300 ஆண்டு கோவில் இடிப்பு காங்., மீது பா.ஜ., குற்றச்சாட்டு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஆல்வார் : ராஜஸ்தானில் 300 ஆண்டு பழமையான சிவன் கோவிலை, ஆக்கிரமிப்பு என காங்., அரசு இடித்ததாக பா.ஜ., குற்றஞ்சாட்டி உள்ளது.ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆல்வாரில் 300 ஆண்டு பழமையான சிவன் கோவில், ‘புல்டோசர்’ உதவியுடன் இடிக்கப்படும் ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.இக்கோவிலை இடித்ததாக கூறி, ராஜ்கர் லக் ஷ்மண்கர் தொகுதி காங்., – எம்.எல்.ஏ., ஜோஹ்ரி லால் மீனா … Read more

சுரேஷ்கோபி நடிக்கும் மே ஹூம் மூசா

மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டி ஆகியோருடன் சேர்ந்து மும்மூர்த்திகள் என அழைக்கப்பட்டவர் தான் நடிகர் சுரேஷ் கோபி. இடையில் சில காலம் அரசியலில் இறங்கிய சுரேஷ்கோபி, சினிமாவை விட்டு ஒதுங்கி அரசியலில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். தற்போது மீண்டும் கடந்த இரண்டு வருடங்களாக திரையுலகம் பக்கம் கவனம் செலுத்தி தொடங்கியுள்ள சுரேஷ்கோபி, தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் நடித்த காவல் என்கிற திரைப்படம் வெளியானது. இதைத்தொடர்ந்து பிரபல … Read more

உக்ரைனில் 9,000 பேர் கொன்று புதைப்பு? செயற்கைக்கோள் படத்தால் பரபரப்பு!| Dinamalar

ஜாபோர்ஜியா : உக்ரைனின் மரியுபோல் நகரில், அதிக எண்ணிக்கையிலான கல்லறைகள் கட்டப்பட்டுள்ளது, செயற்கைக்கோள் படத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது. இதில், 9,000க்கும் மேற்பட்ட மக்கள் கொன்று புதைக்கப்பட்டுள்ளதாக, உக்ரைன் அரசு குற்றஞ்சாட்டி உள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்ரவரி 24ம் தேதி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு, உக்ரைன் ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்தப் போரில், இருதரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, ரஷ்ய படையினர் நாட்டின் கிழக்கு பகுதிகளில் … Read more

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு: பூஸ்டர் டோஸ் செலுத்துவது அவசியம்

புதுடில்லி,-நம் நாட்டில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது. இது, நான்காவது அலைக்கு வழிவகுத்து விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். ‘இதுவரை இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், ‘பூஸ்டர் டோஸ்’ செலுத்துவது அவசியம்’ என, மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர். நாட்டில், கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வந்தது. இதற்கிடையே, கொரோனா பரவலை தடுக்க, மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இரண்டு … Read more

சோசியல் மீடியாவில் இருந்து விடைபெற்ற விஷ்ணு விஷால்

2009ல் வெண்ணிலா கபடி குழு மூலம் ஹீரோவாக அறிமுகமான விஷ்ணு விஷால், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தமிழில் வெளியான ராட்சசன் படம் மூலம் அதிக அளவில் ரசிகர்களை சம்பாதித்தார். அதற்கடுத்ததாக அவரது படங்கள் மீது ஓரளவு எதிர்பார்ப்பு எழ ஆரம்பித்தது அதனால் ரசிகர்களுடன் சோசியல் மீடியாவில் நேரடி தொடர்பில் இருந்து வந்த விஷ்ணு விஷால், தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய படங்களை பற்றியும் தன்னுடைய சொந்த விஷயங்களை பற்றியும் அவ்வப்போது அப்டேட் செய்து வந்தார். ஆனால் … Read more

ஆப்கனில் குண்டு வெடிப்பு: 33 பேர் பலி| Dinamalar

காபூல்,-ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் நேற்று நடந்த குண்டு வெடிப்பில், 33 பேர் பலியாகினர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் ஆட்சி நடக்கிறது. இங்கு குண்டூஸ் மாகாணம், இமாம் சாகிப் நகரில் உள்ள ஒரு மசூதி மற்றும் அதையொட்டியுள்ள மதரசா பள்ளியில் நேற்று பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில், 33 பேர் உடல் சிதறி பலியாகினர்; 43 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. காபூல்,-ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் நேற்று … Read more

மங்களூரு மசூதி அடிப்பகுதியில் ஹிந்து கோவில் கட்டுமானங்கள்| Dinamalar

மங்களூரு,: மங்களூரில், மசூதி யின் அடிப்பகுதியில் ஹிந்து கோவில் கட்டுமானங்கள் இருப்பது தெரிய வந்துள்ளதால், அந்த நிலம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி துவங்கி உள்ளது. சீரமைக்கும் பணிகர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மங்களூரின் புறநகர் பகுதியான மலாலியில் உள்ள ஒரு மசூதியை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, மசூதியின் அடிப்பகுதி மண் அகற்றப்பட்டபோது, அங்கு கோவில் கட்டுமானங்கள் இருப்பது, தெரிய வந்தது.இதையடுத்து, ‘நிலம் தொடர்பான ஆவணங்களை … Read more

விஷ்ணு மஞ்சுவுக்கு பரோட்டா சுட்டு கொடுத்த சன்னி லியோன்

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனுக்கு தென்னிந்திய ரசிகர்களிடமும் மிகப்பெரிய அளவில் ஈர்ப்பு இருந்ததால் தமிழ், தெலுங்கு, மொழிகளில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடவைத்து ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்தார்கள். மலையாள சினிமாவில் இன்னும் ஒருபடி மேலே போய் சன்னி லியோனின் முழு நடிப்புத் திறமையையும் வெளிக்கொண்டு வரும் விதமாக அவரை கதாநாயகியாக்கி அழகு பார்க்க ஆரம்பித்துள்ளார்கள். தற்போது தெலுங்கிலும் விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடிக்கும் படத்தில் சன்னி லியோனுக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுத்துள்ளார்கள். இந்த படத்தில் கதாநாயகியாக பாயல் … Read more

குயவர் பேட்டையில் ஜாத்திரை திருவிழா | Dinamalar

கொசப்பேட்டை என்று மருவி அழைக்கப்படும் குயவர் பேட்டையில் ஜாத்திரை திருவிழா கோலாகலமாக நடந்தது.இன்று மிகப்பெரிய நகரமாக உருவெடுத்துள்ள சென்னை, ஒரு காலத்தில் தனித்தனி கிராமங்களாக தான் இருந்தது.அப்போது அவர்களுக்கு என்று இருந்த தனி கிராம தேவதை, இப்போதும் தனித்துவமாக இருந்து அருள்பாலிக்கிறார். சென்னை, புரசைவாக்கத்தின் மத்திய பகுதியில் உள்ள பலராலும், கொசப்பேட்டை என்று மருவி அழைக்கப்படுகிறது குயவர் பேட்டை.இங்கு வசிப்போர் தங்கள் தெய்வமான ஆதி மொட்டையம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியன்று, ஜாத்திரை திருவிழா என்ற பெயரில் … Read more