6 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்த தனுஷ் – ஜி.வி.பிரகாஷ்

தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமாகி அதன்பிறகு இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் வலம் வந்து கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். தற்போது அவர் நடித்து இசையமைத்துள்ள கள்வன் என்ற படம் திரைக்கு வந்துள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இவானா நடிக்க, பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், தனுஷ் உடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரிடத்தில் 6 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்ததாக தெரிவித்திருக்கிறார். நாங்கள் இருவரும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்ததால் இது போன்ற சண்டை … Read more

விபத்தில் சிக்கிய அருந்ததி நாயர் : சிகிச்சைக்கு உதவி கேட்கும் குடும்பத்தினர்

தமிழில் பொங்கியெழு மனோகரா, சைத்தான் போன்ற படங்களில் நடித்தவர் மலையாள நடிகை அருந்ததி நாயர். கடந்த மாதம் இவர் தன்னுடைய சகோதரருடன் பைக்கில் சென்றபோது வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டது. அதில் தூக்கி வீசப்பட்ட அருந்ததி நாயர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது கோமாவில் இருக்கும் அவருக்கு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மூன்று வாரங்களாக சிகிச்சை அளித்து வருகிறார்கள். தினமும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் நாள் ஒன்றுக்கு … Read more

பிரபுதேவாவின் பிறந்தநாள் பரிசாக போஸ்டர் வெளியிட்ட கத்தனார் படக்குழு

மலையாளத்தில் நடிகர் ஜெயசூர்யா நடிப்பில் வரலாற்றுப் பின்னணியில் உருவாகி வரும் படம் கத்தனார். இந்த படத்தில் ஜெயசூர்யா ஒரு துறவி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரது படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது. இதில் இரண்டு ஆச்சரிய விஷயங்கள் என்னவென்றால் பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் முதன்முறையாக மலையாளத் திரை உலகில் அடியெடுத்து வைத்துள்ளார் நடிகை அனுஷ்கா. யட்சி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அனுஷ்கா. இது தவிர … Read more

“ஒரிஜினல் மலையாள படம்” : ஆடுஜீவிதத்தை பாராட்டிய ஜெயமோகன்

மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் பிளஸ்சி இயக்கத்தில் உருவான ஆடுஜீவிதம் திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அரபு நாட்டில் ஆடு மேய்க்கச் சென்று பல சிரமங்களை சந்தித்த ஒரு இளைஞனின் வாழ்க்கையை மையப்படுத்தி எழுதப்பட்ட ஆடுஜீவிதம் என்கிற நாவலை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் மேக்கிங்கிற்காகவும் பிரித்விராஜின் நடிப்பிற்காகவும் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி தமிழிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் … Read more

ஹிருதயம் படத்தில் லோகேஷ் கனகராஜை நடிக்க அழைத்த வினீத் சீனிவாசன்

தமிழ் சினிமாவில் கடந்த 10 வருடங்களில் ஐந்து படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடித்து விட்டவர் லோகேஷ் கனகராஜ். சமீபத்தில் ஸ்ருதிஹாசன் உருவாக்கி வரும் இனிமேல் என்கிற இசை ஆல்பத்தில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக ஒரு நடிகராகவும் மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். ஸ்ருதிஹாசனுடனான நெருக்கமான காட்சிகளில் இவர் நடித்திருக்கும் புகைப்படங்களை பார்க்கும்போது லோகேஷ் கனகராஜுக்குள் இப்படி ஒரு நடிகனா என பலரும் ஆச்சரியப்பட்டனர். ஆனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே மலையாளத்தில் வெளியான ஹிருதயம் … Read more

லொள்ளு சபா ஆண்டனியின் பரிதாப நிலை

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அண்மையில் லொள்ளு சபா நடிகர்களின் ரீ-யூனியன் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், லொள்ளு சபா நடிகர்களில் ஒருவரான ஆண்டனி மட்டும் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், 'சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று போராடினேன். ஆனால் நான் ஆஸ்துமா பிரச்னையால் பாதிக்கப்பட்டேன். தொடர்ந்து இடுப்புக்கு கீழ் நீர்கோர்த்து நடக்க முடியாமல் போனது. என்னால் சாதரணமாக மற்றவர்களை போல் படுத்து தூங்க … Read more

'எனது ஸ்டார்' : அப்பா பற்றி விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி

தெலுங்கு சினிமா ரசிகர்களை மட்டுமல்லாது மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்துள்ள 'பேமிலி ஸ்டார்' படம் இன்று திரைக்கு வந்துள்ளது. தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாகும் இப்படத்திற்காக சென்னை வந்து கூட புரமோஷன் செய்தார் விஜய் தேவரகொண்டா. இப்படத்திற்காக சமூக வலைத்தளங்களிலும் தனியாக பதிவிட்டு வருகிறார். நேற்று 'எனது ஸ்டார்' என அவரது அப்பா பற்றி நெகிழ்ச்சியாகப் பதிவிட்டு, சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். “வாழ்க்கை என்பது முழுவதுமாக மேடுகளும் பள்ளங்களும் நிறைந்தது. ஆனால், … Read more

லோக்கல் டிரையினில் பயணிக்கும் ரித்திகா சிங்

நடிகைகள் என்றாலே அவர்கள் வேறு ஒரு உலகத்தில் பயணிப்பவர்கள் என்ற எண்ணம்தான் பலருக்கும் இருக்கும். ஆனால், ஒரு சிலர் மட்டும்தான் இயல்பான வாழ்க்கையை வாழ்பவர்களாக இருப்பார்கள். தங்களது பிரபலத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு மக்களோடு மக்காளகவும் பயணிப்பார்கள். அப்படி ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார் 'வேட்டையன்' நடிகை ரித்திகா சிங். மும்பையில் நெருக்கடியான லோக்கல் டிரையினில் பயணித்துள்ளது குறித்து பதிவிட்டுள்ளார். “எனது ஹேன்ட்பேக்கில் நிறைய கீ செயின்கள் இருப்பதை அந்த பையன்கள் பார்த்து இன்னும் கூடுதலாக சேர்த்துவிட்டார்கள். அவர்களுக்கு … Read more

சென்னையில் 'புஷ்பா 2' டீசர் வேலைகள்…

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா 2'. ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டீசர் ஏப்ரல் 8ம் தேதியன்று அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக உள்ளது. டீசருக்கான பின்னணி இசைக் கோர்ப்பு வேலைகள் தற்போது சென்னையில் உள்ள தேவிஸ்ரீ பிரசாத் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. இயக்குனர் சுகுமார், அல்லு அர்ஜுன், தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோர் அந்த ஸ்டுடியோவில் … Read more

அருண் விஜய்க்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்

நடிகர் அருண் விஜய் தற்போது பாலா இயக்கத்தில் நடித்துள்ள 'வணங்கான்' படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. அடுத்து, மான் கராத்தே, கெத்து போன்ற படங்களை இயக்கிய திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இது இவரின் 36வது படமாகும். பி. டி. ஜி பிலிம்ஸ் என்கிற நிறுவனம் தயாரிக்கின்றனர். இதன் பூஜை நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படப்பிடிப்பை துவக்கி வைத்தார். அருண் விஜய்க்கு ஜோடியாக தன்யா … Read more