ஸ்ரீலீலாவிற்கு பதிலாக ரவி தேஜா பட நடிகை

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 12வது படத்தை ஜெர்ஸி பட இயக்குனர் கவுதம் தின்னூரி இயக்குகிறார் . சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்கிறார் . கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ஸ்ரீலீலா நடிப்பதாக அறிவித்தனர். சமீபத்தில் இப்படத்திலிருந்து ஒரு சில காரணங்களால் ஸ்ரீலீலா வெளியேறியதாக தகவல்கள் வெளியானது. தொடர்ந்து தற்போது இதில் கதாநாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸே ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் … Read more

‛ஓ மை கடவுளே' பட இயக்குனர் உடன் இணைந்த பிரதீப் ரங்கநாதன்

கடந்த 2020ல் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்து வரவேற்பை பெற்ற திரைப்படம் 'ஓ மை கடவுளே'. இதன் வெற்றிக்குப் பிறகு அஸ்வந்த் மாரிமுத்துவின் அடுத்த படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கின்றார். இதனை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தனது 26வது படமாக தயாரிக்கின்றனர். லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பின் மீண்டும் கல்பாத்தி … Read more

சப்தம் படத்தின் டீசர் அப்டேட்

ஈரம் படத்திற்கு பிறகு இயக்குனர் அறிவழகன், நடிகர் ஆதி கூட்டணியில் உருவாகி வரும் படம் 'சப்தம்'. இதில் சிம்ரன், லட்சுமி மேனன், லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆல்பா பிரேம்ஸ், 7ஜி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். வித்தியாசமான ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த நிலையில் இதன் டீசர் நாளை ஏப்ரல் 12ந் தேதி அன்று வெளியாகும் என … Read more

இப்படி தொடலாமா? : போனி கபூரைத் திட்டும் ரசிகர்கள்

தமிழில் அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு' உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர். அவரது தயாரிப்பில் நேற்று வெளியான ஹிந்திப் படம் 'மைதான்'. இப்படத்தில் அஜய் தேவகன் கதாநாயகனாக நடிக்க, அவரது ஜோடியாக பிரியாமணி நடித்துள்ளார். இப்படத்தின் பிரிமீயர் காட்சி மும்பையில் நடைபெற்றது. அப்போது பிரியாமணி புகைப்படக்காரர்களுக்கு 'போஸ்' கொடுத்துக் கொண்டிருந்தார். அவருடன் தயாரிப்பாளர் போனி கபூரும் சேர்ந்து நின்ற போது அவரை தோள் மீதும், … Read more

அம்மாவுக்காக சென்னையில் சாய்பாபா கோவில் கட்டி கொடுத்த விஜய்

கோட் படத்தில் நடித்து வரும் விஜய், இந்த இடத்திற்கு பிறகு தனது 69 வது படத்தில் நடிக்க போகிறார். அந்த படத்தில் நடித்து முடித்ததும் தீவிர அரசியலில் இறங்குகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய், சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. அது சீரடி சாய்பாபா கோவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த புகைப்படம் குறித்து ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அது … Read more

'மரண மாஸ்'- தலைப்பே வச்சிட்டாங்க…

“மரண மாஸ், கொல மாஸ், தெறி மாஸ்” என இந்தக் காலத்தில் அதிகம் உச்சரிக்கப்படும் சில பாராட்டு வார்த்தைகள். அதில் ஒரு வார்த்தையான 'மரண மாஸ்' என்பதையே படத்தின் தலைப்பாக வைத்துவிட்டார்கள். ஆனால், இங்கல்ல, மலையாளத்தில். மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான டொவினோ தாமஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை சிவபிரசாத் இயக்குகிறார். பாசில் ஜோசப், ராஜேஷ் மாதவன், சிஜு சன்னி, சுரேஷ் கிருஷ்ணா மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். டொவினோ தாமஸ் தற்போது நடித்து வரும் படத்தின் … Read more

'தேவரா' படத்தை வாங்கிய கரண் ஜோஹர்

தெலுங்குத் திரையுலகத்தை வட இந்தியா வரை கொண்டு சென்றவர் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர். அவருக்கு சொந்தமான தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தான் 'பாகுபலி 1, பாகுலி 2' ஆகிய படங்களை வட இந்தியாவில் வினியோகம் செய்து அந்தப் படங்களை பிரம்மாண்ட வெற்றி பெற வைத்தது. சுமார் ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிரம்மாண்ட தெலுங்குப் படமான 'தேவரா' படத்தை வட இந்தியாவில் வினியோகிக்க உள்ளது. ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிக்கும் … Read more

என் ரசிகர்கள் காலரை தூக்கி விட்டுக்கொள்ளும் படமாக 'தேவரா' இருக்கும் : ஜூனியர் என்டிஆர்

ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் படம் 'தேவரா'. கொரட்டாலா சிவா இயக்கி வரும் இந்த படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். மற்றும் முக்கிய வேடங்களில் பாலிவுட் நடிகர் சைப் அலிகான், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோ நடிக்கின்றனர். இந்த படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் ரிலீஸுக்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள டில்லு ஸ்கொயர் படத்தின் சக்சஸ் … Read more

மலையாள சினிமாவின் அஜித்தாக மாறிவரும் பிரணவ் மோகன்லால்

மலையாள திரையுலகில் துல்கர் சல்மான், பஹத் பாசில் என நட்சத்திர வாரிசுகள் அனைவரும் கொஞ்சம் முன்னதாக சினிமாவில் களம் இறங்கி விட, சற்று தாமதமாகவே நடிகராக அறிமுகமானவர் மோகன்லாலின் மகன் பிரணவ். முதலில் இயக்குனராகும் ஆசையில் இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் திரிஷ்யம் உள்ளிட்ட சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஆனாலும் அவரது டைரக்ஷனிலேயே ஆதி என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டு, ஹிருதயம் என மொத்தம் மூன்று படங்களில் நடித்துள்ள பிரணவ் தற்போது … Read more

இந்தியன் 2வில் மனீஷா கொய்ராலா

ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஜூன் மாதம் திரைக்கு வருவதாக அறிவித்துள்ளார்கள். மேலும், இந்த இரண்டாம் பாகத்தில் இந்தியன் படத்தில் கமலுடன் நடித்த மனீஷா கொய்ராலா சம்பந்தப்பட்ட சில காட்சிகளும் இடம் பெற உள்ளதாம். அதனால் சமீபத்தில் மும்பை சென்ற … Read more