தினமலர்
ஒன்றிணைந்து செயல்படுவோம் | Dinamalar
புதுடில்லி : ‘இந்தியாவுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் இடையில் பொதுவான பல அம்சங்கள் உள்ளன. நாம் ஒன்றிணைந்து பணியாற்றுவதன் வாயிலாக மக்களுக்கும், பருவநிலைக்கும், பூமிக்கும் பல நன்மைகளை செய்ய முடியும்’ என ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் தெரிவித்தார். ஐரோப்பிய யூனியனின் தலைவராக உர்சுலா வான் டெர் லெயன் பதவி ஏற்ற பின் முதல்முறையாக இந்தியா வந்துள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை அவர் சந்தித்து பேச உள்ளார். இந்நிலையில் … Read more
ஓடிடியில் வெளியாகும் மோகன்லாலின் டுவல்த் மேன்
மோகன்லாலை பொருத்தவரை கடந்த இரண்டு வருடங்களாக தனது படங்களின் ரிலீஸில் பரமபத ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறார் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. கொரோனா தாக்கம் காரணமாக தியேட்டரில் படங்கள் வெளியாகாத சூழ்நிலையில் அவர் நடித்த திரிஷ்யம் 2 திரைப்படம் ஓடிடியில் வெளியானது. அதைத்தொடர்ந்து நிலைமை ஓரளவு சீரான பின்பு அவர் நடித்து நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரைக்கார் திரைப்படம் தியேட்டரில் வெளியானது. இதையடுத்து அவரது படம் தியேட்டர்களில் தான் வெளியாகும் என நினைத்தால் பிருத்விராஜ் டைரக்ஷனில் அவரும் … Read more
பாக்., அமைச்சராகிறார் மாஜி பிரதமர் மகன்| Dinamalar
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராக பிலாவல் புட்டோ சர்தாரி, இரண்டு நாட்களில் பதவி ஏற்க உள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானில், சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தில் பிரதமராக இருந்த இம்ரான் கான் பதவியை இழந்தார். இதையடுத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைந்து, ஆட்சி அமைத்தன. பாக்., முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சித் தலைவரான ஷெபாஸ் ஷெரீப், நாட்டின் பிரதமராக பதவி ஏற்றார். கடந்த … Read more
ஜூன் மாதம் நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம்?
நானும் ரவுடிதான் படபிடிப்பு நடந்து வந்தபோது காதல் வயப்பட்ட நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். சமீபத்தில் ஒரு பேட்டியில், தங்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்ததை உறுதிப்படுத்தினார் நயன்தாரா. இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படம் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதன் பிறகு வருகிற ஜூன் மாதம் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் … Read more
அமெரிக்காவிடம் ஆயுதம் கேட்கிறார் உக்ரைன் அதிபர்| Dinamalar
கீவ் : உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மற்றும் ராணுவ அமைச்சரிடம், ராணுவ ஆயுதங்களை வழங்கி உதவும்படி கோரிக்கை வைக்க உள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த இரண்டு மாதங்களாக, ரஷ்யப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். உக்ரைன் ராணுவத்தினரும் அதற்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.இதற்கிடையே, உக்ரைனின் மரியுபோல், கார்கிவ், லுஹான்ஸ்க் ஆகிய நகரங்களில், ரஷ்யப் படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். போர் … Read more
சித்தார்த் மல்ஹோத்ரா- கியாரா அத்வானி பிரேக்அப்?
தற்போது ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கி வரும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி. வினய வித்யா ராம் என்ற படத்தில் ஏற்கனவே ராம்சரணுடன் நடித்துள்ள கியாரா அத்வானிக்கு அவருடன் இது இரண்டாவது படமாகும். சமீபத்தில் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்த கியாரா அத்வானி குறித்து பாலிவுட்டில் தற்போது ஒரு பரபரப்பு செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும், கியாரா அத்வானியும் காதலித்து வந்தனர். ஆனால் தற்போது அவர்களுக்கிடையே … Read more