந்தார் ராய் லட்சுமி. இந்த நிலையில் தற்போது ஆறு வருடங்கள் … Read more

முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் போல ஒரு கதையை என்னால் யோசிக்க முடியாது: வினீத் சீனிவாசன்

மலையாள திரையுலகின் இளம் இயக்குனர், நடிகர் வினீத் சீனிவாசனுக்கு என தனியாக ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது. தமிழகத்தில் கூட இவரது படங்களுக்கு என ஒரு வரவேற்பு இருக்கிறது. சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள 'வருஷங்களுக்கு சேஷம்' திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் என்கிற படத்தில் நடித்திருந்தார். இதில் வில்லத்தனம் கலந்த ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிப்பில் புதிய பரிமாணம் காட்டி இருந்தார் … Read more