இந்தியாவில் 10 ஆண்டுகளில் 17 லட்சம் பேருக்கு எய்ட்ஸ்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நம் நாட்டில் 10 ஆண்டுகளில் 17 லட்சத்திற்கும் அதிகமானோர் ‘எய்ட்ஸ்’ பாதிப்பிற்கு ஆளாகி உள்ளதாக, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்து உள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர், நாட்டின் ‘எய்ட்ஸ்’ பாதிப்பு நிலவரம் குறித்து, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் விபரம் கோரினார். இதற்கு, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு சமீபத்தில் அளித்த பதில் … Read more

தென்னிந்திய அளவில் அரபிக்குத்து பாடல் செய்த மெகா சாதனை

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஏப்ரல் 13ம் தேதி திரைக்கு வந்த படம் பீஸ்ட். 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ள இந்த படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்ற அரபிக் குத்து என்ற பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி சினிமாவை சேர்ந்த பிரபலங்களும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்கள் வெளியிட்டார்கள். இந்த நிலையில் அரபிக்குத்து பாடல் தற்போது யூடியூப்பில் 6 மில்லியன் லைக்ஸ் பெற்று 375 மில்லியன் பார்வையாளர்களை … Read more

ஒரு மாத தமிழ் மொழி திருவிழா: சிங்கப்பூர் அரசு ஏற்பாடு

சிங்கப்பூர்-சிங்கப்பூரின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை கொண்டாடவும், ஊக்குவிக்கவும் ஒரு மாத திருவிழாவுக்கு அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் சீன மொழி, மலாய், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளன.பள்ளிகளில் தாய்மொழிப் பாடம் என இந்த மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. பார்லிமென்டிலும் பயன்பாட்டில் உள்ளது. அந்நாட்டு ரூபாய் நோட்டுகளிலும் இந்த நான்கு மொழிகளும் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் தமிழ் மொழியை அடுத்த தலைமுறையினருக்கு பயிற்றுவிக்கவும், மொழியை ஊக்குவிக்கும் விதமாகவும், … Read more

களைகட்டிய கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா  சுற்றுலா பயணியர் வருகை அதிகரிப்பு| Dinamalar

பெங்களூரு : இரண்டு ஆண்டுகளாக, வெறிச்சோடி காணப்பட்ட லால்பாக் பூங்கா, கப்பன் பூங்கா களை கட்டியுள்ளது. சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.பெங்களூரின் லால்பாக், கப்பன் பூங்காக்கள் வரலாற்று பிரசித்தி பெற்றவை. தினமும் ஆயிரக்கணக்கானோர், காலை, மாலையில் இப்பூங்காக்களில் நடை பயிற்சி செய்வர். வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்து சுறறுலா பயணியர் வருவர். இதனால் இப்பூங்காக்கள் எப்போதும் களை கட்டியிருக்கும்.கொரோனா பரவியதால், மாதக்கணக்கில் பூங்காக்களில் சுற்றுலா பயணியர், பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. வெறிச்சோடி காணப்பட்டது.தற்போது தொற்று குறைந்ததால், … Read more

அஜித்-ஷாலினி தம்பதிக்கு 22வது திருமண நாள்! குவியும் வாழ்த்துக்கள்!!

அஜித் குமாரும், ஷாலினியும் சரண் இயக்கிய அமர்க்களம் என்ற படத்தில் இணைந்து நடித்து வந்தபோது காதலித்தவர்கள், 2000ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில் அஜித்- ஷாலினி தம்பதி இன்று 22வது திருமண நாளை கொண்டாடி வருகிறார்கள். இதை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ஹேஷ்டேக் ட்ரென்டிங் செய்து, அஜித்-ஷாலினி தம்பதிக்கு வாழ்த்துகளையும், அவர்கள் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் இணையத்தில் … Read more

கோழி வளர்க்கிறார் கிரிக்கெட் வீரர் தோனி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜாபுவா-இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி,’கடக்நாத்’ எனப்படும், கறுப்பு நிற கோழிகளை, தன் பண்ணையில் வளர்க்கிறார். இதற்காக, 2,000 கோழிகள் மத்திய பிரதேசத்தில் இருந்து அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள ஜாபுவா உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே வளர்கின்றன, கடக்நாத் எனப்படும் கறுப்பு நிற கோழிகள். புரதச்சத்து அதிகம் உள்ள இந்தக் கோழிகளுக்கு, … Read more

இரண்டு வார இடைவெளியில் வெளியாகும் ஜோசப் தமிழ் தெலுங்கு ரீமேக்குகள்

பொதுவாக மலையாளத்தில் ஹிட் அடித்த படம் ஒன்றை மற்ற தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்வதற்காக போட்டி போட்டு வாங்குவார்கள். ஆனால் ஒவ்வொரு மொழி ரீமேக்கும் வெவ்வேறு காலகட்டத்தில் வெளியாவது தான் வழக்கம். இதற்கு முன்னதாக திலீப் நடித்த பாடிகார்ட், மோகன்லால் நடித்த திரிஷ்யம் ஆகிய படங்களின் ரீமேக்குகள் இந்த விதமாகத்தான் வெளியாகி உள்ளன. அதேசமயம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஜோசப் என்கிற படமும் இதே போல தமிழ், தெலுங்கு … Read more

ஜெய், சுந்தர் சி நடிப்பில் 'பட்டாம்பூச்சி' டீசர் வெளியீடு

முதல் முறையாக நடிகர் ஜெய் மற்றும் இயக்குனர் சுந்தர் சி இணைந்து நடித்துள்ள படம் பட்டாம்பூச்சி . சைக்கோ த்ரில்லரில் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் சுந்தர் சி போலீசாகவும், ஜெய் சைக்கோ கொலைக்காரனாகவும் நடித்துள்ளனர். இயக்குனர் பத்ரி இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹனிரோஸ் வர்கீஸ், இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நவ்நீத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். குஷ்பூவின் அவ்னி டெலி மீடியா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் மே மாதம் 13ம் வெளியாகவுள்ளது. … Read more

மலையாள தயாரிப்பாளர் ஜான் பால் காலமானார்

மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளருமாகிய ஜான் பால் (வயது 71), கடந்த இரு மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஜான் பாலின் நண்பர் இவரது சிகிச்சைக்கு உதவுமாறு சமூக வலைதளங்களில் கோரியிருந்தார். இதனையடுத்து இவரது சிகிச்சைக்காக கேரள அரசு முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் ஒதுக்கியது. இந்நிலையில், கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த ஜான் பால், நேற்று … Read more