நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார்

'நேர்கொண்ட பார்வை' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கிஷன் தாஸ். யு டியூப் மூலம் புகழ்பெற்ற இவர், சின்னத்திரை நடிகை பிருந்தாவின் மகன். அதன்பிறகு தர்புகா சிவா இயக்கத்தில் வெளியான 'முதல் நீ முடிவும் நீ' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சமீபத்தில் வெளியான 'சிங்கப்பூர் சலூன்' படத்திலும் நடித்திருந்தார். 'சிங்க்' என்ற வெப் தொடரிலும் நடித்தார். தற்போது தருணம், ஈரப்பதம் காற்று மழை படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கிஷன் தாஸ் தனது நீண்ட … Read more

தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்!

தனுஷ் இயக்குனராக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்கிற படத்தை தனது மூன்றாவது படமாக இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக அவரது அக்கா மகன் பவிஷ் நடிக்கிறார். அவருடன் இணைந்து அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர் . ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை வுன்டர்பார் பிலிம்ஸ், ஆர். கே. புரொடக்சன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இதன் பெரும்பாலான படப்பிடிப்பு … Read more

தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி!

2019ம் ஆண்டு ஹிந்தி சினிமாவில் அறிமுகமான மீனாட்சி சவுத்ரி, அதன்பிறகு தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். 2023ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடித்த கொலை படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன்பிறகு ஆர்.ஜே.பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‛கோட்' படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது குடும்பத்தாருடன் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்த மீனாட்சி சவுத்ரி, அங்கு ஒரு … Read more

விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம்

இலங்கையில் செயல்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பற்றி ஏராளமான படங்கள் வந்திருக்கிறது. அதேபோல வானொலி அறிவிப்பாளராக பணியாற்றிய இசைப்பிரியா பற்றியும் படங்கள் வந்திருக்கிறது. தற்போது இந்த அமைப்பின் அடுத்த கட்ட தலைவர்கள் பற்றிய படம் தயாராகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தளபதியாக இருந்த பிரிகேடியர் பால்ராஜ் மற்றும் பிரிகேடியர் தமிழினி ஆகியோர் வாழ்க்கையை மையமாக வைத்து 'செஞ்சமர்' என்ற படம் தயாராகிறது. இதில் ஜெகநாதன், முருகன், பகலவன், குட்டி ராதிகா, சாக்ஷி அகர்வால், மைம் … Read more

மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்'

கடந்த 2014ம் ஆண்டு வெளியான படம் 'அஞ்சான்'. லிங்குசாமி இயக்கியிருந்தார் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் அவரே தயாரித்திருந்தார். இந்த படத்தில் சூர்யா, சமந்தா, வித்யூத் ஜம்வால், சூரி, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இந்த நிலையில் படத்தை மறு வெளியீடு செய்யும் முயற்சிகள் நடந்து வருகிறது. படத்தில் முன்பு செய்த தவறுகளை சரி செய்து இயக்குனர் … Read more

வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர்

'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' இயக்குனர் கோகுல் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதாவது கொரோனா காலகட்டத்தில் சிம்புவை வைத்து ‛கொரோனா குமார்' என்கிற படத்தை இயக்குவதாக அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் அதன் பிறகு அந்த படம் வெறும் அறிவிப்பாகவே நின்று விட்டது. இந்த நிலையில் சிம்புவுக்கு பதிலாக அந்த படத்தில் விஷ்ணு விஷால் நடிக்கிறார் என்றும் அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த படத்தின் டைட்டிலில் சிறிது மாற்றம் செய்து 'வைப் குமார்' என புதிய டைட்டில் வைத்துள்ளதாகவும் … Read more

பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி

தில்லானா மோகனாம்பாளின் அம்மா வடிவாம்பாளை யாராலும் மறக்க முடியாது. வெடி பேச்சும், தெனாவெட்டு உடல் மொழியும், அவ்வளவு எளிதில் மறக்ககூடியதுமல்ல. அந்த காலத்திலேயே வில்லி வேடங்களில் கொடி கட்டிப் பறந்தவர். 1945ல் வெளியான 'என் மகன்' படத்தில் அறிமுகமாகி 1998 வரை 1948ம் ஆண்டு வரை தொடர்ந்து நடித்தார். எம்.என்.நம்பியாருடன் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். இருவரும் 'மேட் பார் ஈச் அதர்' ஜோடியாக அப்போது திகழ்ந்தார்கள். ஆனால் இருவரும் வில்லத்தனமான ஜோடிகள்.ராஜகுமாரி, மாங்கல்ய பாக்கியம்,சோப்பு சீப்பு … Read more

அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ

கடந்த வருடம் அனுஷ்கா நடிப்பில் தெலுங்கில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி என்கிற படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான நவீன் பாலிஷெட்டி. இந்த படத்தின் மூலம் ரசிகர்களிடம் இன்னும் பிரபலமானார். இவர் தற்போது அடுத்ததாக 'அனகனகா ஒக ரோஜா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் பகுதியில் பைக் ஓட்டி சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராமல் … Read more

சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்!

சின்னத்திரை நடிகை அக்ஷிதா நந்தினி, கண்ணான கண்ணே, தமிழும் சரஸ்வதியும் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். அடிப்படையில் மாடலான அக்ஷிதா இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில் அக்ஷிதாவிற்கு தற்போது ப்ரீதம் சுரேஷ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாவில் வைரலாகும் நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன்

உலகில் புகழ் பெற்று விளங்கும் பிரபல நட்சத்திரங்களுக்கு வெளிநாடுகளில் உள்ள பிரபல மியூசியங்களில் மெழுகுசிலை வைத்து பெருமைப்படுத்துவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தெலுங்கின் பிரபல முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகுசிலை தற்போது துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதற்கான அளவுகள் எல்லாம் கடந்த வருடமே எடுக்கப்பட்ட நிலையில் தற்போது இதன் திறப்பு விழா துபாயில் நடைபெற்றது. இதற்காக சமீபத்தில் தனது குடும்பத்துடன் துபாய் கிளம்பி சென்றார் அல்லு அர்ஜுன். மேடம் … Read more