70 வருடங்களைக் கடந்த 'அந்த நாள்'

கிரைம் திரில்லர் படங்கள் என்பது இந்தக் காலத்தில் அதிகம் ரசிக்கப்படும் ஒரு படமாக இருக்கிறது. எந்த மொழிப் படங்களாக இருந்தாலும் ஓடிடி தளங்களில் அம்மாதிரியான படங்களைத்தான் அதிகம் பார்க்கிறார்கள் என்ற ஒரு தகவலும் உண்டு. தமிழ் சினிமாவில் 70 வருடங்களுக்கு முன்பே அதிரடியான ஒரு கிரைம் திரில்லர் படத்தை வெளியிட்டுள்ளார்கள். அப்படத்தின் பெயர் 'அந்த நாள்'. அப்படம் வெளியாகி இன்றுடன் 70 ஆண்டுகள் நிறைவடைகிறது. பிரபல வீணை இசைக்கலைஞரான எஸ்.பாலசந்தர் இயக்கிய படம். சிவாஜிகணேசன், பண்டரிபாய் மற்றும் … Read more

'ஜெயிலர்' இரண்டாம் பாகத்திற்கு தலைப்பு வச்சிட்டாங்களா?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி 600 கோடி வசூலைக் கடந்த படம் 'ஜெயிலர்'. இப்படத்தின் மாபெரும் வெற்றியால் இரண்டாம் பாகமும் தயாராகலாம் என்று சொல்லப்பட்டது. ரஜினிகாந்த் தற்போது 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரது 171வது படத்தில் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு ஜுன் மாதம் ஆரம்பமாகலாம். அதற்குப் … Read more

‛அனிமல்'-ஐ பார்ப்பவர்கள் ‛சித்தா'-வை பார்க்க முடியவில்லையா : சித்தார்த்

கடந்தாண்டு சித்தார்த் நடிப்பில் வெளியான ‛சித்தா' படம் வரவேற்பை பெற்றது. தற்போது கமல் உடன் ‛இந்தியன் 2' படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் விருது விழா ஒன்றில் இவர் பங்கேற்றார். அதில் அவருக்கு இந்த படத்திற்காக விருது வழங்கப்பட்டது. விழாவில் பேசிய சித்தார்த், ‛‛சித்தா படத்தை எங்களால் பார்க்க முடியவில்லை என எந்த பெண்ணும் கூறவில்லை. ஆனால் சில ஆண்கள் கூறியதாக என்னிடமும், இயக்குனர் அருண்குமாரிடமும் கூறினார்கள். மிருகம் என தலைப்பு வைத்த படத்தை பார்க்கிறார்கள். ஆனால் என் … Read more

'சப்தம்' கிளைமாக்சுக்காக ரூ.2 கோடியில் ‛ஓல்டு லைப்ரரி': அறிவழகன் தகவல்

அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான படம் 'ஈரம்'. தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு அறிவழகன் – ஆதி கூட்டணி 'சப்தம்' என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை அறிவழகனே தயாரிக்கிறார். படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில் படம் பற்றி இயக்குனர் … Read more

3 ஆண்டுகளுக்கு பிறகு வரும் சாய் தன்ஷிகா : ஆக்ஷன் படத்தில் நடிக்கிறார்

'பேராண்மை' படத்தின் மூலம் கவனிக்கப்பட்டவர் சாய் தன்ஷிகா. அதன்பிறகு மாஞ்சா வேலு, அரவான், பரதேசி, கபாலி, விழித்திரு, காத்தாடி, இருட்டு உள்பட பல படங்களில் நடித்தார். கடைசியாக 'லாபம்' படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார். அதன்பிறகு தமிழில் பட வாய்ப்புகள் அமையவில்லை. தெலுங்கு பக்கம் சென்றவர் அங்கு ஓரிரு படத்தில் நடித்தார். தற்போது 3 வருட இடைவெளிக்கு பிறகு 'தி புரூப்' என்ற படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். தன்ஷிகா தவிர ரித்விகா, அசோக், ருத்வீர்வரதன், இந்திரஜா, … Read more

சிங்கம் சிங்கிளா வரும் : மாஸ் காட்டும் வெங்கடேஷ் பட்

சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார் சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட். குக் வித் கோமாளி சீசன் 5 விரைவில் துவங்க உள்ள நிலையில அதில் தான் இடம்பெறவில்லை என்பதை பகிரங்கமாக அறிவித்த அவர், இதை விட புதிய பரிணாமத்தில் பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், அவர் புதிதாக பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக டப்பிங் பேசும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் தற்போது பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் சிங்கம் சிங்கிளா தான் … Read more

மிஸ்டர் மனைவி சீரியலிலிருந்து விலகிய ஷபானா : அவரே சொன்ன காரணம்

ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஷபானா தற்போது மிஸ்டர் மனைவி என்கிற தொடரில் நடித்து வருகிறார். மக்கள் மத்தியில் இந்த தொடருக்கும், ஷபானாவுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால், ஷபானா இந்த தொடரிலிருந்து விலகுவதாக அண்மையில் செய்திகள் வெளியானது. இதனால், அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் ஷபானா கர்ப்பமாக இருப்பதால் தான் சீரியலை விட்டு விலகுவதாக கிசுகிசுக்க ஆரம்பித்தனர். இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள ஷபானா, 'நான் சீரியலிலிருந்து விலகியது உண்மை தான். ஆனால், … Read more

பிளாஷ்பேக் : தன் வாழ்க்கையை ஒரேநாளில் வாழ்ந்து காட்டிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

தமிழ் சினிமாவின் 'பாட்டுக் கோட்டை' பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். தமிழ் சினிமாவை வார்த்தைகளால் கட்டிப்போட்ட இளைஞர். எனக்கு மட்டும் பாட்டு எழுதுங்கள் உங்களை நான் ராஜாவாக்குகிறேன் என்று எம்ஜிஆரால் அழைக்கப்பட்டவர், ஆனால் அதை மறுத்து 19 இசை அமைப்பாளர்களுக்கு பாட்டு எழுதியவர். ஒரு முறை அவரை சந்தித்த பத்திரிகையாளர் ஒருவர் உங்களின் வாழ்க்கை வரலாற்றை எழுத விரும்புகிறேன். அதை எனக்கு சொல்வீர்களா என்று கேட்டார். அதற்கு கவிஞர் “வாருங்கள் இன்றைக்கே அதை சொல்கிறேன்” என்று கூறி, அந்த … Read more

ஒரு வழியாக முடிந்தது 'வணங்கான்' படப்பிடிப்பு

நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலா இயக்கி வரும் படம் 'வணங்கான்'. இந்த படத்தில் ஆரம்பத்தில் சூர்யா நடித்து, தயாரித்தார். பின்னர் பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் படத்தில் இருந்து விலக்கினார். அதன்பிறகு அருண் விஜய் நடிப்பில் படம் தயாரானது. கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின், சண்முகராஜன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அமைதிப்படை 2, கங்காரு, மிகமிக அவசரம், மாநாடு உள்ளிட்ட படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி … Read more

தனுஷ் தந்தை என்று உரிமை கோரிய மேலூர் கதிரேசன் மரணம்

மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்தவர் கதிரேசன். இவருடைய மனைவி மீனாட்சி. இந்த தம்பதியர், நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்றும், தங்களுக்கு வயதாகிவிட்டதால், பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டு மேலூர் கோர்ட், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். பல ஆண்டுகள் நடந்த இந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. என்றாலும் தனுஷ் தாக்கல் செய்தது போலி ஆவணங்கள் என்றும் மேலூர் தம்பதிகள் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு நடந்து வருகிறது. … Read more