சமையல் எண்ணெய் விலை உயரும் அபாயம்| Dinamalar

புதுடில்லி : நாட்டில் சமையல் எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில், ‘பாமாயில்’ எற்றுமதியை தடை செய்ய, இந்தோனேசியா அரசு முடிவு செய்துள்ளதால், அவற்றின் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது கிழக்கு ஐரோபிய நாடான உக்ரைன், விவசாய உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகளில் ஒன்று. குறிப்பாக, சமையல் எண்ணெய் உற்பத்தியில் உக்ரைன் முன்னணி வகிக்கிறது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால், அந்நாட்டில் விவசாய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உக்ரைனிலிருந்து சமையல் எண்ணெய் உட்பட விவசாய … Read more

பாக்., வீரர்கள் மூவர் உயிரிழப்பு| Dinamalar

இஸ்லாமாபாத் : நம் அண்டை நாடான பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் மாகாணத்தில் உள்ள தேவாககர் கிராமம் அருகே ஆப்கானிஸ்தான் எல்லை அமைந்துள்ளது. இந்நாட்டை சேர்ந்த பயங்கரவாதிகள் சிலர் நேற்று, எல்லையை தாண்டி வந்து பாக்., ராணுவ முகாம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாக்., ராணுவமும் திருப்பித் தாக்கியது. இச்சண்டையில் பாக்., ராணுவ வீரர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். இம்மாகாணத்தில் ஆப்கன் பயங்கரவாதிகள் அடிக்கடி எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்துவதாகவும், கடந்த இரண்டு மாதங்களில் தாக்குதல் அதிகரித்து … Read more

நான் என்ன அனுமனா; ஒரு நிருபரின் டைரி; நினைவலைகள்| Dinamalar

தமிழக முதல்வராக இருந்த போது கருணாநிதி எப்போது டில்லி வந்தாலும் பத்திரிகையாளர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த, 1990களில் இப்போது இருப்பது போல புற்றீசல் போல தனியார் ‘டிவி’ சேனல்கள் கிடையாது. ஒன்றோ இரண்டோ தனியார் செய்தி சேனல்கள் மட்டுமே. வழக்கம் போல துார்தர்ஷன் உண்டு. ‘பிடிஐ, யுஎன்ஐ’ செய்தி நிறுவனங்களின் சீனியர் எடிட்டர்கள் இரண்டு பேர் மீது கருணாநிதிக்கு தனி கரிசனம். இருவரும் தமிழர்கள். ஏதாவது முக்கிய செய்தி சொல்ல வேண்டுமென்றால் அவர்களை அழைத்துதான் சொல்வார். … Read more

ஆந்திர கிராமத்தை சுற்றும் ஆவி; விரட்டுவதற்கு ஊரடங்கு அறிவிப்பு| Dinamalar

ஸ்ரீகாகுளம் : ஆந்திராவில் உள்ள கிராமத்தை ஆவிகள் சுற்றி வருவதாக நம்பிய மக்கள், அவற்றை விரட்டும் பூஜைகள் நடத்த ஊரடங்கை அமல்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, ஸ்ரீகாகுளம் மாவட்டம் சருபுஜ்ஜிலி கிராமத்தில் நடந்த வினோத சம்பவம், அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சருபுஜ்ஜிலி கிராமத்தை ஆவிகள் சூழ்ந்துள்ளதாக நம்பிய மக்கள், அவற்றை விரட்ட பூஜை செய்து வருகின்றனர். இதற்காக, 17 – 25 தேதிகளில் … Read more

செய்திகளை மிகைப்படுத்த கூடாது: டிவி சேனல்களுக்கு எச்சரிக்கை| Dinamalar

புதுடில்லி : ‘உக்ரைன் – ரஷ்யா போர் மற்றும் டில்லி வன்முறை தொடர்பாக, மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை வெளியிடக் கூடாது’ என, ‘டிவி சேனல்’களுக்கு மத்திய அரசு எச்சரித்து உள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் மற்றும் டில்லியின் ஜஹாங்கீர்புரியில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக, ‘டிவி’க்களில் வரும் செய்திகள் மிகைப்படுத்தப்பட்டு வெளியிடப்படுவதாக மத்திய அரசு கருதுகிறது. இந்நிலையில், டிவி சேனல்களுக்கு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை நேற்று சில அறிவுறுத்தல்களை வழங்கியது. அதன் விபரம்:உக்ரைன் – … Read more