குலசாமிக்கு பிறகு விஜயகாந்த் தான்; நினைவிடத்தில் ரோபோ சங்கர் உருக்கம்!

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு அண்மையில் கார்த்திக் என்பவருடன் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. புதுமண தம்பதிகளை விஜயகாந்த் நினைவிடத்திற்கு அழைத்துச் சென்ற ரோபோ சங்கர் அதுகுறித்து உருக்கமாக பேசியுள்ளார். அவர் பேசியபோது, 'கேப்டனை பார்க்க கட்டுக்கடங்காத கூட்டம் வந்து கொண்டிருக்கிறது. ஒரு ரசிகனாக புதுமண தம்பதிகளை கூட்டிக்கொண்டு குடும்பத்துடன் இங்கே வந்திருக்கிறோம். திருமணத்திற்கு பிறகு என் பெண்ணையும் மாப்பிள்ளையும் அழைத்துக்கொண்டு குலசாமியை பார்த்ததும் நேராக கேப்டனை தான் பார்க்க வந்துள்ளோம். தமிழ் சினிமாவிலும் சரி, அரசியலிலும் … Read more

‛விஜய் 69' படத்தில் நடிக்க 4 நடிகைகளிடம் பேச்சுவார்த்தை!

தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‛கோட்' படத்தில் நடித்து வரும் விஜய், அதை அடுத்து தனது கடைசி படமான 69 வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தை சதுரங்க வேட்டை, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களை இயக்கிய எச். வினோத் இயக்குகிறார். இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பதற்கு தமிழ் நடிகைகளான திரிஷா, சமந்தா மற்றும் பாலிவுட் நடிகைகள் ஆலியா பட், மிருணாள் தாக்கூர் ஆகியோரிடத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஒரு தகவல் … Read more

நடிகை மஞ்சு வாரியர் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

தமிழகத்தில் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களின் வாகனங்கள் உட்பட பலவற்றை நிறுத்தியும் சோதனை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் இன்று (ஏப்.7) கேரளாவில் இருந்து திருச்சி நோக்கி காரில் வந்துக்கொண்டிருந்தார். அப்போது திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மஞ்சு வாரியர் காரை நிறுத்திய தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். நடிகையின் காரை … Read more

விஜய்யின் அம்மா ஷோபாவிடம் ஆசீர்வாதம் பெற்ற வனிதா விஜயகுமார்!

விஜய் நடித்த சந்திரலேகா என்ற படத்தில்தான் வனிதா விஜயகுமார் அறிமுகமானார். அதன் பிறகு மாணிக்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், சமீப காலமாக குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பார்த்திபன் இயக்கியுள்ள டீன்ஸ் படத்தின் இசை விழாவுக்கு வந்திருந்த விஜய்யின் தாயாரான ஷோபா சந்திரசேகரனுடன் தான் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள வனிதா விஜயகுமார், ஷோபா ஆன்ட்டியை நீண்ட இடைவெளிக்கு பிறகு டீன்ஸ் படத்தின் இசை விழாவில் பார்த்தேன். அவரது அன்பான … Read more

கார்த்திக் சுப்பராஜ் படத்திற்காக குதிரை சவாரி பயிற்சியில் ஈடுபட்ட சூர்யா!

சிறுத்தை சிவா இயக்கத்தில் ‛கங்குவா' படத்தில் நடித்து முடித்திருக்கும் சூர்யா அடுத்தபடியாக சுதா இயக்கும் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு சூர்யாவின் 44வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவதாக அறிவித்தார்கள். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைய்ன்மென்ட் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஆக்சன் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்திற்காக தற்போது குதிரை சவாரி செய்யும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் சூர்யா. … Read more

செவ்வந்தி தொடரில் என்ட்ரி கொடுக்கும் நக்ஷத்திரா!

ஜீ தமிழ் சேனலில் யாரடி நீ மோகினி தொடரில் நடித்து பிரபலமான நடிகை நக்ஷத்திரா, திருமணத்திற்கு பிறகு சீரியலில் நடிக்காமல் இருந்தார். கடந்த வருடம் நக்ஷத்திராவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அவர் தற்போது மீண்டும் சீரியல் நடிக்க தொடங்கியுள்ளார். செவ்வந்தி தொடரில் திவ்யா ஸ்ரீதர், சிவான்யா ப்ரியங்கா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் வில்லி கதாபாத்திரம் திருந்திவிட்டது போல் கதையை நகர்த்தி வருகின்றனர். அதேசமயம் புதிய கதாபாத்திரத்தில் என்ட்ரி … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் லாவண்யா கேஷுவல் கிளிக்ஸ்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் லாவண்யா. அடிப்படையில் மாடலான இவர் பல அழகி போட்டி மேடைகளில் ராம்ப் வாக் செய்துள்ளார். தற்போது சீரியல் எதிலும் கமிட்டாகாமல் இருக்கும் லாவண்யா மேக்கப் எதுவும் இல்லாமல் தனது கேஷுவலான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மேக்கப் இல்லாமலேயே லாவண்யா இவ்வளவு அழகா? என ரசிகர்களும் லாவண்யாவின் அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

ரஜினி 171 வது படத்தில் இணையும் நடிகர்-நடிகைகள்!

வேட்டையன் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171 வது படத்தில் நடிக்க போகிறார் ரஜினி. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியான நிலையில், ஏப்ரல் 22ம் தேதி டைட்டில் வெளியாகிறது. இந்த நேரத்தில் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்- நடிகைகள் குறித்த ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதில், ஏற்கனவே பேட்ட படத்தில் ரஜினியுடன் ஒரு சிறிய ரோலில் நடித்த திரிஷா, தளபதி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஷோபனா மற்றும் ராகவா லாரன்ஸ், … Read more

கோட் படத்திற்காக விஜய்யுடன் இணைந்து பாடிய வெங்கட் பிரபு

விஜய் நடிக்கும் கோட் படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு, பெரும்பாலான படப்பிடிப்பை முடித்துவிட்ட நிலையில் தற்போது இறுதிகட்டப் படப்பிடிப்பை நடத்துவதற்காக துபாய் சென்றுள்ளார். விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஒரு பாடலை வெங்கட்பிரபுவும் பின்னணி பாடியிருக்கிறார். இந்த பாடல்தான் கோட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியாகும் என்கிறார்கள். மேலும் இளையராஜா இசையில் … Read more

கனவை நினைவேற்றிய வீஜே மணிமேகலை

சின்னத்திரை தொகுப்பாளினியான வீஜே மணிமேகலை, குக் வித் கோமாளி சீசன் 5-ல் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கிடையில் தனது கனவு வீட்டை நீண்ட நாட்களாக கட்டி வரும் மணிமேகலை தற்போது மிகவும் எளிமையாக கிரகப்பிரவேசத்தை முடித்துள்ளார். இதனை தனது யு-டியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டுள்ள அவர் 'எனது கனவு வீடு பிரம்மாண்டமாக இருக்கும். இது பக்கத்தில் கட்டிய பார்ம் ஹவுஸ். இருந்தாலும் இதுதான் நாங்கள் முதலில் கட்டிய வீடு' என்று … Read more