அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி

தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கிய அட்லி ஹிந்தியில் ஷாரூக்கானை வைத்து 'ஜவான்' என்ற மாபெரும் வெற்றி படத்தை தந்தார். அடுத்து அல்லு அர்ஜூனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இயக்கம் மட்டுமின்றி படங்களும் தயாரிக்கிறார் அட்லி. தனது தயாரிப்பு நிறுவனமான 'ஏ பார் ஆப்பிள்' என்ற நிறுவனத்தில் தமிழில், ‛சங்கிலி புங்கிலி கதவ தொற' என்ற படத்தை தயாரித்தார். தற்போது ஹிந்தியில் ஒரு படம் தயாரிக்கிறார். அடுத்து தமிழில் ஒரு … Read more

பஞ்சதன் ஸ்டுடியோவை உருவாக்கிய எம்மி பால் மறைவு : ஏஆர் ரஹ்மான் இரங்கல்

இந்திய சினிமாவை தாண்டி ஆஸ்கர் வரை வென்று சாதித்தவர் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஏஆர் ரஹ்மானின் இசைக்கு பெரும் பங்காற்றியது அவரது பஞ்சதன் ஸ்டுடியோ. இந்த ஸ்டுடியோவில் இருந்து அவரின் சினிமா பயணம் றெக்க கட்டி பறக்க ஆரம்பித்தது என்று சொல்லலாம். இந்த ஸ்டுடியோவை உருவாக்கியவர் எம்மி பால், 74. உடல்நலக்குறைவால் இவர் நேற்றுமுன்தினம் சென்னையில் காலமானார். எம்மி பால் மறைவுக்கு இசையமைப்பாளர் … Read more

‛விடாமுயற்சி' அஜித் எடுத்த ரிஸ்க் : மேக்கிங் வீடியோ வெளியீடு

மகிழ்திருமேனி இயக்கத்தில் ‛விடாமுயற்சி' படத்தில் அஜித் நடித்து வருகிறார். அவருடன் த்ரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடக்கிறது. தற்போது படத்திற்கு பிரேக் விட்டுள்ளனர். இதனால் அஜித் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். விடாமுயற்சி படம் பற்றி நிறைய நெகட்டிவ்வான செய்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக படம் டிராப், படம் இப்போதைக்கு வராது என்கிற மாதிரியான செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை அஜித்தின் மேலாளர் … Read more

டேனியல் பாலாஜியின் கடைசி படம் : தயாரிப்பாளர் உருக்கம்

சமீபத்தில் மறைந்த டேனியல் பாலாஜி நடித்த கடைசி படம் 'பிபி 180'. இந்த படத்தில் அவர் வில்லனாக நடித்துள்ளார். அதுல் இந்தியா மூவீஸ் சார்பில் போஸ்மியா தயாரித்துள்ளார். ஜேபி இயக்கியுள்ளார், ஜிப்ரான் இசை அமைக்கிறார். கே.பாக்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், நைனி சாவி உள்பட பலர் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் போஸ்மியா கூறியிருப்பதாவது : உங்களது இந்த திடீர் மறைவு சினிமா உலகில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் திறமை, ஆர்வம் மற்றும் உங்கள் கதாபாத்திரத்திற்காக நீங்கள் கொடுத்த … Read more

இயக்குனரான தொகுப்பாளர்

சின்னத்திரையில் நட்சத்திர தொகுப்பாளராக பணியாற்றிவர் ஆடம்ஸ். சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்தும் உள்ளார். அவர் தற்போது 'கேன்' என்ற படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார். ஷோபனா கிரியேசன்ஸ் சார்பில், கருணாநிதி தயாரிக்கிறார். இப்படத்தில் பிரணவி மனுகொண்டா, ஹேமந்த் மேனன், அக்ஷரா ராஜ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, கலையரசன், யாஷிகா ஆனந்த், தம்பி ராமையா, ரோபோ சங்கர், கோவை சரளா, கருணாகரன், மாறன், ஸ்ரீமன், க்ஷிஜிக்ஷி கணேஷ், கௌசல்யா, ரெடின் கிங்ஸ்லி, நாஞ்சில் விஜயன், ஆகியோர் முக்கிய … Read more

தில் ராஜூ தயாரிப்பில் தனுஷ்?

தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜூ. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களைக் தயாரித்து வருகிறார். கடந்தாண்டு முதல் முறையாக தமிழில் நடிகர் விஜய்யை வைத்து 'வாரிசு' என்கிற படத்தை தயாரித்தார். தற்போது விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர் நடிப்பில் ‛தி பேமிலி ஸ்டார்' என்ற படத்தை எடுத்துள்ளார். நாளை தெலுங்கு மற்றும் தமிழில் இந்தப்படம் வெளியாகிறது. இந்நிலையில் வாரிசு படத்திற்கு பின் மீண்டும் ஒரு தமிழ் படத்தை எடுக்க … Read more

பிளாஷ்பேக் : பாடல்கள் மட்டும் வண்ணத்தில் தயாரான படம்

சினிமா கருப்பு வெள்ளையில் இருந்து கலருக்கு மாறிக் கொண்டிருந்த காலத்தில் கலரில் படம் எடுத்தால் அது பெரிய பட்ஜெட் படம், கருப்பு வெள்ளையில் படம் எடுத்தால் அது சிறு பட்ஜெட் படம் என்பதாக கருதப்பட்டது. எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள் கலரில் தயாராகும்போது ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் படங்கள் கருப்பு வெள்ளையில் வெளியாகும். இப்படியான ஒரு காலகட்டத்தில் மிகவும் சிக்கனமாக படம் எடுப்பவர் என்று பெயர் பெற்றிருந்த முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1975ம் ஆண்டு வெளியான 'அந்தரங்கம்' படத்தில் … Read more

ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு மோகன்லால் பட நடிகர் மரணம்

மோகன்லால் நடிப்பில் வெளியான புலி முருகன் மற்றும் என்னும் எப்பொழும் உள்ளிட்ட படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்தவர் வினோத். இவர் மம்முட்டி நடித்த கேங்ஸ்டர் படத்திலும் அவருடன் கூடவே வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேசமயம் இவர் தென்னிந்திய ரயில்வேயில் டிக்கெட் பரிசோதனை அதிகாரியாகவும் அரசு வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா சென்ற ரயிலில் பணியில் இருந்த வினோத், ஒடிசாவை சேர்ந்த டிக்கட் இல்லாமல் பயணித்த ஒரு பயணியை … Read more

'கோட்' பட வாய்ப்பை கோட்டை விட்டேன் : வினீத் சீனிவாசன்

மலையாள திரையுலகில் கடந்த 15 வருடங்களாக இயக்குனர், நடிகர் தயாரிப்பாளர், பாடகர் என பன்முக திறமையுடன் வெற்றிகரமாக வலம் வருபவர் வினீத் சீனிவாசன். பிரபல மலையாள குணச்சித்திர நடிகர் சீனிவாசனின் மகனான இவர் சீரான இடைவெளியில் குறிவைத்து வெற்றி படங்களை இயக்குவதில் வல்லவர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு 'ஹிருதயம்' என்கிற வெற்றி படத்தை கொடுத்த இவர் தற்போது 'வருஷங்களுக்கு சேஷம்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். வரும் ஏப்ரல் 11ம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தில் … Read more

பயன்படுத்திய சேலைகளை விற்று உதவிய நவ்யா நாயர்

தமிழில் 'அழகிய தீயே' படம் மூலமாக அறிமுகமானவர் மலையாள நடிகை நவ்யா நாயர். தொடர்ந்து சேரனுடன் மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மலையாளத்தில் அதிக அளவில் படங்களின் நடித்து வந்தார். திருமணத்திற்கு பிறகு பத்து வருடங்கள் பெரிய அளவில் படங்களில் நடிக்காத அவர் தற்போது மீண்டும் மலையாள படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் தனது சோசியல் மீடியா பக்கம் மூலமாக ஒரு வீடியோ வெளியிட்டு இருந்த நவ்யா நாயர் … Read more